ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..!
நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையில் இவ்வளவு பெரிய ஆய்வாளராக இருப்பீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அடேங்கப்பா என்ன ஆராய்ச்சி! என்ன தத்துவம்!.
உங்கள் வலைத்தளத்தில் ஏப்ரல் 16ம் நாள் சுரேஷ் எனும் இனியர் ஆங்கிலத்தில் காந்தி குறித்து கேட்ட கேள்விக்கு
இணைப்பு:http://www.jeyamohan.in/?p=14191
தங்களின் பதில்
//
காந்தியைப்பற்றி திட்டமிட்டு பரப்பபடும் எல்லா அவதூறுகளுக்கு பின்னாலும் இந்தியாவைத் துண்டாடுவதற்கான ஒரு நோக்கம் இருப்பதைக் கவனித்தாலே இது யாரால் எதற்காக உருவாக்கப்படுகிறது என்பது புரியும். இந்த நாடு துண்டுகளாகச் சிதறினால் யார் லாபம் அடைவார்கள்?//
இத்தகைய அவதூறுகளின் விளைவுகள் நாம் நினைப்பதைவிட கடுமையானவை. நம் சூழலில் எதையும் முறைப்படி வாசித்து, தகவல்களைத் தெரிந்துகொண்டு, முடிவுகளுக்கு வரக்கூடியவர்கள் ஒரு சதம் பேர்கூட இருக்கமாட்டார்கள். மிச்சபேர் அவர்கள் முன் வைக்கப்படும் கருத்துக்களையே அபிப்பிராயங்களாகக் கொண்டவர்கள்
சமீபத்தில் அம்பேத்கார் என்றபடம் முழுக்கமுழுக்க காந்தியைப்பற்றிய அவதூறுகளுடன் ஒரு இஸ்லாமியரால் [ஜப்பார் பட்டேல்] எடுக்கப்பட்டிருந்தது. அவர் இஸ்லாம் பற்றிய பாபாசாகேபின் கருத்தை ஒரு வரியாவது தன் படத்தில் சேர்க்கும் துணிவுடையவராக இருந்தால் அவரை நேர்மையானவராக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்
இந்த பதிலை கண்டபின் தான் என் இத்தனை மலைப்பு... ஆச்சர்யம் இத்யாதி இத்யாதி..
அதிலும் என்னை பற்றி நீங்கள் தந்துள்ள தகவல்தான்
ஸ்..ஸ்ஸ் .. எப்படி சார் இது ?!
இத்தனை நாள் பிறப்பால் நான் ஒரு இந்து என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன் . என் அப்பாவும் அம்மாவும் அப்படித்தானே சொன்னார்கள் .. ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டார்களோ?
இல்லை என் அப்பா அம்மாவுக்கே கூட தெரியாத என் மதம் பற்றிய ரகசியத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?
பலே பலே பெரிய்ய்ய்ய்ய் ஆள் சார் நீங்கள்!
இது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் எனக்கு பிடிக்காத என் இயற்பெயர் பாலாஜியை கூட சூசை ஜோ மார்டின் என ஸ்டைலாக வைத்திருக்க்லாம். பாலாஜி என்ற பெயர் பிடிக்காமல் .. அஜயன் பாலா என பிற்பாடு எனக்கு நானே வைத்த பெயரையாவது மாற்றிக்கொண்டிருக்கலாம் என்ன செய்யறது உங்களூடைய இந்த அறிவுஜீவித்த்னமான கண்டுபிடிப்பு நெம்பர் 2011 அப்பொது எனக்கு தெரிந்திருக்கவில்லை
அட இத்தனை நாள் எப்படி தெரியாம போயிடுச்சேன்னு
குற்ற உணர்ச்சி வேற என்னை அரிக்கிறது
என்ன செய்யலாம் சொல்லுங்கள் ..
