இந்தியாவுக்கும்
செவ்வாய் கிரகத்துக்கும் சண்டை வந்தால் நிச்ச்யம் இந்தியாதான் ஜெயிக்கும்
எப்படி?
ஏன் தெரியுமா
செவ்வாய் கிரகத்தில் ரஜினி இல்லை
இப்படியான் ரஜினி
டைப் ஜோக்குகள் தான் பாலிவுட்டில் இப்பொது ஹாட் டாபிக்
அங்கு இரண்டுபேர்
புதியதாக சந்தித்துக்கொண்டால் முதலில் பரிமாறிக்கொள்வது ரஜினி பற்றிய இப்படியான
எஸ் எம் எஸ் ஜோக்குகளைத்தான்
இதுக்கு ஒருவகையில்
காரணம் அவர்களுக்கு ரஜினி என்ற பெயர் வயிற்றில்
உண்டாக்கும் எரிச்சலூட்டும் அமிலம் தான்
ரஜினி பற்றிய வாத
பிரதி வாத்ங்களை கடந்து அவரது எந்திரன் எனும் பொறுப்புணர்வற்ற படங்களையும்
..அரசியல் போதாமைகளையும் ரசிகர்களை மந்தைகளாக பயன்படுத்திய குற்றசாட்டுகளை கடந்து
ரஜினி தமிழர்களுக்கு அருட் கொடை
முன் மாதிரிகள்
அருகிப்போன தமிழகத்தில் ரஜினி என்ற சொல் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர்
அழுத்தம் திருத்த்மான இலச்சினை .
எளிய மனைதர்கள்கூட
சட்டென அடையாளப்படுத்திக்கொண்டு த்ங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய முன் மாதிரி அவர்.
திருக்கழுக்குன்றம்
என்ற சிறிய ஊரில் பாலாஜி என்ற பெயருடன் அவமானத்தால் சுருங்கிடந்த என்னை அஜயன்பாலாவாக விரிவுகொள்ள வைத்ததில்
அவருக்கும் முக்கிய பங்கிருப்பதால் இத்னை இங்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி
கொள்கிறேன் .
நான் மட்டுமல்ல
இம்மண்ணீண் நிறமான கறுப்பூ நிறத்தில் பிறந்த எவரும் அவரை மறுக்க முடியாது
கறுப்பான ஒருவன் இந்த
உல்கத்தில் வாழவெ தகுதியவற்றவனாக கருதப்ப்ட்ட வெட்ககேடான காலம் ஒன்றும்
தமிழ்கத்தில் இருந்தது.
என் குடும்பத்தில்
என் அம்மா அப்பா அண்ணன் த்ங்கை எல்லோரும் சிவப்பாக இருக்க நான் மட்டும் என்
அம்மாவின் அப்பாவை போல கரிய நிறத்தில் பிறந்துவிட்டேன்
அத்ற்காக நான்
சிறுவயதில் எதிர்கொண்ட அவமானங்கள் இருக்கிறதே தாங்க முடியாதவை
என் அப்பாவுக்கு
பூர்Vகம் கேரளாவேறு. அம்மா திருநெல்வேலி
வீட்டுக்கு அப்பாவின் உறவினர்கள் வந்தாலே எனக்கு பயம்
வரும். அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது . என்னிடம் பேச கூட மாட்டார்கள் . என்
அண்ணன் த்ங்கை ஆகியோரிடம் மட்டும் பாச மழை பொழியும் . அத்ன் காரணமாகவே நான்
அவர்கள் இருகும் சமயங்களில் தாமதமாக வீட்டுகு வருவேன் . என்னை ஒரு அன்னியனாக
அவர்கல் பார்பார்கள் அவர்கள் மட்டுமல்ல .. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கூட
உங்க வீட்ல எல்லாரும்
சிவப்பா இருக்காங்க
நீ மட்டும் ஏண்டா
இப்படி அட்டை கரியா இருக்கே
இந்த கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்க்கிறேன்.
அவமானத்தால் பதில்
பெசாமல் வந்துவிடுவேன்
என்ன கொடுமை என்றால்
கேட்பவர்களும் கறுப்பாகத்தான் இருப்பார்கள்
ஆனாலும் கறுப்பா
இருப்பது ஏதோ பிறவிக்குற்றம் என்பது சமுகத்தில் பொது புத்தி
மாப்பிள்லை கறுப்பு
பொண்ணு கறுப்பா
இருக்கு அத்னாலதான்
நீ மட்டும் கொஞ்சம்
சிவப்பா இருந்தேன்னு வச்சிக்கோ ராஜா மாதிரி ஒருத்தன் வந்து கொத்திகிட்டு போவான்
எம் ஜி ஆரை பாரு
என்னமா கலரு
அவன் சிவப்பா
இருக்கான் அதனால நல்லவ்ன் என வடிவேல் ஒருப்டத்தில் அடிப்பது காமடிமட்டுமல்ல 77
க்க்கு முன்பாக சமுகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக உறைந்திருந்த கருத்து இது.
