May 25, 2011

தொப்பி , துப்பாக்கி, குதிரை….............அமெரிக்க கவ்பாய் (அ)வெஸ்டர்ன் திரைப்படங்களின் வினோத கவர்ச்சி .


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சியுகம் 32


விரிந்த வானம்.. வறண்ட பொட்டல் வெளி ...இரு பக்கமும் மரவீடுகள் கொண்ட வீதி .... வானத்தில் வட்டமிடும் கழுகு ... தெருவின் ஒரு முனையில் கைகளில் துப்பாக்கியுடன் ஒருவன். .தொலைவில் அவனுக்கு .எதிரே மறு முனையில் நிற்கும் இன்னொருவன். அவன் கையிலும் துப்பாக்கி. துப்பாக்கியின் ட்ரிக்கரில் த்யாராக இருக்கும் விரல்கள் அடுத்து அங்கு என்ன நடக்க போகிறதோ என மெதுவாய் கதவிடுக்கில் எட்டி பார்க்கும் பார்க்கும் இரு ஜோடி கண்கள் ,.சட்டென ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் .. விழுந்தது யாரென பார்க்க நமக்குள் ஒரு துடிப்பு ஏற்படுகிறதல்லவா.. இதுதான் வெஸ்டர்ன் எனப்படும் அமெரிக்க பாலை வகை படங்களின் வெற்றி ரகசியம்.

ஒரு புள்ளியில் காலத்தை உறைய வைத்து அதை நுணுக்கமாக பகுத்துணரசெய்யும் இத்த்கைய காட்சி மொழிதான் வெஸ்டர்ன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கவுபாய் படங்களின் தனித்த்ன்மை.
.
வெஸ்டர்ன் என்றால் அமரிக்காவின் மேற்கு பகுதியை குறிக்கும் சொல்..அப்பகுதியின் நிலப்பரப்பையும் அம் மக்களது வாழ்வையும் ஒட்டி இப்படங்கள் எடுக்கபடுவதல் இவ்வகைபடங்கள் வெஸ்டர்ன் என்ற பெயரால அழைக்கபடுகின்றன .

இந்த வெஸ்டர்ன் கலச்சாரத்துக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிவது இப்படங்களை புரிந்துகொள்வதற்கு மேலும் வழிவகுக்கும்.

ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடான அமெரிக்காவில் பூர்வ குடிமக்களாக வசித்து வந்தவர்கள் செவ்விந்தியர்கள். வளமான கிழக்குமாகாணக்களில் முதலில் குடியேறீய ஐரோப்பியர்கள் அப்பகுதிகளில் வசித்த பூர்வகுடிமக்க்ளை விரட்டியடித்து அப்பகுதிகளை வசப்படுத்திக்கொண்டனர். .இப்படியாக அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களால் வட அமெரிக்காவின் மேற்கு .பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை காரணம் அதன் வறண்ட பாலைத்தன்மை. மிக நீண்ட சமவெளிகளும் பள்ளதாக்குகளும் மலைகளும் கொண்ட அந்த நிலங்கள் பல அமானுஷ்யங்களை தன்னகத்தே கொண்டிருந்தன.
மேலும் இப்பகுதிகளில் செவ்விந்தியர்கள் பலம் பொருந்தியவ்ர்களாக இருந்த்னர். தனியாக இப்பகுதிகளில் செல்லும் பலர் பிணமாக குதிரைகளில் திரும்பிவந்தனர் . அதுவரை ஐரோப்பியர்களுக்கு பயனளித்து வந்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் இந்த நிலத்தில் பலனளிக்கவில்லை. இதனால நீண்டகாலமாக இப்பகுதிகளில் குடியேறியதை தவிர்த்து வந்த குடியேற்ற வாசிகள் 1860க்கு பிறகுதான் மெல்ல ஊடுருவ துவங்கினர்.அதற்கு காரணம் மேற்கு பகுதிகளில் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் தங்கம் கிடைப்பதாக வெளியான தகவல் ஐரோப்பியர்களை வெறிகொள்ள வைததது. இதன் காரணமாக துணிச்சலுடன் கூட்டம் கூட்டமாக படையெடுத்த ஐரோப்பியர்கள் இதன் பொருட்டு அங்கு வசித்த பல லட்சம் பூர்வகுடிகளை கொன்று அவர்களது நிலங்களை கையகபடுத்தி அங்கேயே வசிக்கவும் துவங்கினர். குடியேற துவங்கியபின் அவர்களது உடை உணவு கலாச்சாரம் ஆகியவை மாறத் துவங்கின. கடும் குளீரையும் வெய்யிலையும் தாங்க வீடுகளை மரத்தால் நிர்மாணித்துக்கொண்டனர் .இதே காரணங்களுக்காக முரட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டனர். புழுதிக்கு கவசமாக தொப்பியும் .உடன் பாம்பு தேள் மற்றும் இதர பூச்சிகளின் தொந்தரவுக்காக இறுக்கமான முரட்டு பூட்ஸும் அணிய துவங்கினர். .தொடர்ந்த காலங்களில் ரயில் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதைகள் தந்திக்கருவிகள் ஆகியவை இப்பகுதிக்ளுக்கு இணைக்கபட இவையே இவர்களின் வாழ்வில் முக்கிய உரிப்பொருள்காகவும் மாறின. குதிரை இவர்களது நிரந்தர வாகனமாக மாறியது. பூர்வகுடிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு நிலங்களை உழுது செம்மை படுத்தி விளைநிலங்களாக மாற்றிக்கொண்டனர். வறண்ட நிலமாக இருந்த காரணத்தல் இறைச்சி உணவுக்காக காலநடைகளை குறிப்பக பசுக்களை இறக்குமதி செய்தனர். இதனால இதனை பராமரிப்பதே இவர்களது முக்கிய தொழிலாக இருந்த காரணத்தால் இவர்கள் கவ்பாய்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் எல்லோராலும் இக் காரியத்தில் முழுவெற்றி ஈட்ட முடியவில்லை . குடியேறிகள் பலருக்கு திருட்டும் வழிப்பறியும் முக்கிய தொழில்களாக இருந்தன. புதியதாக நகருக்குள் வருபவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது அங்கு தொடர்கதையாகிப்போனது. நகரை கண்காணிக்க ஷெரீப்புகள் எனும் காவல் அதிகரிகள் நியமிக்கப்ப்ட்ட்னர். ஆனால் பல காவலதிகாரிகள் தெருக்களில் அனாதைபிணமாக விழுந்துகிடக்க நேருவதும் உண்டு .