சரி அதை விடுங்கள்
எப்படித்தான் கண்டுபிடித்தீர்கள் நான் கிறித்துவன் என்று அதை சொல்லுங்கள்
என் நண்பன் சொல்கிறான் உங்கள் வீட்டில் ஒரு மந்திர பெட்டி இருக்கிறதாம் அதில் ஆள் பெயரை சொன்னால் அவர்களது மதம் என்ன என சொல்லுமாம்
உண்மையா சார்.. உண்மையிலேயே பெரிய அறிவாளி சார் நீங்க .. உண்மையில சார் இதை நான் தாமாசுகாக கூட சொல்லல்லை உண்மையிலயே .. நம்புங்க சார் நான் உங்க்ளை பாத்து வியக்கறேன்
சரி சார் அந்த சுரேஷ் தம்பி காந்தி பத்திதான கேட்டார் அதுக்கு ஏன் சார் என் பேரை சொல்லி பெரிய ஆள வேற ஆக்கிட்டீங்க உண்மையிலேயே நான் குடுத்துவச்சவன் சார் .. ஒரே நாள்ள என்ன பெரிய ஆளா வேற மத்திட்டீங்க
ஆனா என் பிரண்டு என்ன சொல்றான் தெரியுமா சார்
டேய் அவருக்கு பொழப்பே இதுதாண்டா .. எப்பல்லாம் பப்ளிகுட்டி குறையுதோ அப்பல்லம் யாரையாவது வம்புக்கு இழுத்து அவரு இவரை திட்ட அப்ப அடிக்கடி ஜெயமொகன் ஜெயமோகன் னு ஆயிரம் தடவை இவர் பேர் பிரசுரமவும்ல்ல அதுக்காகத்தான்னு சொல்றான் . இப்படித்தன் சாருநிவேதிதா கூட அடிக்கடி வம்பு பண்ணீனார் .. இப்ப அவரும் துக்ளக்ல எழுதி அவர் ஆளாயிட்டதால அவரை வம்புக்கிழுக்க முடியலை இப்ப உன்னை புடிக்க ஆரம்பிச்சிட்டாருன்னு சொல்றான் ..
அப்படியா சார்
அப்ப உண்மையிலயே நீங்க சண்டை போடற அளவுக்கு நான் பெரிய ஆளா சார்
எப்படி சார் உங்களுக்கு இந்த கருணை வந்தது .இந்த கருணையை கூட வியக்கறேன் சார் உண்மையிலயே நான் உங்களை வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணல ,, சீரியஸா வியக்கிறேன் >>ச்சே என்ன பெருந்தன்மை
சரி சார் உங்களுக்கு இன்னொரு தகவல்
அந்த மக்கள் தொலைக்காட்சி தொடர் நான் எடுக்கலை
அந்த தொடருக்கு வெறும் திரைக்கதை வேலை மட்டும்தான் நம்மோளடது. டைட்டில் கார்ட் கூட இப்படித்தான் போடுவாங்க
செல்லையான்னு ஒரு நண்பர்தான் மக்கள் தொலைக்காட்சிக்காக தயாரித்தார்
நீங்க அதை பாத்துருந்தா தெரிஞ்சுருக்கும் .. யாரோ சொல்றதை கேட்டு பதட்ட பட்டுட்டீங்க ..எழுதியும் பூட்டீங்க
சரி அப்படியே உண்மையிலயே நீங்க பாத்திருந்தீங்கன்னா உங்களுக்கு அதுல எதாவது ப்ரச்னைன்னா எங்கிட்ட கேட்டு எழுதலாம் அல்லது ப்ளாக்ல அதுக்கு உரிய மறுப்பு தெரிவிக்கலாம் . இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. அந்த திரைக்கதைல எழுதுனதை தான் விகடன்ல புத்தகமாவும் வெளியிட்ருக்காங்க .வாங்கிபடிங்க. படிச்சுட்டு எழுதுங்க நான் பதில் சொல்றேன் ..
அதைவிட்டுட்டு பொத்தாம் பொதுவா ஜாபர் பட்டேல் இஸ்லாமியர் அஜயன்பாலா கிறித்துவர் அதனாலதான் தொடர்ல காந்தியை விமர்சிக்கிறர்னு சொல்றீங்களே
இது எந்தவிததுல நியாயம்?
சரி ஜாபரைத்தான் அவர் பேரைவச்சு தெரிஞ்சுகிட்டீங்க
அஜயன்பாலாவை எதைவச்சு கிறித்தவன்னு முடிவுகட்டினீங்க
இப்படி விவரமில்லாம போதிய ஆய்வில்லாம பேசறதுதான் இத்தனை நாள் நீங்க எழுதுன கட்டுரைகளின் லட்சணமா.
