தேவதைகளின் தேவதை . ஆட்ரே ஹெப்பர்பன்
அஜயன் பாலா
உலகம் ,,முழுக்க இன்றும்
பலகோடி ரசிகர்களின் இதயத்தில் வாழும் தேவதை என்ற
புகழை பெற்ரவர்கள் மர்லின் மன்றோ எலிசபெத் டெய்லர், ஜூலியா ராபர்ட்ஸ் மெரீல்
ஸ்ட்ரீப் போன்ற ஒரு சிலர் தான் ஆனால் இந்த
தேவதைகளுகெ;ல்லாம் தேவதை ஒருவர் உண்டு என்றால்
அவர்தான் ஆட்ரே ஹெப்பர் பென். இத்தனைக்கும் இவர் இறந்து 28 வருடம் ஆகிறது ஆனாலும் இன்றும்
அவர் கொண்டாடப்ட்ட காரணம் .அவர் இதயம் . பணம் புகழ் அழகு திற்மை அனைத்தையும் விட கருணையும் அனபும் தன என அவர் வாழ்ந்து
காட்டிய விதம்
1929ல் பெல்ஜியம் நாட்டில் பிறந்த ஆட்ரே ஹெப்பர்ன் சிறு வயதிலெயே பாலே நடனத்தில் அனைவரையும் ஆ சொல்ல வைத்தார் . அந்த நடனம் அவருக்கு நாடகத்துக்கு கூட்டிசென்றது. நாடககுழுவுடன் அமெரிக்கா போனார். அங்கு விலியம் வைலர் எனும் டைரகடர் ரோமன் ஹாலிடே எனும் தான் எடுக்கப்போகும் ஒரு கனவு படத்தில் நாயகியாக நடிக்க ஒரு தேவதையை .தேடிக்கொண்டிருந்தார் . அந்த நேரம் ஆட்ரேவும் அமெரிக்காவுக்கு செல்ல அதிர்ஷ்டம் இருவரையும் சந்திக்க வைத்தது.
. 1954ல் வில்லியம் வைலர் என்ற டைரகடர் ஒரு கனவு படம் எடுக்க ஆசைப்ப்ட்டார் . அதன் பெயர் ரோமன் ஹாலிடே இத்தாலியின் ரோம் நகருக்கு சுற்றுப்பயணம் வரும் பிரிட்டிஷ் இளவரசி ராஜ கெடுபிடி பிடிக்கமால் தங்கும் விடுதியிலிருந்து இரவோடு இரவாக தப்பித்து ஊரைசுற்றிப் பார்க்க கிளம்புகிறாள் . அந்த ஊரில் அவ்ள் யாரென்றே தெரியாமல் பத்ரிக்கை இளைஞன் ஒருவனுடன் ஒரு இரவையும் பகலையும் கழிக்கிறாள். அவனும் அவ்ள் யாரென்றே தெரியாமல் அவளோடு சேர்ந்து ஒருநாள் முழுக்க அவளோடு ஊரை சுற்றுகிறான் . பிறகுதான் நாடே அவளை காணாமால் அல்லோகலப்படுவது தெரியவருகிறது . பின் காவலர்களும் அவளை அழைத்து சென்று விடுகின்றனர் . பிறகுதான் அவனுக்கு தன்னோடு ஒரு நாள் கழித்த்வள் இங்கிலாந்து இளவரசி என்பது . அவனிடமோ அவள் புகைப்படங்கள். அதுவும் உல்லாசமாக அவ்ளும் அவனும் ஊர் சுற்றிய புகைப்ப்டங்கள் ப்த்ரிக்கையில் கொடுத்தால் அவனுக்கும் புகழும் அவ்ளுக்கு அவமானமும் உறுதி . மறுநாள் இளவரசியோடு பத்திரிக்கையால்ர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு. நேற்று ஒருநாள் அவனோடு நெருங்கி ஒடி உறவாடியவள் இன்று பாதுகாப்பு வளையத்தில் அரசியாக அவன் முன் அமர்ந்திருக இவனோ கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறான் . இருவருக்குமிடையில் பார்வை மட்டுமே ஆயிரம் வார்த்தைகளுடன். அந்த ஒரு சில கணங்களில் ஆட்ரே முகத்தில் கடடும் அற்புத நடிப்புதன் சினிமா வரலாற்றில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்ககார்ண்மாக அமைந்துவிட்டது .வெறும் அழகு திறமை தாண்டி அவரிடமிருந்த பரந்து பட்ட இதயம் தான் இன்றும் அவரை உலகின் தலைசி றந்த கதாநாயாகியாக் கொண்டாட வைக்கிறது . \ உலகெங்கும் உள்ல குழ்ந்தைகள் படும் துயரங்களைக்கண்டு வருத்தமுற்றுவதை பார்த்து உலக குழ்ந்தைகள் நல அமைப்பான் யுனிசெப் அவரை சிறப்பு தூதுவராக அறிவித்து ஆபிரிக்கா தென் அமஎரிக்க என உலகில் எங்கெல்லாம் பசியாலும் நோஒயாலும் குழந்தைகள் கஷ்டப்படுகிரார்களோ அங்குல்லாம் அனுப்பி அவ்ர்களுக்கக நிதி திரடட் அனுப்பி வைத்தது
இப்படி உச்சத்தில்
இருக்கும் போதே ஒரு நாள் பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக நடிப்புக்கு முழுக்கு
பொட்டுக்கொண்டார் அத்தோடு நின்றிருந்தால் அவரும் பத்தோடு பதொன்றாக மாறியிருப்பார்
. ஆனால் அடுத்து அவர் செய்ய முடிவெடுத்த காரியம் தான் இன்றும் அவரை உலகமே நேசிக்க காரணம் . ஆம உலகம் முழுக்க
பசி பட்டினியல இறக்கும் குழந்தைகளுக்கான் சேவையில் வாழ்நாள் முழுக்க ஈடுபட நினைத்தார் . அவர் எண்ணத்தை
அறிந்த உலக குழ்ந்தைகள் நலனுக்கான் யூனிசெஃப்
நிறுவனம் அவரை தஙகள் தூதுவராக தத்தெடுத்துக்கொண்டு உலக நாடுகள் முழுக்க சுற்றுப்பயணம் அனுப்பியுது.
குறிப்பாக ஆப்ரிக்க தென் அமெரிக்க ஏழை நாடுகளுக்கு சென்று அந்த குழந்தைகளின் நலனுக்காக நிதி சேர்க்கும் பணியில் ஈடுப்ட்டார்
.கடைசியாக் சோமாலியா நாட்டு குழந்தைகளை சென்று சந்தித்துவிட்டு திரும்பியவுடன் வயிற்றில் வலி ஏற்பட்டு லாஸ் ஏஞ்செல்ஸ்
மருத்துவமனைக்கு செல்ல அவருக்குஅங்கு புற்று நோய் கண்டறியப்ப்ட்டது. ஜனரி 20 1993ல்
ஆட்ரே ஹெப்பர்பென் எனும் தேவதை தன் 63ம் வயதில் இந்த பூமியை விட்டு மறைந்தார்
. அவர் இறந்து 30 வருடங்கள் ஆகிறது இன்றும்
அவர் புகழ் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது
.உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்க:ள் இன்றும்
அவர் பிறந்த நாளை கொண்டாடி அந்த தேவதையின் புகழை பரப்பி வருகின்றனர்
நன்றி : தேவதை ஞாயிறு இணைப்பிதழ் தினத்தந்தி