இப்படியான மேற்குநிலத்தின் புதிய வாழ்க்கை பற்றி கேள்விபட்ட கிழ்க்கு பகுதிமக்கள் அவ் வாழ்க்கையில் ஒரு வசீகரமும் கவர்ச்சியும் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டனர். இதையொட்டி சுவாரஸ்யமான பல கதைகள் புனையப்பட்டன. இச்சூழலில்தான் சினிமாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

சினிமா கண்டுபிடிக்கப்ப்ட்டு அமெரிக்கா உருவாக்கிய முதல் முழு நீள் திரைப்படமான தி கிரேட் டிரெயின் ராபரி (1903) எனும் படமே வெஸ்டர்ன் எனப்படும் இவ்வாழ்க்கையை பிரதிபலிப்பதாகத்தான் அமைந்தது. அன்று துவங்கி இன்று வ்ரை ஆண்டுதோறும் எண்ணற்ற படங்கள் இந்த வகைப்பாட்டில் அமெரிக்காவிலும் இதர நாடுகளீலும் தயாரிக்கபட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்த கலாச்சாரம் இதர நாடுகளில் இல்லாவிட்டாலும் இந்தியா உடபட பல நாடுகளில் இந்தவகையில் படங்கள் உருவாக்கப்பட்டு வருவதுதான் இந்த வெஸ்டர்ன் ப்டங்களின் வெற்றிக்கு சான்று.

நன்மைக்கும் தீமைக்குமான போர் தான் பெரும்பாலான படங்களின் கதையம்சமாக இருக்கும். தொப்பி துப்பாக்கி பூட்ஸ் என இப்படங்களுக்கென கவர்ச்சியான பிரத்யோக ஆடைகள் மக்களீடம் வெஸ்டர்ன் படங்களின் மீதான வசீகரத்தை அதிகரித்தன. வெஸ்டர்ன்படங்கள் குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிப்பதாக குறிப்பாக 1860லிருந்து 1900ம் வரையிலான காலத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. குறிப்பாக விரலால் சுழற்றும் பழைய போன்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் .அது போல தந்திகம்பங்கள் இருக்கலாம் மின்கம்பங்கள் இருக்க கூடாது. மின்சார ரயில்களும் பயன்படுத்த கூடாது. மேலும் குதிரைதான் இவர்களது வாகனம் மோட்டார்பைக்குகள் காண்பிக்க கூடது .என பல சுவாரசியமான எழுதப்படாத விதிகள்தான் வெஸ்டர்ன் படங்களின் ஈர்ப்பை தக்கவைக்கின்றன.