அப்படீன்ன நீங்க இதுவரைக்கும் எழுதுன ஒட்டுமொத்த கட்டுரைகளும் வாதமும் இப்படி பொத்தாம் பொதுவா போற போக்குல எழுதப்பட்டதுன்னு நானும் முடிவுக்கு வரேன்.. மத்தவங்களும் இனியாவது தெரிஞ்சுக்கிடட்டும்
உண்மையில் நான் எல்லாமதங்களையும் மதிக்கறவன்
மதங்களை அடிப்படையா வச்சுகிட்டு மத்த மதத்தவங்க மேல இப்படி வெறுப்பை உமிழற உங்களை மாதரி ஆளுங்க எந்த மதத்தில் இருந்தாலும் அந்த மனிதர்களை வெறுக்கறேன் .
உண்மையில என் பிரண்டு ஒருத்தர் என்ன சொல்றாருன்னா
ஜெயமோகனுக்கு காந்தி ஒரு வேஷம்.. இந்த காலத்துல நேரடியா மததை ஆதரிக்க முடியாது ..எல்லாரும் விவரமாயிட்டாங்க .. இதுவேற இல்லாம ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் ன்னு மத்தவங்களுக்கும் தெரியும்.
அது தெரிஞ்சா தமிழ் நாட்டில நம்பளை யாரும் எழுத்தாளராவே மதிக்கமாட்டங்க அதனால காந்தி அதுக்கு பாதுகாப்பான இடம்னு நெனச்சி அதுல போயிருக்காருன்னு சொன்னான் .
அது ஓரளவுக்கு உண்மையாகத்தான் எனக்கும் படுது
ஏன்னா நீங்க இன்னும் இந்துமத வெறியரா இருக்கிறதுக்கு மேலே சொன்ன இந்த ஒரு பதிலே தக்க ஆதாராம்
ஏன்னா காந்தி எந்த எந்த இடதுலயும் மதத்தை காரணம் காட்டி இன்னொருத்த்னை வெறுக்கலை .. அல்லது அவங்க கருத்துக்கு மறுப்பு சொல்லலை ..
அவர் எல்லாமத்தையும் ஒண்ணா நெனச்சார்ங்கிற ஒண்ணுதன் அவர் மேல என்னை மாதிரி அவரை மறுக்கறவங்களும் ஏத்துக்கிற ஒரு நல்ல விடயம்
ஆனா நீங்க என்னை பண்றீங்கன்னா உங்க கருத்துக்கு எதிர் கருத்தாளர்கள்னு தெரிஞ்ச உடனே அவங்க வேறுமத்தவங்களாதன் இருக்கணும்னு கண்டுபுடிச்சு முத்திரை குத்தறீங்க
அப்படின்னா சொல்லுங்க ஜெயமோகன்
கிறித்துவன் முஸ்லீம்லாம் இந்தியவை துண்டடறங்கண்ணு சொல்றீங்களே இது யார் வாதம்
காந்திய வாதமா இல்லைவே இல்லை
இது நிச்சயமா ஒரு மதவெறியனோட குரல்தான்..
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க உங்க நண்பர்கள் எத்தனை பேர் முஸ்லீமா கிறித்தவரா இருக்காங்க அவங்க எல்லாரும்
இந்தியாவை துண்டாடறவங்களா?
இல்லை காந்தி மற்ற மத்துகாரர்கள்லாம் இந்தியாவை துண்டடறவங்கன்னு எங்கயாவது சொல்லியிருக்காரா அப்படி சொல்லியிருந்தா சொல்லுங்க.;
ஆனால் மாற்று மதத்தையும் மதிச்சவர்தான் காந்தி
இப்படி காந்தியவே குற்றவாளியாக்குற உங்களுக்கு காந்தியை பத்தி பேச என்னை யோக்கியதை இருக்கு
காந்திமேல நான் வைக்கிற குற்ற சாட்டெல்லாம் அவர்மேல சுமத்தப்பட்டிருக்க மகாத்மாங்கிற பிம்பம் மேல தான் .
