May 5, 2011
ரோஜா -சிறு கதை
ரோஜா
ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான்
குட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி செடிகள் பலவற்றை ஏற்றுவதில் பஞ்சாபி மும்மரமாக இருந்தான்
துணிக்கடைவாசலில் மிருதுளாவின் பின்னால் நிற்கிற போது துப்ப்ட்டாவை எதுவோ இழுப்பது போலிருக்க திரும்பிய பொதுதான் துப்ப்ட்டா சிக்கியிருந்த முள் செடியில் அந்த பூவை பார்த்தாள் . நல்ல சிவந்து பருது பூரித்திருந்த ரோஜா அது. மிக வித்தியாசமாக இருந்தது . செக்க செவேலென மினுமினுப்பு வேறு... தாவும் குழ்ந்தைகளின் கண்களில் பிராகசிப்பது போன்ற தொரு ஒளி
சிறிது நேரம் அதையே பார்த்த்வள் மிருதுளாவிடம் அதை காண்பித்தாள்.. ரோஜா அவளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டியது .. ஒருவேளை அப்போது காற்று பலமாக வீசியிருக்கலாம் . ஆனால் இவளுக்கு என்னவோ ரோஜா தனக்காகவே த்லையாட்டுவது போலவே பட்டது.
மிருதுளாவின் டூவீலரில் ஏறுகிறபோதுதான் அடடா அதை வாங்கியிருக்கலாமோ என எண்ணதோன்றியது. ரயிலில் பயணீக்கும் போது ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியபடி அந்த ரோஜா பயணிப்பதை போல அவளுக்கு கனவு வந்தது. கண்ணாடி முழுக்க அடர்ந்த பனி. இவள் எதுவோ ஒரு புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறாள்.சட்டென நிமிர்ந்தபோது பனியினூடே கண்ணாடியில் முகத்தை அழுத்தி உள்ளே பார்ப்பதுபோல அது பார்த்துகொண்டிருந்தது. அதன் காம்பில் எதிர் காற்றில் படபடக்கும் ஒரு பச்சை இலைதவிர வேறேதுவும் இல்லை. இவளுக்கு ஆச்சரயம் ..உள்ளே வா விழுந்துவிடப்போகிறய் என கெஞ்சுகிறாள்.ஆனால் ரோஜா ஒரு ஆணை போல புன்னகைகிறது. பின் தலையசைத்து கண்ணாடியில் முகத்தை அழுத்திக்கொண்டது. வண்டியினுள் பூவிற்கும் சிறு வணிகம் செய்யும் யாரோ ஒரு பெண் ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறாய் என முறுவளித்தாள் . கூபேயின் சகபயணிகளும் ஒரு நடனகாரர்களை போல உடலை அசைத்தபடி அரைக்கண்னால் ரோஜாவின் மையல் சொட்டும் காத்லை ரசித்தனர். இவளுக்கோ வெட்கம் ஆனாலும் ஒரு தீவிரமான உணர்வு தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் அழுத்திக்கொண்டிருந்த ரோஜாவுக்கு கண்ணாடியினூடே முத்தமிட்டாள் உடன் உடல் முழுக்க பரவும் மென்மையை அனுமதித்தாள். கடையில் பார்த்துவிட்டு ஏன் என்னை வாங்காமல் வந்தாய் ரோஜாவின் கேள்விக்கு இவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தாகூர் கார்டன் நிறுத்தம் நெருங்கி வந்ததும் ரோஜா சட்டென பின்னோக்கி வேகமாக பறக்க இவளுக்கும் அந்த அதிர்ச்சியில் கனவு கலைய தூக்கமும் முடிவுக்கு வந்தது.