இந்த பொதுபுத்திக்கு
மக்கல் தில்கம் எம் ஜி ஆரும் ஒரு
மூலகாரணம் .எம் ஜீ ஆரின் இயல்பான தயாள குணம் சிவப்பு கலருடன் முடுச்சு போடப்பட்டது
என்னமா கலரு..
கொடுத்து சிவந்த கரம் இப்படியான சொற்றொடர்கள் தமிழர்கள் மத்தியில் சிவப்பாக
இருப்பவன் நல்லவன் என்பது மாதிரியான பொலி மயக்கத்தை உருவாக்கிவிட்டதும் ஒரு கொடுமை
அவரும் தன் பங்குக்கு
கெட்டகாரியங்கள் செய்யும் குண்டுமணி போன்ற லுங்கி கட்டிய வில்லன்களை கறுப்பாக
காட்டினார். நிறத்தில் வெள்ளையாக இருந்த
நம்பியார் போன்றவர்களையும் கறுப்பு வண்ணம் பூசி கறுப்பு என்றாலே தீமை எனும் பொது
புத்திக்கு வலுவேற்றினார்
தமிழகமாவது
பரவாயில்லை வட இந்தியாவில் இன்றும் கறுப்பாக இருக்கும் ஒருவன் எந்த துறையிலும்
முன்னேறிவிட முடியாது. அத்னால்தான் மராட்டியத்தை சேர்ந்த பெங்களூரில் வளர்ந்த
ரஜினி தமிழக்த்தில் ஜெயிக்க முடிந்தது. அல்லாமல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும்
கறுப்பாக இருக்கும் ஒருவன் அன்று நடிகனாக
அறிமுகமாயிருக்க முடியாது .
இத்த்கைய சூழலில்
ரஜினியின் வருகையும் வெற்றியும் நிறம் சார்ந்த பொதுபுத்திகளை அடித்து நொறுக்கியது.
அழகு என்பது உருவத்திலிருந்து சுபாவத்துக்கு மாறியது.
அதுவரை நிறத்தால்
அவமானபட்ட பலருக்கு ரஜினி புதிய கத்வை திறந்தார் .குனிந்த த்லைகள் நிமிர தொடங்கின
கறுப்பானவர்கள்
பரட்டை தலையுடன் சட்டை பட்டனை கழட்டி விட்டுகொண்டு ஹீரோவாக உணரதுவங்கினர்
இப்படியாகத்தான் நிறத்தால் தினமும் அவமானத்துக்குட்பட்டு
வாழ்ந்த எனக்கு போஸ்டர்களில் தெரிந்த ரஜினி எனும் பிம்பம் பரவசத்தை உண்டாக்கியது.
அந்த சமயம் பலரும் அந்த நடிகனை தவறாக
சித்தரித்தார்கள். ரஜினியை ரசிப்பவர்கள் கேலிசெய்ய்ப்பட்டார்கள் .கிடத்ட்ட அப்போது
அறிமுகமான இளையராஜாவுக்கும் இதேபோல கேலிபேச்சுகள் இருந்த்ன .
தகர டப்பா ம்யூசிக்
என செவ்வியல் மெல்லிசை ரசனையாளர்கள் பகடி பேசினர் .அப்போது ரஜினியை போல
இளையராஜாவும் என்னை பெரிதும் ஈர்த்தார். இயல்பில் அதிக உணர்ச்சி வசப்படும்
சிறுவனான நான் அவர்கள் இருவரையும் கடவுள்களாகவே கருதினேன் .உடன் அப்போது ப்ரூஸ்லி
கொஞ்சகாலத்துக்கு இருந்தார் . பின் அது மைக்கேல் ஜாக்ஸனாகவும் மாறிக்கொண்டிருந்தது
.
அக்காலத்தில் திரைக்கு முன்னால் ஒரு மேடை இருக்கும்
பெரும்பாலும் ரஜினியின் ப்டங்களை மேடையில் படுத்துக்கொண்டே பார்த்தேன். ரஜினி
படத்தின் விள்ம்ப்ரத்தை முத்ன்முத்லாக தினத்தந்தியின் கடைசி பக்கத்தில்
பார்ப்பதுமுதல் , படம் பார்க்க சனிக்கிழ்மை மதியம் தியேட்டருக்கு ஓடுவது என
எல்லாமே தனி அனுபவம்தான் . சில படங்களில் சிவப்பாக இருக்கும் கமலஹாசனிடம் அவர் அடிவாங்கியபோது
நான் மிகவும் குமைந்தேன் .
