August 4, 2011
வீரமாமுனிவர் 12
செம்மொழி சிற்பிகள்
மொழி பிறப்போடு அல்ல அது குணத்தோடும் உணர்வோடும் தொடர்புடையது என்பதற்கு எடுத்தகாட்டாக தமிழுக்கு தொண்டாற்றியவர். தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுராகராதியை முதலில் வெளியிட்டவர். பரமார்த்த குருவின் கதைகள் மூலம் தமிழுக்கு இன்னுமொரு அணிகலானாய் புனைவு மற்றும் நகைச்சுவை இலக்கியத்தை படைத்து முன்னோடியாக திகழ்பவர். மட்டுமல்லாமல் தேம்பாவணி ர்னும் காவியத்தை படைத்தவர் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர்.
பிறப்பு ; நவம்பர் 8 1680
இத்தாலியில் கேசுகிலியோன் இவர் பிறந்த ஊர். கான்ஸ்டான்ஸோ குசப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi,) என்பது இவரது இயற்பெயர் .தந்தை கொண்டல் போ பெஸ்கி தாயார் எலிசபெத். பதினெட்டாம் வயதிலேயே கிறிஸ்தவ மத்திற்கு தொண்டூழியம் செய்யும் நிமித்தமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெஸ்கி அதன் பொருட்டு 1710ல் முதன் முறையாக
தமிழகம் வந்து மதுரைக்குள் சேர்ந்தார்.மக்களிடம் மதத்தை பரப்ப வேண்டி தமிழைகற்றவர் அதன் வசீகரத்தில் தன்னை முழுவதுமாக இழந்து பெரும் காதலுற்றார். அதன் பொருட்டு தன் பெயரை தைரியநாதன் என வைத்துக்கொண்டார். தமிழை மேலும் அகழ்ந்தாய்வுசெய்ய ஈடுபடுகையில்தான் தைரியம் என்பது வடச்சொல் என்பதறிந்து செந்தமிழில் வீரமாமுனிவர் என திருத்திக்கொண்டார். பின் அதோடு நில்லாமல் தன் மேற்கத்திய நடை உடை மற்றும் வாழ்வியல்பண்பாடுகளை களைந்து முழுவதும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப த்ன் தோற்றத்தையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டார். 1822ல் இவருடைய வரலாற்றை முதன் முதலாக தமிழில் எழுதிய முத்துசாமிப்பிள்ளை அவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது நெற்றியில் சந்தனமும் தலையில் பட்டுக்குல்லாவும் இடுப்பில் காவியும் திருநெல்வேலி கம்பிச்சேர்மன் போர்வையை தலையிலிருந்து தோள்வழியாக உடம்பை மூடியபடி காலில் பாதகுறடு அணிந்து காண்ப்படுவார் என விவரிக்கிறார்.
குறைந்தகாலத்தில் கற்றாலும் தமிழ் மொழியின் தனிப்பண்புகளை உள்வாங்கி அதனை காலத்தால் அழியமாட்டாத படைப்புகளாக உருவாக்கிய இவரது புலமை மகாகவிகளுக்கு இணையானது. தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் .
திருக்குறளின் மகத்துவம் அறிந்து அதன் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்னாடி, செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு எண்ணற்ற அணிகலன்களை தந்து பெருமைபடுத்தியுள்ளார்.இவையனைத்திற்கும் மகுடமாக மூன்றுகாண்டங்கள், முப்பத்தியாறு படலங்கள் ,மொத்தம் 3615 விருத்தங்களுடன் அவர் இயற்றிய தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் முதற்கொண்டு திருக்காவல் கலம்பகம் மற்றும் கித்தேரி அம்மன் அம்மாணை போன்ற குறுங்காப்பியங்களையும் படைத்துள்ளார்.
திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமாமுனிவரே என ஆய்வாள்ர் கமில்சுவலபில் கூறியுள்ளார்.
இறப்பு : பிப்ரவரி 4, 1746
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
No comments:
Post a Comment