March 20, 2022
இந்திய இசைக்குயில் - லதா - அஜயன்பாலா
நான் பால்ய காலத்தில் ஒரு தீவிர வானொலி ரசிகன் பள்ளிப் பருவம் முழுக்க வானொலி தான் என் மகிழ்ச்சியின் கருந்துளையக இருந்தது . .. காலையில் ஏழரைக்கோ என்னவோ தென்கச்சி கோ சுவமநாதன் இன்று இரு தகவல் எனும் தலைப்பில் ஒரு கதை சொல்வார் . அந்தக் கதை என்ன என கேட்டுவிட்டு காலைக்கடன் கழிக்க பின் கட்டுக்கு ஓடுவேன் குளித்து முடித்து பின் சாப்பிட்டு யூனிபார்ம் போடும் போது எட்ட்ரை மணிக்கு நேயர் விருப்பம் பாடல் துவங்கும் அதன் துவக்க இசை ”டேய் ஸ்கூலுக்கு டமயாச்சு ஓடு என நம்மை சொல்லும்”> அப்படி ஒரு சுறுசுறுப்பாக்கும் இசை . எனக்கு தெரிந்து எண்பதுகளில் பள்ளி வாழ்க்கையை துவக்கிய அனைவருக்கும், இந்த இசை வாழ்க்கையோடு கலந்துவிட்டிருக்கும். பள்ளிக்கு ஒரு கி மீட்டர் மகாபாலிபுரம் டு திருக்கழுக்குன்றம் முக்கிய சாலை யில் நடக்கவேண்டும் 20 நிமிடம் ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். வழி முழுக்க சின்னதும் பெரியதுமான கடைகள் . அதில் வானொலியில் நேயர் விருப்பம் பாடல்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே பள்ளி செல்வேன். பெரும்பாலும் புதுப் பட பாடல்கள். இளையராஜா தான் வழித்துணைவன் . மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவோம் அப்போது வானொலியில் ஆகாச் வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயனஸுவாமி . அது போல பள்ளி விட்டு மாலை .. வீடு திரும்பும் போது சாயா கீத் வழியெல்லாம் இந்தி பட பாட்ல்கள் கேட்கும்
இந்தி எனக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் பாடலை கேட்டுக்கொண்டே நடப்பேன் . எனக்கு ஒருமுறை பாடல் கேட்டல மனதில் அதன் ட்யூன் பதிந்துவிடும் .அது எந்த மொழியாகா இருந்தாலும்.
இப்படியக என் ஞாபக பெட்டகத்தில் உறைந்துகிடக்கும் அந்த பெயர் தெரியாத ப்டாலில் ஏதாவது ஒன்றை திரும்பக் கேட்க நேரும், சந்தர்பங்களில் எல்லாம் ஒரு விதமான உணர்ச்சி எனக்குள் பொங்கும். அட எனக்கு இந்த பாட்டு தெரியுமே. எனக்குள் ஒரு நீரூற்று பொங்கும் . அந்த இந்தி பாட்டை பாஷை தெரியாவிட்டாலும் என்னால் இந்த ட்யூனை அப்படியே வாயால் தத்தகாரம் போட்டு வானொலியுடன் கூடவே பாட முடியும்
இப்படி என் வாழ்க்கையில் நினைவில் பதிந்த அடிக்கடி கேட்ட இந்தி பாடல் ஆஜாரே 1957ல் வெளியான் மதுமதி படப் பாடல் . ஆனால் அந்த காலத்தில் என்ன படம் யார் பாடியது எதுவும் தெரியாது பாட்டும் குரலும் மனதை என்னவோ செய்யும்.). அட இந்த பாட்டில் என்ன இருக்கு.. ? ஆஜாரே என இழுக்கும் போது சோகமாக துவங்குகிறது . அப்படியே படிப்படியாக வேகமக துவங்கி மகிழ்ச்சியான பாடலாக மாறுகிறது இதில் எது நம்மை இழுக்கிறது . எது இந்த பாட்டை அடிக்கடி கேட்கவும் தூண்டுகிறது என யோசிப்பேன் . பிற்பாடு அந்த் ஆஜாரே பாட்டுக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு. நான் தெருவில் கிரிக்கட் விளியாடிக்கொண்டிருக்கும் போது ரேடியோவில் எப்போதவது கேட்டால் அப்படியே மட்டையை கீழே போட்டுவிட்டோ அல்ல்து தண்ணி குடிக்க வருவதாக் பொய் சொல்லிவிட்டோ வீட்டுக்கு வந்து ரேடியோவை அருகில் ஒரு காதலியை பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு அந்த் பாட்டைக் கேட்பேன் . அப்படி கேட்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை வார்ர்த்தையில்,விவரிக்க முடியாது. இடைப்ப்ட்ட நாளில் அது போலவே ஆஜாரே எனத்துவங்கும் நூரி பட பாட்டுக்கும் மதுமதி படத்தின் ஆஜாரே ப்ரதேசி பாட்டுக்கும் குழ்ப்பம் வந்து தெளிந்தது . பின் இரண்டுக்கும் ரசிகனாகிவிட்டேன்