அந்த பிம்பம் பல போராளிகளோட ரத்த சரித்தரத்தை கொச்சை படுத்தியிருக்கு.அதுக்கு அவர் காரணமா இல்லாம இருக்கலாம் அடுத்து வந்த காங்கிரஸ் கட்சி காந்தி பிம்பத்தை மூலதனமா பயன்படுத்தவேண்டி அவரை பாட புத்தகங்களில் கூடுதலா சித்தரிச்சது. அவர் மகாத்மா நாட்டுக்கு அவர்மட்டும்தான் போராடி விடுத்லை வாங்கிதந்தார்னு திரிச்சு சொல்லி பல உண்மைகளை மறைச்சு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிட்டாங்க ..
இப்ப நம்ம முன்னாடி இருக்கிற ப்ரச்னை அந்த பிம்பம்தான் அந்த பிம்பத்தை தகர்க்கிறதும் அதன்மூலமா மாற்று த்லைவர்களோட முகத்தை எப்படி முன்னுக்கு கொண்டுவருவது என்பதும் தான் என் வேலை.
சுதந்திர போராட்டத்துல உயிர்விட்ட பல லட்சம் உயிர்களும் .. காந்திங்கிற உயிரும் ஒண்ணுதான்..ஆனா காந்திமட்டும் தான் அவரது அகிம்சையால மட்டும்தான் சுதந்திரம் கிடைச்சா மாதிரி ஒரு தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கு ..அதை உடைக்க வேண்டிய முக்கியமான பணி வரலாற்றாய்வாளர்கள் முன்னாடி நெறய்யவே இருக்கு.
அதே போல .அவர் மத்த எல்லாமனிதர்களையும்போல சாதாரண மனிதர்தான்.
தன்னையும் தன் கருத்தையும் பாதுகாக்க எல்லா தந்திரத்தையும் கையாளக்கூடிய சாதாரண மனிதர்தான்.
அம்பேதர் ,பெரியார், நேதாஜி மற்ரும் பகத்சிங் ஆகியோரோட வாழ்க்கைகளின் இருண்ட பக்கங்களில் காந்தியோட முகம் ஒளிஞ்சுகிடக்கு .அதில் அவர் ஏன் மகாத்மா இல்லைங்கிறதுக்கான எல்லா ஆதாரமும் அங்கயே இருக்கு
இதை வெளிக்கொண்ர வேண்டியது உண்மையான வரலாற்று ஆய்வாளனோட கடமை .
மற்றபடி காந்திங்கிற மனிதர் கிட்ட இருந்த பல நல்லவிடயங்களை நான் மறுக்கல!.
அதை பேசறதுக்கு உலகத்துல ஆயிரம் பேர் இருக்காங்க அது என்னோட வேலை இல்லை.லைப்ரரிக்கு போனா அதிகமான புத்தகம் காந்தியைபத்திதான் இருக்கு.
மேலும் உங்களை மாதிரி மதவாதிகளுக்கும் இப்ப காந்தி ஒளிஞ்சுக்கறதுக்கு பயன்படறார்ங்கிறதுதான் அவர் செஞ்ச தவறு..
ஹேராம் ங்கிற வார்த்தையோ பகவத்கிதையோ அவர் கையில எடுக்கலைன்னா இந்நேரம் உங்களால அவர் நிழலை கூட தொட முடிஞ்சிருக்காது
மத சனாதனத்தை சுருக்கமா வைணவ சனதானத்தை காப்பாத்தறதுக்கு காந்தியோட முகம் இப்ப உஙக்ளுக்கு அவசியமா இருக்கு
அதனாலதான் அம்பேத்கர் படம் எடுத்த் ஆளை முஸ்லீம்னு சொல்லி குற்றபடுத்த முடியுது.
மத்தபடி நன் உங்களுக்கு வைக்கிற கோரிக்கையெல்லாம் முழுசா காந்தியை படிங்க படிங்க .. ஆயிரம் பக்கம் காந்தியை பத்தி எழுதறது முக்கியமில்லை.
அவரை பத்தி முழுசா புரிஞ்சுகிட்டு அவரது சில நல்ல கொள்கைகளை குறிப்பா சகிப்புத்ன்மையை உள்வாங்கிட்டு அப்புறம் ஒருபக்கம் எழுதுங்க காலத்துக்கு நிக்கும். .
அப்படியில்லாம வெறும் பகவத் கீதையையும் சத்தியசோதனையையும் மட்டும் படிச்சுட்டு தண்டியா தண்டியா எழுதறதுல எந்த அர்ததமும் இல்லை.
