November 22, 2010
க்ளாத்ஷாப்ரோல், எரிக்ரோமர் மற்றும் ழாக்ரிவெத்:பிரான்சின் புதிய அலை பகுதி : நான்கு
உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 25
இந்த ஆண்டு உலக சினிமா தன் பங்குக்கு இரண்டு நட்சத்திரங்களை மண்ணுக்குள் அனுப்பியது. அவர்கள் இருவருமே நண்பர்கள். த்ரூபோ கோதார்த்துக்கு பிறகு போற்றப்படும் புதிய அலையின் மற்ற இரு முக்கியமான தூண்கள் .
க்ளாத் ஷாப்ரோல் எரிக் ரோமர். இவர்கள்தான் அந்த இருவர்
ஷாப்ரோல் கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் செப்டம்பர் 12லும் எரிக்ரோமர் கடந்த ஜனவரி 11ம் நாளிலும் தங்களது வாழ்வு எனும் மிக நீண்ட திரைப்பட்த்திற்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
ஷாப்ரோலுக்கும் எட்ரிக் ரோமர் இருவருமே புதி ய அலைகுழுவில் பூரண இலக்கியத்தை நம்பியவர்கள் . கோதார்த் மற்றும் த்ரூபோ ஆகிய இருவரும் கூட எழுத்திலிருந்து சினிமாவுக்கு வந்த்ருந்தாலும் அவர்களை காட்டிலும் இலக்கியத்ன்மைக்கு தமது மடங்களில் இவர்கள் இருவரும் கூடுதல் மதிப்பை தந்திருந்தனர்.
கிளாத் ஷப்ரோல்
1930ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான ஷாப்ரோல் த்ரூபோ கோதார்த் ஆகியோரின் திரைப்பட சங்கங்களில் அவர்களுடன் இணைந்து பிற்பாடு ராணு சேவைக்கு போய் சினிமாஅசை காரணாமாக் பாதியில் ஓடிவந்து மீண்டும் நண்பர்களுடன் இணைந்து அவர்களோடு கையேது சினிமாவில் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் பங்களித்து பின் 20 செஞ்சுரி பாக்ஸின் பிரெஞ்சு விளம்பர பிரிவில் சிலகாலம் வேலை செய்து பின் அந்த வேலையை கோதார்த்திடம் கைமாற்றிவிட்டு தன் பணக்கார மனைவியின் கடைக்கண் அசைப்புக்கிணங்க தன் முதல் படமான ஹேண்ட்செம் செர்ஜ்படத்தை தயாரித்து இயக்கினார் . 1958ல் வெளியான இந்த படம்தான் நியூவேவ் இயகுனர்களின் முதல் படமாக வரலாற்றாய்வாளர்கள் தீர்மானிக்கபடுகிறது.அதன் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஷாப்ரோல்
ஐம்பதுக்குமேற்பட்ட திரைப்படங்களை இயக்கி பிரெஞ்சு மற்றும் உலக சினிமாவுக்கு வளம் சேர்த்துள்ளார்
ஷாப்ரோலின் படங்களை பற்றி ஒட்டுமொத்தமாக அள்வீடு செய்வதானால் சுருக்கமாக இப்படி கூறிவிடலாம் . அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல்
இப்படி சொல்வது அவரது படங்களை குறைத்துமதிப்பிடுவதல்ல. ஷாப்ரோலை பொறுத்தவரை இப்படி யாரேனும் சொன்னால் அதையே தனக்கு கிடைத்த சிறந்த மதிப்பீடாக கொள்வார். அந்த அள்வுக்கு ஹிட்ச்காக்கையும் அவரது படங்களையும் நேசித்தவர். அதனாலதான் எரிக் ரோமருடன் இணைந்து ஹிட்சாக்கை பற்றி ஆய்வு செய்துஒரு நூலாக எழுதினார் . சினிமாவை புரிந்துகொள்ள மிகசிறந்த நூல் என விமர்சகர்கள் பலரும் அத்னை குறிப்பிடுகின்றனர். அது போல த்ரூபோ வுடன் இணைந்து ஹிட்ச்காக்கை நேரில் சந்தித்து பேட்டிகண்டு அதனை புத்தகமாக கொண்டுவந்தார். . அதுவரை உலக சினிமாவுக்கு கமர்ஷியல் இயக்குனராக மட்டுமே அறியப்பட்ட ஹிட்ச்காக்கின் படங்கள் இந்த புத்தகம் வந்த பிறகுதான் ஒரு கலைமதிப்பீட்டை பெற்றுக்கொண்டன.
புதிய அலை இயக்குனர்களில் அதிக கமர்ஷியல் வெற்றி பெற்ற இயக்குனர் என்ற பெருமை ஷாப்ரோலையே சேரும். அதற்கு காரணம் அவர் த்னது படைப்புகளில் உள் பொதிந்து வைக்கும் குறிய்யீடுகளை அவரே நேரடியாக படத்தில் சொல்லிவிடுவதுதான் . பொதுவாக கோதார்த் போன்றவர்கள் ஒருகாட்சியில் இடையிடையே ஒரு கடிகாரத்தையோ அல்லது பூனை தன் அசையும் வாலின் நிழலை பார்ப்பது போலவோ குறீடாக காண்பித்தால் அதற்கு தனி அர்த்தம் மறைந்து இருக்கும் . ஆனால் ஷ்ப்ரால் படத்திலோ அந்த குறியீடு எதை உணர்த்துகிறது என்பதையும் விளக்கிவிடும் .. ஷாப்ரோலின் கமர்ஷியல் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம் . மேலும் ஷாப்ரோலின் பாணி தனித்வமானது.