அக்காலங்கலில் தூர்தர்ஷனில் புதன் கிழ்மை இரவு மற்றும் ஞாயிற்ருகிழ்மை காலை வாரத்தில் இரு நாட்கள் சித்ரஹார் எனும் இந்தி பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். . இக் கால்கட்டங்களில் கலர் டெலிவிஷன்கள் வந்துவிட்டாலும் எங்கள் வீட்டில் அப்போது பிளாக் அணட் ஒயிட் டிவி கூட இல்லை. அக்கம் பக்கம் வீடுகளில் ஓசியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் ஒருநாள் சித்ராஹாரை பார்க்கும் போது பல நாட்களாக என் மனதை அடகொண்ட மதுமதியின் பாட்லுக்கு திலீப்குமாரும் வைஜயந்தி மலாவும் டான்ஸ் ஆடுவதை பார்த்தேன் . அதே போல நூரிபட பாடலும் ஒருநாள் பார்க்க நேரிட்டது.
ஹீரோ வெளியாகி பட்டி தொட்டி எங்கும் அந்த் பாடல்கள் இதே காலத்தில் ஹிட்ஆனது. அதில் குறிப்பாக் ஒரு புல்லாங்குழல் இசை வரும் . அந்த் ப்டத்தின் நாயகன் புல்லாங்குழல் வைத்துக்கொண்டு அடிக்கடி வாசிப்பான் . அதனால் அந்த் பாட்டின் இசையில் புல்லங்குழ்லுக்கு ஒரு சிறப்பு உண்டு . அக்காலத்தில் அந்த இசையும் பாட்டும் தமிழ் நட்டையே ஆட்டி ப்டைத்தது . டிங் டாங் எனும் அந்த பாட்டின் துவக்த்தில் ஒரு ஆலாபனையுடன் துவங்கும் பெண் குரலுக்கு அனைவருமே மயங்கி வீழ்ந்தனர். என்றே சொல்ல வேண்டும் . அப்போது தான் நான் அதுவரை விரும்பிகெட்டு வந்த ஆஜாரே பாட்லக்ளை பாடியவரும் இந்த டிங் டாங் பாயலை பாடியவரும் ஒருவரே எனவும் அவர் பெயர் லதா மன்கேஷ்கர் எனவும் தெரிய வந்தது .
அப்படியாக லதாவின் குரலுக்கு தீவிர ரசினாகிப்போன நான் அவர் பாடிய இந்தி பாட்ல்கள் ஒவ்வொன்றுக்கும் பரம ரசிகனானேன் . அவர் வழியாகத்தான் கிஷோர் முகேஷ் அறிமுகமாகி அவர்களுக்கும் ரசிகனானேன்
மற்ற பாடகிகள் கூட குரல் இனிமையை விடவும் லதா மங்கேஷ்கரின் குரலில் என்னவிசேஷம் என்றால் அவர் பாட்லுக்கு குரலின் வழி ஆழமான அனுபவத்துள் அழைத்துச் செல்வார். . இப்போது நம் ஊர் சுசிலாமமா ஜனாகியம்மா உள்ளிட்ட இந்திய பெண் பாடகிகள் , அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே அல்லது சாதன சர்க்கம் ஷ்ரேயா கொஷல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் லதாவின் குரலில் இருக்கும் தனிப்ப்ட்ட விசேஷம் என்ன வெண்ரால் மற்றவர் பாடல்களில் கேட்கும் போது நதிக்குள் பயணிப்பது போன்ற அனுபவம் என்றால் லதாவின் குரலில் ஆழ் கடலில் பய்ணிப்பது போன்ற போன்ற அனுபவம் கிட்டும் . அவர் எந்த் பாடலை பாடினாலும் அந்த படத்தின் கதை இயக்குனர் இசையமைப்பாளர் பாடலைப் பாடும் பாத்திரம் எல்லோரும் அவருக்கு பின்னால் தான் ஒளியவேண்டி வரும். அவர் குரல் எல்லா தகவல் களையும் மறக்கச்செய்து விடும் அதுதான் லதா நிகழ்த்தும் மாயாஜாலம்
அவ்ர் பாடும் பாடலின் உணர்ச்சிகள் இலை விட்டு இலை விழும் நீர்த்துளியாக் இருந்தால் கூட போதும் அதி அருவியாக் மாற்றி நம்மி பேரனுபவத்துள் இழுத்துச்செல்வார் .