முதல்ல மத அடிப்படை வாதத்துலர்ந்து வெளிய வாங்க.அப்புறமா உங்களை எழுத்தாள்னா மதிக்கிறேன்
அப்படியிலன்னா எலியாகஸன் மாதிரி உங்க படைப்புகளும் காலத்துல ஒரு அவபெயரை சுமந்துகிட்டு நிக்கும்.
இதுக்கு நேர்மையான பதில் எதிர்பாக்கிறேன்
அப்படி இல்லாட்டி அந்த போஸ்டிங்கையே எடுத்துடுங்க ..
நான் அதுக்கான அர்த்ததை புரிஞ்சுக்கிறேன்.
அன்புடன்
அஜயன்பாலா
23 comments:
கீஞ்சிது போங்க அஜயன் பாலா, உங்களை பற்றி அவதூறு சொல்ல போய் தான் ஜெமோ ஹிந்துத்வாவியாதின்னு தெரிஞ்சிதா. அந்த ஹிந்துத்வா என்பதையும் நீங்க ஏன் 'விக்ஸ்' மாதிரி சுத்தி சுத்தி எழுதியிருகீங்கன்னு தான் தெரியல..
உங்களின் நியாமான குற்றச்சாட்டுக்கான பதிலை எதிர்பாக்கிறேன்!
நல்ல பதில். ஒரு போலி காந்தியவாதி, அறிவுஜீவி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கிற போலி எழுத்தாளருக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி இது.
-ஷங்கர்
ஊரு ரெண்டு பட்டா...
நண்பர் அஜயன்பாலா அவர்களுக்கு ஜெயமோஹனை நீங்கள் வெளுத்திருப்பது அருமை ,காந்தியின் பெயரில் மதவாதம் செய்யும் ஜெமோ போன்றவர்களை குட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ,நீங்கள் ஆனந்தவிகடனில் உலகத்தலைவர்களை பற்றி எழுதியதை தொடர்ந்து படித்திருக்கிறேன் ,அப்பொழுதே உங்கள் எழுத்தின் நேர்மையை ரசித்திருக்கிறேன் ,ஜெமோ போன்ற காவி ஆசாமிகளுக்கு உண்மையான வரலாற்றை சுட்டிக்காட்டிய உங்கள் தீரம் ,நையாண்டித்தனம் ,மிகவும் மெச்சிக்கதக்கது,தொடரட்டும் உங்கள்சேவை வாழ்த்துக்கள்
அதை இன்னும் நான் வாசிக்க வில்லை தோழா. இவ்வளவு நீண்ட நேரமும், உழைப்பும், இவ்வளவு வார்த்தகளும் அவருக்காகச் செலவு செய்யத் தேவை இல்லை. தூக்கி கிடாசி விட்டுப் போக வேண்டியதுதான்.
பூனைக்கு மணிகட்டியது போல நல்ல அவசியமான கட்டுரை,
ஒரு அன்பர் இப்படி கேள்வி கேட்க் அவர் எப்படி பதில் சொல்கிறார் பாருங்கள்.தூங்குபவனை எழுப்பலாம்,நடிப்பவனை எழுப்ப முடியுமா?மேனன் சாதியில் 10ல் ஒன்பது பேர் கடைந்தெடித்த ****பயல் என்று இவரின் நாவலின் கதாபாத்திரங்கள் கிண்டல் செய்கிறதே அது நியாயமா? என்றால் அது பகடியாம்,உயர் நிலை சாட்டயர் நகைச்சுவையாம்,
விளக்கத்தையும் படியுங்கள்
அன்புள்ள ஜெ,
சாதியை வைத்து பகடிசெய்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. அது சரியல்ல என்றுதான் நினைக்கிறேன்.நகைச்சுவை மூலம் மனவருத்தம் அதிகரிக்கும் என்பதுதான் என் எண்ணம். எப்படி நல்ல நிலைமைஉருவாகும் என்று சொல்கிறீர்கள்?