ஆனால் எழுந்ததிலிருந்து மனதுக்குள் ஒரு பாரம். மிஷினிலிருந்து துணீயை எடுத்து பால்கனி ஹேங்கரில் க்ளீப் போட விடவில்லை . பாரம் மிகவும் அழுத்தியது . சோபாவில் சென்று ஈரத்துடன் படுத்துக்கொண்டாள் கனத்த மார்புகளை த்லைய்ணைக்கு அழுந்த கொடுத்தாள் .ஆனாலும் மனசுக்குள் நிம்மதியில்லை . எதற்காகவோ அலைந்தது. கடை எப்படியும் பத்து மணிக்கு மேல்தான் திறப்பார்கள் . டிசம்பர் மாதம் பனிக்காலம் வேறு. மேலும் இதற்காக மோதி நகர் வரை சென்றுவரவேண்டும்.. மிருதுளாவுக்கு போன் செய்து காலையில் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டாள் .காரணம் கேட்டபோது துர்காமந்திர் என சொல்லி சமாளித்தாள்
பஞ்சாபி பையன் அப்போதுதன் கடையை திறந்திருந்தான். மிருதுளாவுக்கோ ஆச்ச்ரயம் எதுக்கு இப்ப கோவிலுக்குதான வந்த என ஆச்சர்யப்பட்டாள். பஞ்சாபி பையனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை ..அப்போதுதான் உள்ளேயிருந்து ஒவ்வொரு தொட்டியாக வெளியில் எடுத்து வைத்துகொண்டிருந்த்வன் அவளை உள்ளேவரசொல்லி க்டைக்குள் அவளாகவே குறிபிட்ட செடியை தேடி தேர்ந்தெடுக்க அனுமதித்தான். உள்ளே வந்து பார்வையால் துழாவினாள். அந்த பூ தெரியவில்லை . எல்லாபூக்களும் பூவை போலவே இருந்தன . மிருதுளா ஸ்கூட்டியில் ஹாரனை அழுத்திகூப்பிட்டாள். இவளோ ஒவ்வொரு செடியாக தேடிபார்த்துக்கொண்டிருந்தாள்
அவன் பஞ்சாபி பையன் அவள் அருகே வந்து எந்த செடி எந்த செடி என ஹிந்தியில் அவளை கேட்டுகொண்டிருந்தான் அவளுக்குள் ஒரு பரிதாபம் வெறுமனே ரோஜா செடி என்றாள் நேற்றுதான் முப்பது ரோஜாக்களை ஒரே ஆளுக்கு விற்றதாக அவன் சொன்னான் ..மிச்சமிருந்த சிலவற்றை அவளது முகத்தருகே எடுத்து காண்பித்தபடி இருந்தான்.
ம் இது இல்லை என த்லையசைத்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து தண்ணீர் சாரை சாரையாக கொட்டிக்கொண்டிருக்க. பஞ்சாபி பையன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதுமாய் அவள் அங்கிருந்து புறப்பட்டு வாசலில் மிருதுளாவை நோக்கி செல்ல மவுனமாய் அவளது முதுகை நோக்கி புன்னகைத்த அந்த பஞ்சாபி பையன் கடையினுள் மறைத்துவைக்கப்பட்ட சில பூந்தொட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான். பின் அங்கு வந்த வேறொருவனுக்கு அந்த குறிப்பிட்ட செடியை காண்பித்து பேரம் பேசினன். பேரம் படிந்தது. அந்த புதிய ஆள் செடியை தொட்டியுடன் எடுத்து ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து க்கொண்டான். புது மலர்ச்சியுடன் அந்த ரோஜா நகரையே தன் வசப்படுத்தியபடி வாகனத்தில் ஆரோகணிக்க துவங்கியது.
சாலையில் பயணித்த் பலரும் வினோத்மான ஈர்ப்பால் துவண்டனர். வெளி எங்கும் பரவிக்கொண்டிருந்த வாசம் பலரது உள்ளத்திலும் காத்லை தருவித்துகொண்டது. சில வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. காமம் மீதுற்ற பெண்கள் சிலர் கணவனை மோகித்தனர். பின் இருக்கையில் அமர்ந்த்படி தங்களது முலைக்காம்புகளை அவர்களது தோள்பட்டையில் உரசிக்கொண்டனர் .இணையில்லதவர்கள் பெரும் துக்கத்தில் வீழ்ந்தனர் . இரண்டொரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சரிந்தன
மிருதுளாவின் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த அவள் மனதில் யாரொ அழைப்பது போலிருந்தது. அவளது இத்ழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள் .வெளியே எட்டிபார்க்க ஒரு ஸ்கூட்டர் அவளது பேருந்தை கடந்துகொண்டிருந்தது.
.
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
4 comments:
///அவளது இதழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள்///
படிக்க படிக்க.. ரசிக்க..ரசிக்க.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!
பல நூற்றாண்டுகளாய் பயணிக்கும் அந்த பூ எனக்குள் ஏதோ செய்கிறது.
நீண்ட நாட்களுக்கு பின் நல்லதோர் சிறுகதைக்கு நன்றி அஜயன்
The lines were luvly,the end could have been different
வனக்கம் நன்றி .ok,tamil words type seyaa katra pinnubu thaan comments on ur wall,till then always LIKE! vivekanandhan nishant(fb). நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!
Post a Comment