நான் வாழவைப்பேன்
பட்த்தில் சிலமணித்துளிகள்சாகும் தருவாயில் துப்பாக்கியுடன்
ஒரு போதாத காலத்தில்
அவர் மனநலம் த்வறியவராக அனைவரும் கேலி பேசியபோது இவர் விரைவில் குணமடையவேண்டும் என
உள்ளூர பிரார்த்தித்தேன் .
பள்ளிசெல்லும்
வழியில் ஓட்டப்பட்டிருக்கும் ரஜினி காந்தின்
புதுப்பட போஸ்டர்களை நின்று நீதானித்து உற்று பார்ப்பேன் . நோட்டு
புத்த்கத்தின் கடைசி ப்க்கங்களில் ரஜினியை வரைவது முக்கிய பொழுது போக்காக மாறியது
. ஒருநாள் நண்பன் செய்த ஒற்று வேலை காரணமாக எல்லா நோட்டின் கடைசி பக்கத்திலும்
நான் ரஜினி படமாக வரைந்திருந்ததை பார்த்த சாரதா
டீச்சர் ஸ்கேலால் எனை வெளுத்து வாங்கினார் ராகவேந்திரர் பக்தி என்னையும்
அவ்வயதில் தொற்றியது. வியாழக்கிழ்மைகளில் விரதம் இருந்தேன் .
.நான் கொஞ்சம்
ரசனையில் வளர்ந்தபோது ரஜினியும்
வளர்ந்தார். மூன்றுமுகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் செந்தாமரை நாற்காலியை காலால்
எத்திஉதைக்கும் போதும்
இந்த் அலெக்ஸ்
பாண்டியன் பேரை சொன்னா அந்த குழந்தை அவங்க அம்மா வையையும் சேத்து மூடும் என வசனம்
பேசிய போது உணர்ச்சி தாங்காமால் கைவலிக்க தட்டினேன்
அந்த் ஆற்ற்லை மனதில்
வாங்கி உடலுள் செலுத்தியபடி வீட்டில் வலம் வந்தேன்
புதுக்கவிதை
ப்டத்தில் காதலின் தீபமொன்று பாடலில் பாக்கெட்டில் கைவிட்டபடி ரஜினி நடந்து வரும்
அழகை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்
அந்தா கானூன் படம்
முலம் இந்தியிலும் அவர் பெரு வெற்றி
பெற்றதை கமல் ரசிக நண்பர்களிடம் அவர்கள் வெறுப்பை சம்பாதிகும் வகையில் பெருமை பட
கூறியிருக்கிறேன்
ரஜினி ரசிகன்
புத்தகத்தில் ராஜாதிராஜா ஆளுயர புகைப்ப்டங்களை பார்த்து பரவசத்தில் துளிர்த்தேன் .
அன்று என்னை போல ரஜினியை தமிழ்கமே நேசித்தது.
அப்படத்தில் மலையாளக்கரையோரம் முதல் பாடல்காட்சியில் வெள்ளை
பேகி பேண்டும் வெள்ளை சர்ட்டுமாக பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்துவரும் காட்சியில்
உணர்வுகளின் உச்ச நிலையை அடைந்தேன் . அந்த உணர்வுகளின் நிலை என்னை போல பலரையும்
அக்காலத்தில் ஈர்தது. அண்ணா மலை பாட்ஷா படங்களீன் காலத்தில் நான் முழுவதுமாக மாறியிருந்தேன்
. ஓரளவு இலக்கிய வாசிப்பும் அறிவார்ந்த விடயங்களும் என்னை தீண்டியிருந்தாலும்
முதல் நாளில் முதல் ஷோ ரஜினி படம் பார்ப்பதை மட்டும் த்வறவிடுபவனில்லை
இப்படியாக ஒவ்வொரு
காலத்திலும் ரஜினியை இன்ஸ்பிரெஷ்னாக கொண்டு நாமும் அவரை போல சினிமாவில் சாதிக்க
முடியும் என கண்ணாடியில் எனக்கு பதில் அவரை பார்த்தேன்
தூர்தர்ஷனில் இரண்டு
வாரங்கள் வந்த அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி என் வாழ்வின் திருப்புமுனை என்று
கூட கூறலாம்
அதில் அவரிடம்
வெளிப்ப்ட்ட விஷய் ஞானம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அவரது பதிலில் வெளிப்ப்ட்ட
நிதான்ம் எனக்கும் கைவர வேண்டினேன்
அதில் ஒரு கேள்வியின்
போது த்ன் வெற்றிக்கு காரண்மாக தியானத்தை பதிலாக கூறினார்.