குமாரசாமி
அன்புள்ள குமாரசாமி
ஓர் உதாரணம். ஒருபெண்ணிடம் நீங்கள் காதலைச் சொல்கிறீர்கள். அவள் மறுத்து விடுகிறாள். அதன்பின்னரும் அவளைச் சந்திக்கவேண்டும், சேர்ந்து பணியாற்ற வேண்டும். இது ஒரு சங்கடமான நிலையை உருவாக்குகிறது இல்லையா? அதை மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். ஒன்று, முகத்தை திருப்பிக்கொள்ளலாம். இரண்டு அபப்டி ஒன்று நிகழாத மாதிரி மேலே பழகலாம். மூன்று அந்த நிகழ்ச்சியை இருவரும் சேர்ந்து பகடிசெய்து நகைச்சுவையாக ஆக்கலாம். எது மேல்? [சமீபத்தில் அலுவலக நண்பருக்கு அளித்த 'டிப்ஸ்' இது] வரலாறு அளிக்கும் சங்கடமான நிலைமைகளை மனிதர்கள் நகைச்சுவையை கொண்டே சமாளிக்கிறார்கள். அதுவே நிரூபிக்கப்பட்ட வழி
திரு. அஜயன், உங்களைப் பற்றி ஜெ. தவறான தகவலைச் சொல்லியிருந்தால் நீங்கள் அதை மறுப்புத் தெரிவித்து கண்டிக்கலாம். உங்கள் படைப்பை (தொலைக்காட்சித் தொடரின் பங்களிப்பு) விமரிசித்தால் அதை விவாதிக்கலாம், விளக்கலாம். அதுவரை நீங்கள் செய்வது சரி. மற்றபடி, 'வெறும்' பகவத் கீதையும், சத்திய சோதனையையும் படிச்சுட்டு தண்டி தண்டியா புஸ்தகம் எழுதுறார்ன்னுல்லாம் சொல்றதுக்கு, அவரை காந்தியைப் பற்றி முழ்ஹுதாகப் படியுங்கள் என்று சொல்வதற்கும் ஒரு அருகதை வேணும். தகுதி இல்லாமல் இங்கே வாய்க்கு வந்தபடி பேசும் எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில் நீங்களும் சென்று ஒட்டிக்கொள்ளாதீர்கள். இதில் உங்களை மோதவிடத் தூண்டிவிடும் 'முகமூடிகள்' மறைந்திருந்து, நமுட்டுச் சிரிப்புடன் ரசிக்கிறார்கள். உங்களைப் பற்றிச் சொல்லி ஜெ.மோ பரபரப்பு தேடிக்கொள்கிறார் என்று உங்கள் 'நன்பர்' சொல்லி, நீங்கள் அதை நம்ம்ம்ம்பி விடுவீர்கள் என்றால், எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு மறுப்புக் கடிதத்தை அனுப்பி இருந்தாலே போதும், ஜெ.மோ. வே அதை பிரசுரித்திரிப்பார் அவர் வலைப்பக்கத்தில். நீங்கள் தான் 'வெறும்' வலைப்பதிவுத் தமிழில் உங்கள் 'கருத்தை' வடிவேலு எலக்ஷன் பிரச்சாரம் செய்த மாதிரி வெளியிட்டு இருக்கிறீர்கள்.
அன்பர் பிரகாஷ் அவர்களே உங்கள் ஆலொசனைக்கு நன்றி .. நீங்கள் சொல்லும் அருகதை என்ன ..எனதெரியவில்லை அதையும் சொல்லுங்கள் எனக்கு இருக்கிறதா இல்லையா என பதிலுறுக்கிறேன்..
அய்யா கொட புடிச்சுகிட்டு போற பெரியவரே..சாரி தோள்பட்டைக்கு கீழே ஐந்து நட்சத்திரங்களோடு பிறந்தவரே,(ஒங்க ப்ரோபைல்ல இருக்குறதுதான்..),
ஜெமோ மாதிரியான ஒரு எழுத்தாளருக்கு நீங்க எழுதி இருக்குற 'ஓலகதரமான எதிர்வினை கடித'த்த படிச்சா ஒடனே எனக்கு தோணியது..
"ம்ம்-ஹீம் ... இவுரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு"... அடுத்த ஜென்மத்துல ஏதாவது வாய்ப்பு இருக்கானு பாருங்க...
நண்பர் ஜேம் வாசகன் அவர்களே
நீங்களும் இதற்குமுன் கருத்திட்ட பிரகாஷ் என்பவரும் ஒரே முகவரி அட்டையிலிருந்து வருவதை உங்கள் பெயரில் க்ளிக்கியதும் கண்டுபிடித்தேன் .