அவர் மாதுரி தீட்ஷித் படங்களுக்கு பாடிய பாட்ல்களை மட்டுமே தனியே கேட்டு பாருங்கள் குறிப்பாக தில் தோ பாகல் கை படத்தில் வரும் அதே பெயரில் துவங்கும் பாடல் பாடும் போது அவருக்கு எழுபது வயதிருக்கும் . ஆனாலும் அந்த் பாடலைக் கேட்கும் போது உங்கள் இதயத்தில் ஐச் க்ரீம் உருகி ஓட வைக்கும் மாயா ஜாலம் அவரல் மட்டுமே நிகழ்த்த முடிந்தது.
அவர் எந்த பாடலை பாடினாலும் அந்த் பாடலின் உணர்ச்சிகளை கேட்கும் இதயங்களில் விரவிக்கோண்டு அதே சமயம் நம்மை வேறு ஒரு ப்யணத்துக்குள் இழுத்துச்செல்வார் மவரது குரல் நம்மை உணர்ச்சிகளின் ஆழத்தில் பயணிக்கச்செய்யும் அதே சமயம் அவை மேலோட்டமாக் கவனித்தாலும் மற்ற அனைவரது குரலையும் விட துல்லியமாக இருக்கும் மிகதுல்லியமன குரல் என்ற அளவிலும் கூட இநதியாவின் பெஸ்ட் அவர் தான் .
இப்படி துலியம் க்ற்பனை வளம் உணர்ச்சி நிரவல் பாவம் ஸ்ருதி என எப்படி பார்த்தாலும் அவர் இந்ர்தியாவின் நைட்டிங்கேல் என்பதில் வேறு எவருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அவர் முதல் இடம் என்றால் அடுத்த 5வது இடத்தில் தான் அவருடைய போட்டியாளராக பலரும் வருவர்
ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் ] 1929 இல் பிறந்த லதா மங்கேஷகரின் அப்பா ,தீனநாத் மங்கேஷ்கர். ஒரு பாரம்பரிய பாடகர் மற்றும் நாடக நடிகர் அவரது அம்மா சுதாமதி குஜராத்திப் பெண்,
லதா மங்கேஷ்கருக்கு 13 வயதாக இருந்தபோது, அவரது அப்பா இதய நோயால் இறந்து விட அதன் பின் குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் இசை அமைப்பாளரும் திரைப்ப்ட த்யாரிப்பாளருமான விநாயக் தாமோதர் பராமரிப்பில் லதா வளரத்துவங்கினார். இசை பிண்னனி கொண்ட குடும்பம் என்பதல குரல் வளமும் பாடும் திறமையும் ஒருங்கே அவரை வளர்த்து வந்தது.. சினிமாவுக்காக் அவர் பாடிய முதல் பாடல் துரதிர்ஷட வசமாக அந்த ப்டத்திலிருந்து கடைசி நேரத்தில் இல்லமல போனது . அந்த் படம் மராத்தி திரைப்படமான கிடி ஹாசல் 1942).
அந்த் படத்தில் சதாசிவ்ராவ் நெவ்ரேக்கரால் இசையமைக்கப்பட்ட "நாச்சு யா கதே, கேலு சாரி மணி ஹவுஸ் பாரி" எனும் பாடலைத்தான் அவர் பாடியிருந்தார். பாடலோடு சேர்ந்து ஒரு சில படங்களில் அவர் நடிக்கவும் செய்தார் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும் அவருக்கு நடிப்பதில் துளியும் ஆர்வமில்லை பெரிய பாடகி ஆகவேண்டும் என்ற எண்னம் கூட இல்லை . இன்னும் சொல்லப்போனால் அவருக்கு இயல்பில் தான் மிகபெரிய புகழடைவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து பாடக் கிடைக்கும் வாயப்புகளை பயன்படுத்தி மெல்ல திரையுலகில் முன்னேறிக்கொண்டிருந்தார் . இந்த சூழலில்தான் அவருக்கு ஒரு கனவு அடிக்கடி வந்து தொந்தரவு செய்தது.