தொடர்ந்து எல்லா காலங்களிலும் இத்தகைய கவ்பாய் படங்கள் அமெரிக்காவில் வெளியாகிகொண்டிருந்தாலும் ..குறிப்பிட்ட இரு இயக்குன்ர்கள்தான் இவ்வகைபடங்களை அனைவரும் ரசிக்கும்படியாக வெளிக்கொணர்ந்தவர்கள்

அவர்கள் ஜான் போர்ட் மற்றும் இத்தாலிய இஅயக்குனர் . சர்ஜியோ லியோனி

இதில் ஜான் போர்ட் டின் படங்கள் கிளாசிக்கல் வெஸ்டர்ன் என்றும் சர்ஜியோ லியோனியின் படங்கள் ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என்று அழைக்கபடுகின்றன.


ஜான் போர்ட் February 1, 1894 – August 31, 1973)[1] கிளசிக்கல் வெஸ்டர்ன்.

அமெரிக்க சினிமாவின் தந்தையாக அறியப்படும் ஜான்போர்ட் குரசேவா பெர்க்மன் .மற்றும் ஆர்சன் வெல்ஸ் போன்றாரால் பெரிதும் கொண்டாடப்பட்டவர்.

1917 ல் இயக்குனராக அறிமுமான போர்ட் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தன் வாழ்க்கை பயணத்தை திரைபடங்களுக்காக்வே அர்ப்பணித்து மொத்தம் 146 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் 55 படங்கள் வெஸ்டர்ன் வகையை சார்ந்தவை .மவுனபட காலங்களில் ஜாக் போர்ட் என்ற பெயருடன் படங்களை இயக்கி வந்தவர் 1928லிருந்துதான் ஜான் போர்ட் என்ற பெயரை பயன்படுத்த துவங்கினார் . ஜான் போர்ட் இயக்கிய படங்களூள் Stagecoach, The Searchers, The Grapes of Wrath. and The Man Who Shot Liberty Valance, போன்ற வெஸ்டர்ன் படங்கள் குறிபிட்டத்தக்கவை . நான்குமுறை சிறந்த இயக்குனருக்காக இவர் ஆஸ்கா விருதை பெற்றிருப்பது குறிபிடத்தக்கது. பலரும் இந்த மேற்குபகுதி வாழ்க்கையைவைத்து வெறும் ஆகஷ்ன் படமாக எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இவர் அந்நிலப்பரப்பின் அழகையும் மக்களது வாழ்வையும் தனது படங்களில் காட்சிபடுத்தியிருந்தார்.

அதே போல கிளசிக்கல் வெஸ்டர்ன் காலத்தில் அதிகபடங்களில் நாயகனாக நடித்த பெருமைக்குரிய நடிகர் ஜான் வாய்னே

செர்ஜியொ லியோனி (January 3, 1929 – April 30, 1989) ஸ்பாகட்டி வெஸ்டர்ன்

அமெரிக்கா அல்லாத இத்தாலிய இயக்குனர்களாலும் மற்றும் இதர ஐரோப்பிய தொழில் நுட்ப இயக்குனர்களலும் உருவாக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்கள் தான் . ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதன் மத்திய பகுதிகள் சில இடங்கள் அமெரிக்காவின் மேற்கு பகுதியை போன்றே நிலப்பரப்புகள் அதிகமிருந்த்ன .இதன் பொருத்தபாட்டில் இத்தாலிய இயக்குனர்கள் உருவாக்கிய படங்களே ஸ்பாகட்டி வெஸ்டர்ன். என்றழைக்கப்பட்டன. இன்று உல்கம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வெஸ்டர்ன் படங்கள் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்களே.

மேலும் இன்று வெஸ்டர்ன் படங்கள் உல்கம் முழுக்க பரவலான பார்வையாளர்களையும் தனித்த ரசைகர்களையும் பெற்றிருக்கிறதென்றல் அத்ற்கு காரணமான ஒரே இயக்குனர் செர்ஜியோலியோனிதான். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மொத்தம் ஆறு மட்டுமே . A Fistful of Dollars; For a Few Dollars More; The Good, the Bad and the Ugly Once Upon a Time in the West; Duck, You Sucker!; and Once Upon a Time in America. இவை யனைத்துமே ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்கள். இவையனைத்துமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றளவும் புதிய பார்வையாளர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற்ன என்பதும் இதில் குறிப்பிடத்தக்க விடயம்.