எதற்கு இந்த இரண்டுபெயர் ஏமாற்ரு வேளை .. பல நபர்கள் எனக்குஎதிராக இருப்பதான் மாயத்தை உருவாக்கவா..இதன் மூலம் இந்த கருத்துக்கு சொந்தக்காரர் யார் என்பதான் சந்தேகம் என்னுள் எழுகிறது .பல போலிபெயர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன
Unga commentsla ellam sari. Onnai thavira, adu, JM vaishnavathukku kodi pidikaraar enbadu. Avar hinduthvavyadiya irrukkalam, but he is fully opposing vaishnavism (eg, vishnu puranam, his view of Geetha being added as extra fitting in Maha bharatha).
Avar kodi pidipathellam, avarin narayana guruvirkum, avar purindu vaithirukkum advaithaithirkum thaan.
கொஞ்சம் காலத்துக்கு அடுத்துவர்களை அவதூறு செய்து சாப்பாட்டுக்கு வழி தேடலாம், காலத்திற்கும் அது கிடைக்காது ,
சந்தேகமிருந்தால் உங்களுக்கு முன் பாருங்கள் ,
எதையாவது உருப்படியாக எழுதி பிழைக்க முயலுங்கள்
jeyamohaan ia agreatwriter and wellknown personality.he does not need any publicity from anyone ,nor from anywhere.Also he apologised in his site there ends the matter.best of luck....
http://senkodi.wordpress.com/2009/03/18/ghandi-congress/
// இஸ்லாம் பற்றி அம்பேத்கார் முன்வைத்த அதே கடுமையான கருத்துக்கள்தான் காந்திக்கும் இருந்திருக்கும். காந்தி அவற்றைச் சொன்னதில்லை. - ஜெமோ//
கேப்டன் அண்ணாவின் ஆவியுடன் பேசியது போல, ஜெமோ காந்தியின் ஆவியுடன் பேசியிருப்பார் போல.
இரங்கல் கட்டுரை ஸ்பெஷலிஸ்ட் திரு. சுயபோகன் அவர்கள், ஞானபீட விருதுகளை வாரி வழங்கும் பெரும் பொறுப்பில் இருப்பதால், உங்களது நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, எங்கள் இனமானத் தமிழன் அண்ணன் சுயபோகன் அவர்கள், ஒரு குடிதாங்கி, தண்ணிடாங்கி, தண்ணிடாங்கி என்பதையும் சொல்லிவிட்டு, அன்னார் அவர் பெயரிலேயே ஒரு இரங்கல் கட்டுரை சீக்கிரம் வெளியிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படியே, எங்கள் தங்கத்தலைவர் திரு.சுயபோகன் அவர்களைப் பகைத்துக்கொண்டால், அவரது கைப்பட எழுதும் ஆயிரம் பக்க கடிதங்கள், மணிக்கொருமுறை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் என்பதையும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். எப்பேர்ப்பட்ட எதிரியையும், அவரது உடல்குறையைச் சொல்லியடிக்கும் கில்லி எங்கள் தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பேரை, காலில்லாதவன், கையில்லாதவன், சைக்கோ, மிலேச்சன், மூடன், பேதை என்றெல்லாம் எங்கள் அண்ணன், சுடுசொல் சூறாவளி, தீப்பொறி திருமுகம் சுயபோகன் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் அறிந்தால், அவரது பெயரையே நீங்கள் சொல்ல அச்சப்படுவீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். இப்போது வேண்டுமானால் எங்கள் அண்ணன் பம்பியிருக்கலாம். ஆனால், வருங்காலத்தில், கட்டாயம் என்றாவது ஒரு நாள், உங்கள் பெயரை எப்படியாவது அசிங்கப்படுத்தியே தீருவார் அன்னார் என்பதையும், அதற்காக இப்போதிருந்தே உங்களது பூர்வீகம் பற்றிய தகவல்களைத் திரட்டத் துவங்கிவிட்டது எங்கள் இலக்கிய டைனோசார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். யாருகிட்ட? இதுக்காக பாரத் பந்தே நடத்தலாம்னு குஷ்ணுபுரம் வாசகர் சதுரம் சார்புல யோசிச்சிக்கினு கீறோம் நைனா . .