அது ஒரு , கடலோரத்தில் உள்ள கருங்கற்களால் ஆன கோவில். அந்த கோவிலில் அவர் மட்டும் தனியே இருப்பதக உணர்கிறார். சுற்றிலும் கடல் அலைகளின் சீற்றம் . அவள் தனியாக இருப்பதைக் காண்கிறாள். . அந்த கோவிலில் என்ன சாமி என்ன கடவுள் என்றும் தெரியவில்லை . அதைப் பரக்கும் ஆவலுடன் முன்னேறுகிறார் ஆனால் அதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை . இறுதியில் கோயிலின் பின்பக்கம் ஒரு க்தவு கதவை திறக்கிறார். அங்கு கல் படிகட்டுகள் கீழிறங்க அதில் கால் வைத்து இறங்க அதில் மோதும் பிரம்மாணட கடல் அலைக்குள் அவர் இறங்குகிறார் கடலின் ஆழத்தில் செல்கிறார் . சட்டென் கனவு கலைகிறது பாதியில் எழுந்துவிடுகிறர்
இப்படி ஒரு கனவு அவருக்கு அடிக்கடி வர தன் தாயாரிடம் இது பற்றி கேட்க்கும் போது இன்னும் கொஞ்ச நாளில் நீ மிகப் பெரிய புகழை அடையப் போகிறாய் என்பதாக அவர் சொன்னதகாவும் அப்படி சொன்னபோது தான் முதலில் நம்பவில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்
1949 ஆம் ஆண்டு வெளியான , மஹால் திரைப்படத்தின் 'ஆயேகா ஆனே வாலா' பாடல் தான் அவருக்கு முதல் ஹிட் . தொடர்ந்து அவருக்கு மேலும் சில பாடல்கள் ஹிட் ஆனாலும் அவர் மீது சிலர் குற்றம் குறை சொல்வதும் தொடர்ந்தது .. அக்காலத்தில் உருதுவில் எழுதப்ட்ட் வரிகலைத்தான் பாடகர்கள் இந்தி படங்களில் பாட வேண்டியிருந்தது. ஆனால் லதாவுக்கோ இந்தி தெரியாது . இதனால் வார்த்தைகளில் பல சமயம் தடுமாற்றம் வரத் துவங்கியது . அது அவருக்கு பெரிய பிரச்னையாகிப் போனது. ஒருமுறை அன்றைய சூப்பர் ஸ்டாரான திலிப்குமாரே கூட லதாவின் உருது உச்சரிப்பு சரியில்லை என் பகிரங்க மாக குற்ரம் சாட்ட பின் இதற்காக் உருது மொழியை பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டு மீண்டும் பாடத்துவங்கினார் அதன்பின் திலீப் குமாரே வியக்கும் பாட்ல்களை பாடினார் என்பதுவே வரலறு
அன்று துவங்கிய அவரது பயணம் இந்தியாவின் முன்னணி இசையமைபாளர்கள் அனைவரும் அவர் காரின் வருகைக்காக ஸ்டூடியோ வாசலில் நிற்க வைக்கும் அளவுக்கு முன்னேறியது. இக்கால கட்டங்கலில் மள மளவென புகழின் உச்சியில் ஏறினார். நவ்ஷத் துவங்கி ஏச்டி பர்மண் ல்லஷ்மிகாந்த் பியாரிலால் . ஆர் டி பரமன் இளையராஜா வரை அனைவரது அனபுக்கும் பாத்திரமானார் . நம் ஊர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அவரது குரலும் லதா அவரது நடிப்புக்கும் பரஸ்பரம் தீவிர ரசிகர்களாக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே சத்யா பட்த்தில் இளையாராஜாவுகாக வளையோசை கலகலவென் அவ்ர் குரலில் கலகத்த இளைஞர்களின் இதயங்கள் இன்றைய டூ கே கிட்ஸ் வரைக்கும் ஈர்த்துக்கொண்டுத்தான் இருக்கிறது
ஒரு பாடகி எனபதைத் தாண்டி இந்தியாவின் கலை அடையாளமாக பல நாடுகளில் அவருக்கு கிடைத்த கவுரவம் ஒரு நடிகருக்கும் கூட கிடைக்காதது . . எந்த திரை நட்சத்திரத்துக்கும் சளைக்காத புகழ் உச்சியைத்தொட்ட லதாவுக்கு , தாதா சாகேப் பால்கே விருது (1989) உட்பட எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளார் மற்றும் 2001 இல் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா உட்பட பல அசாதாரண அங்கீகாரத்தைப் பெற்றார். இத தொடர்ச்சியக அவர்து உயரங்களை நோக்கிய பயணம் கடந்த் பிர்வரி ஆறாம் தேதி வானுலகம் செல்வதுடன் ஒரு முடிவுக்கும் வந்தது
நான் அவர் இறந்த செய்தியை கடந்த பிப்ரவரி 6 ம் தேதி கேட்கும் தருணத்தில் பொன்னிற வெளிச்த்தில் சூர்யன் மயங்கும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் கேட்ட ஆஜாரே பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது.
நன்றி: பேசும் புதிய சக்தி மார்ச் 2022
இதழ்
Subscribe to:
Posts (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...