இத்தாலியின் த்லைநகரான ரோமில் பிறந்த லியோனின் ஒரு அதிர்ஷ்டக்காரர். காரணம் பிறக்கும்போதே சினிமா அவருக்கு ரத்தினகம்பளம் விரித்து தந்தது. தந்தை மவுன படங்களீன் இயக்குனர். தாயார் ஒரு நடிகை. மட்டுமல்லாமல் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனைத்து படங்களுக்கும் உல்கபுகழ்பெற்ற படங்கள்

விட்டோரியா டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் ப்டத்தில் பணிபுரிந்தவர் அத்னை தொடர்ந்து இத்தாலிய அமெரிக்க கூட்டுத்யாரிப்பில் உருவான பிரம்மாண்ட படங்களான குவாடிஸ் மற்றும் பென்ஹர் ஆகிய ப்டங்களீலிம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.


லியோனின் படங்களது பெரு வெற்றிக்கு காரணம் இருவர். அதில் ஒருவர் இவரது வகுப்புதோழன். அவருக்கும் இவரை போலவே திரைப்படத் துறையில் மிகுந்த ஆரவம் . அதிலும் குறிப்பாக இசைதுறையில் ...
நான் படமெடுத்தால் நீதான் இசையமைப்பாளர் என லியோனி அப்போதே நண்பனிடம் வாக்களித்தர் .அது போலவே தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலர்ஸ் படம் இயக்க வாய்ப்பு வந்த போது தன் நண்பனை இசையமைக்க வாய்ப்பளித்தார்.. அவர் தான் உல்கபுகழ் இசையமைப்பாளரான எனியோ மரிக்கோன். திரை இசை வரலாற்றில் பல புதுமைகளை செய்வித்தவர். இன்று நம் ரசிக்கும் பல திரை இசை பாடல்களில் ஏதோ ஒன்று அவரது பாடலை அல்லது இசைக்கோர்வையை தழுவி உருவாக்கப்பட்தாக இருக்கும் அந்த அள்வுக்கு அவரது இசை உள்கம் முழுக்க பெரும் வசீகரத்தை உருவாக்கியிருக்கிறதென்றால் அது மிகை இல்லை .



இவரை போலவே லியோனின் படங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணீகள் இன்னொருவர் ஒரு நடிகர். வெஸ்டர்ன் ப்டங்கள் என்றாலே நம் ஞபகத்துவரும் முகம் அவருடைய முகமாகத்தான் இருக்கும் அவர்
லியோனியின் மூன்று படங்களில் நாயகனாக நடித்த கிளீண் ஈஸ்ட் வுட்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மிகவும் சாதரண குடும்பத்தில் பிறந்த ஈஸ்ட்வுட சினிமாவில் நடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டார்,ஆனால் அவரது கவர்ச்சியற்ற முகம் அதற்கு வாய்பளிக்கவிலை . பின் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்க அந்த தொடர் பெருவெற்றி பெற்றது . இச்சமயத்தில்தான் லியோனின் தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலரில் நடிக்க நாயகனைதேடிக்கொண்டிருந்தார் .அப்போது இத்தாலி தொலைக்காட்சிகளில் ஒரு அமெரிக்க சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் ஈஸ்ட்வுட் நடித்த சீரியல் .ஆனல் முதலில் சீரியலின் நாயகனைத்தன் லியோனின் தேர்ந்தெடுத்தார்.ஆனால் லியோனின் படம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் படப்பிடிப்பு நடக்க விருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் .அதே சமயம் என்னுடன் இன்னொருவன் நடிக்கிறான் ஆனல் அவன் முகம் சரியாக இருக்கது ஆனால் திறமையானவன் எனக்கூறி ஈஸ்ட்வுட்டை அறிமுகப்படுத்தியுள்ளர். அத்ன் மூல்மாகத்தன் கிளீண் ஈஸ்ட் வுட் தன் வெற்றி பயணத்தை துவக்கினார் .இன்று வெஸ்டர்ன் படங்கள் என்றாலே ஈஸ்ட் வுட் எனுமளவிற்கு உலகபுகழையும் அடந்துள்ளார்.

லியொனின் படங்களின் உள்ள காலபகுப்பு மிக நுணுக்கமானது . ஒரு டைட் க்ளோசப்புக்கு அடுத்து எக்ஸ்ட்ரீம் லாங்ஷாட் எனும் இவரது காட்சி பகுப்பு கணக்கு அழுத்த்மான பாதிப்பை பார்வையாள்ர்க்ளிடம் உண்டாக்கியது. வெறுமனே துப்பாக்கியை மட்டும் மையபொருளாக வைத்துக்கொண்டு அவர் பகுக்கும் காட்சி முறைமையும் காலத்தை துணிப்புகளாக காட்டும் மாயவித்தையும்தான் அவரது படங்களீன் கூடுதல் கவர்ச்சிக்கு மூல காரணம் .

1 comment:

Danny said...

வெஸ்டன் திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த அறிமுகம்...

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...