உங்கள் நியாயத்தை தெளிவாகவும், உறுதியாகவும் முன் வைத்துள்ளீர்கள். ஒரு விவாதத்தில் உங்கள் தரப்பு கருத்தை வைக்கும் போது அதற்கு எதிர் கருத்தாக “நீர் இன்ன மதத்தைச் சேர்ந்தவர். எனவே இந்த உள்நோக்கத்தோடுதான் நீர் இதை எழுதுகிறீர்” என்று சொன்னவருக்கு நீங்கள் கொடுத்துள்ள பதில் மிக விரிவானதே. பொதுப் புத்தி, பொதுப் புத்தி என்று அடிக்கடி சாடும் ஜெயமோகனிடம்தான் “இஸ்லாமியன்னா இவன் இப்படித்தான், கிறிஸ்தவன்னா இவன் இப்படித்தான்” என்ற பொதுப் புத்தி, அல்லது சராசரிக்கும் கீழான சின்ன புத்தி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் அவர் உங்கள் மேலே செய்த அவதூறும், இப்போது அதற்கு அளித்துள்ள விளக்கமும்.
உங்கள் எதிர்வினையில் ஒரு கருத்தில் நான் உடன்படவில்லை. காந்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல ஜெயமோகனின் பிரச்சினை. மொத்த மனிதகுலத்தையே ஆழமாக வெறுக்கும் அவரது மனநிலைதான் பிரச்சினை. கற்பனைகள் நிறைந்த அவரது மனம் அந்த மனநிலைக்கு செய்யும் எதிர்வினையே அவரது கதைகள். அவை ஒவ்வொன்றிலும் பிரமிக்கத்தக்க மனிதநேயம் வழிந்தோடும். மாறாக, அவரது கட்டுரைகளோ பெரும்பாலும் அவரது மனநிலையை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு அவருடைய “தேர்வு செய்யப்பட்ட சிலர்” என்ற பதிவு. “சோற்றுக் கணக்கு” என்ற ஒரு அற்புதமான கதையை எழுதிய ஒரு நபர் “தேர்வு செய்யப்பட்ட சிலர்” என்ற ஒரு குப்பையை எப்படி சிந்திக்கக்கூட முடிகிறது?
அறிவுஜீவி வேசமிடும் எல்லோரும் காந்தியை அவமதிப்பதை முக்கிய கடமையாக வைத்துள்ளனர். ஆனால் முத்துராமலிங்க தேவரையோ ஜாதியை தூக்கிபிடிக்கும் தலைவர்களையோ தொட்டால் பின்விளைவுகளுக்கு அஞ்சி அந்தப்பக்கம் போவதில்லை. இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஜாதீய விழாக்களை பற்றியோ ஜாதி தலைவர்களை பற்றியோ கண்டுகொள்வது இல்லை. ஆனால் காந்திஜியை இழிவுபடுத்துவது மட்டும் அறிவுஜீவிகளின் வழியாக எண்ணி கொள்கின்றனர். அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.
அன்பு அஜயன்க்கு
ஜெய மோ நல்ல எழுத்தாளர் . நீங்கள் சொன்ன படி உள்ளுக்குள் உள்ள மத வெறி திடிரென்று வந்து விடுகின்றது. அவரை சுற்றி ஒரு காவி வட்டம் விட்டு வெளியே வர வேண்டும்.
உங்கள் பணி தொடரட்டும்
ஆசிப் தா
அன்பு அஜயன்க்கு
ஜெய மோ நல்ல எழுத்தாளர் . நீங்கள் சொன்ன படி உள்ளுக்குள் உள்ள மத வெறி திடிரென்று வந்து விடுகின்றது. அவரை சுற்றி ஒரு காவி வட்டம் விட்டு வெளியே வர வேண்டும்.
உங்கள் பணி தொடரட்டும்
ஆசிப் தா
கருந்தேள் கண்ணாயிரம் சொல்றார். ஜெயமோகன் செய்றார்.
http://www.jeyamohan.in/?p=14644
காந்தியிடமிருந்து ஜெயமோகன் எவ்வளவு கற்றிருக்கிறார் என்பதை மேற்கண்ட லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாய் வலிமையே வெல்லும்.
Post a Comment