மறுநாள் முதல்
தினமும் பத்து நிமிடம் கண்களை மூடி தியானிக்க துவங்கினேன் . முதன்முதலாக ஜே
.கிருஷ்ணமூர்த்தியையும், ஆட்டோபயோகிராபி ஆப் யோகி நூலையும் வாசிப்பதற்கு அவரது
பேட்டிகள் ஒரு உந்துதல். அன்று தொடங்கி இன்று இமயமலைக்கு நான் பயணிப்பது வரை ரஜினி
எனக்கு முன் மாதிரி
பாட்ஷா பட வெற்றி
விழாவில் அவரது துணிச்சலான பேச்சில் அரசியல் த்ன்னுணர்வை கண்டு வியந்தேன்
இவையனைத்தையும் விட
அவரிடம் நான் கண்டு வியந்த பெருங்குணம் த்ன்னை எதிர்ப்ப்வ்ர்களை மன்னித்து அரவணைக்கும் பேருள்ளம் .
அதை என் வாழ்க்கையிலும் கடைபிடித்து அத்ன் பலனை
முழுமையாக உணர்ந்திருக்கிறேன்
இவ்வளவுதூரம் அவரால்
உந்தப்ட்டும் ஒரு முழு முதல் ரசிகனாக இருந்த நான் முத்ன் முறையாக அவர்மேல்
அதிருப்தி கொண்டது அவரது 25 வது ஆண்டின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களிடம் அந்த
விழாகுழு நடந்து கொண்ட விதம்
இமயம் அள்வுகு
உயர்ந்த ரஜினியா இப்படி
அவருக்காக உயிரையும்
த்ர துணிந்த பல லட்சம் பேரின் அன்பை வியாபாரமாக்கிய அந்த தந்திர மூளை நிச்ச்யம்
அவருடையதாக இருக்காது என நம்பினேன்
எனக்கு அவர்
மிதான இரண்டாவது அதிர்ச்சி பாபா பட பாடல்
கேசட் விநியோகத்தின் போது
இதுவரை த்மிழ் சினிமா
வரலாற்றில் எந்த படத்துக்குமில்லாத எதிர்பார்ப்பு இருந்த போது.. அதனை மேலும்
பணமாக்கும் வித்மாக கடையில் வாங்கவேண்டிய கேசட்டை ஒரு சிறு வியாபரியின் குறைந்த
வருமானத்தையும் பிடுங்கும்விதமாக
ரசிகர்களை சினிமா கவுண்டரில் வரிசையில் முண்டியிடவைத்து அதிகபடச விலைக்கு
விற்று அவர் பெய்ரை வைத்து பலர் பணம் சம்பாதிக்க
அனுமதித்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .
இப்படியாக தீவிர
ரஜினிரசிகனாக அவரால் மன எழுச்சிக்கு ஆட்பட்டு சுயவாழ்க்கையில் பெரும் உயரங்களை
கண்டடைய அவாவுடனிருந்த என்னை மேற்சொன்ன
சம்பவங்கள் அவர் மீதான் ஈர்ப்பில் இடைவெளியை உண்டாக்கின
காவிரி மற்றும் இலங்கை
ப்ரச்னைகளில் அவர் என் கருத்தோடு ஒத்துவராதவராக இருந்தாலும் பலர் அவரை முன் வைத்து
அரசியல் காய் நகர்த்துவதையும் அறிந்திருந்தேன் . அத்னால அவர் சமநிலை தவற
நேர்ந்ததையும் எண்ணி வருத்த முற்றேன்
எந்திரன் படத்தில்
அவர் நடித்தது குறித்து மிகவும் வருத்த முற்றேன். குழந்தைகள் முதல் பெருஇயவர் வரை
ரசிக்கும் மனிதர் தீமையை வலியுறுத்தும் பாத்திரத்தை தூக்கி பிடித்தது எனக்கு
மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. உண்மையில் ரஜினிக்கு எந்திரன் கடைசி படமல்ல .
அவர் இன்னும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ப்டத்தை தரவேண்டும் வயதுகேற்ற பாத்திரத்தில்
அவர் முன்னிலும் சூப்பர் ஸ்டாராக அவர் ஜொலிக்க முடியும். உள்ளத்தாலும்
எண்ணத்தாலும் உயர்ந்த நிலைகொண்ட ரஜினி என்னை போல பல இளைஞர்கள் உருவாக காரணமாக இருந்தவர் .இளைஞர்களுக்கு அவர்
கொடுத்தநம்பிக்கையும் உத்வேகமும் ஒரு சமூகம் எளிதில் பெற முடியாதது .