அவரிடம் த்ரூபோவின் அழுத்த்மான கதையாடலோ கோதார்த்தின் மிகு புனைவு மொழியோ எரிக் ரோமரின் கவித்துவமோஇல்லை. மாறாக அவர் நேரிடையான இயல்பான திரைப்படத்தையே படைப்பாக வடிவமைத்தார். மேலும் இதர மூவரை போல பல்வேறு பாணி திரைபடங்களை கையாளாமால் அவர் ஹிட்ச்காக் பணி துப்புறியும் படங்களாகவே தன் தடத்தை தீர்மானித்துக்கொண்டார் .
ஷாப்ரோலுக்கு வரலாற்றீல் இன்னொரு பெயரும் உண்டு . அது தேவதை .. பண தேவதை .. படம் எடுத்து பாதியில் நின்ற பல புதிய அலை படங்களுக்கு பண உதவி செய்தவர். அவர் கல்யாணம் செய்து கொண்ட பணகார மனைவியின் மூலமாக தான் உருவாக்கிய AJYM FILMS மூலமாக இந்த பண உதவிகளை தக்க நேரத்தில் தந்துதவினார். எரிக் ரோமர் ..ழாக் ரிவெத் போன்றோரின் துவக்ககால திரைப்படங்களுக்கு ஷாப்ரோலே தயங்காமல் பண உதவி செய்து தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவும் படம் வெளிவரவும் உதவி செய்து புதிய அலையின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தார் .
எரிக் ரோமர்
எனது திரைப்படங்கள் ஒரு நாவலை போல .. அவர்கள் என் படத்தை பார்க்கவில்லை மாறாக நாவல் வாசிக்கும்போதான் உலகம் என்னடி அவர்கள் கற்பனையில் உருக்கொள்கிறதோ எப்படியான உணர்ச்சியில் அவர்கள் மனம் எழுச்சி கொள்கிறதோ அது போன்ற மன நிலையில்தான் என் படங்கள் பார்வையாளர்களை சென்றடைய விரும்புகிறேன்
மேலுள்ள வாசகம் எரிக் ரோமர் தன் படங்கள் பற்றி தானே கூறிக்கொண்டது. மற்ற நியூவேவ் இயக்குனர்களுக்கும் இவரும் இருக்கும் வித்தியாசம் அவர்கள் சிறுவயது தொட்டே சினிமாவை காதலைத்து வந்த்னர். ஆனால் எரிக் அப்படியில்லை அவருக்கு துவக்க காலங்களில் சினிமா ஈர்ப்பை தரவில்லை .
ஆ1920ல் பிறந்த எரிக்கின் அசல் பெயர் மோரிஸ் ஹென்றி ஜோசப் ஷேரர் என்பதாகும் பிற்பாடு நாவல் எழுத துவங்கிய போது கில்பர்ட் என பெயரை மாற்றிக்கொண்டவர். ஸ்வீடன் இயக்குனர் எரிக் வான் ஸ்ட்ரோஹிம் மினால் உண்டான பாதிப்பின் காரணமாகவும் பின் அதனுடன் த்னக்கு பிடித்த சாக்ஸ் ரோமர் எனும் எழுத்தாளின் பெயரையும் இணைத்து எரிக் ரோமர் என்ற பெயரை தனக்குதானே சூட்டிக்கொண்டார்.
துவக்க காலங்களில் ஆசிரியராக பணி புரிந்த எரிக் குக்கு அந்த பணி பிடிக்கவில்லை. காரணம் எழுத்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்தது,வேலையை விட்டு பத்திரிக்கை துறைக்கு பாய்ந்தார். .எலிசபத் எனும் அவரது முதல் நாவலை எழுதி வெளியிட்டார்.
பிறகு சினிமாதொக் திரைப்பட சங்கத்தில் சேர்ந்ததும் கையெது சினிமா இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றதும் அவரே அறியாமல் நிகழ்ந்த சம்பவங்கள்.அவரது 1958ல் அவரது முதல் படமான சைன் ஆப் லியோ வெளியானது. ஷாப்ரோல்தான் இதன் தயாரிபாளர். சிம்ம ராசியில் பிறந்தவனுக்கு குறிப்பிட்ட நாளில் பெரும் பணம் வரும் என்று யாரோ சொல்லும் ஜோசியத்தை நம்பி கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து விடுகிறான்.ஒருகட்டத்தில் நயாபைசா கூட கையில் இல்லாமல் தெருநாயாக அலையும் அளவுக்கு வாழ்க்கை சீரழிகிறது. முட்டாளத்னமாக ஜோசியத்தை நம்பினோமே என புலம்பிதவிக்கிறான். இரவில் தங்க கூட இடமில்லை. நண்பர்களின் ப்ளாட்டுக்கு தேடி செல்ல அவமானபடுத்தப்பட்டு வெளியேறுகிறான். அது அவனை தற்கொலை எண்ணத்துக்கே அழைத்துச்செல்கிறது. சாகதுணிந்தவன் தோளில் ஒரு கை
யாரோ ஒரு சொந்த கார கிழவி மண்டையை போட பல கோடி சொத்து அவனுக்கு வந்துள்ளதாக தகவல்.
ஆனால் இப்படம் வெளியான போது த்ரூபொ கோதார்த் ஷாப்ரோல் ஆகியோர் தங்களது முதல் படத்தில் ஈட்டிய வெற்றியை ஈட்டவில்லை. அதனால் முதல் படத்திலேயே சுருங்கிப்போன எரிக் மீண்உம் எழுத்து பணிக்கே திருமினார். சமயம் கிடைத்த போதெல்லாம் குறும்படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடத்ட்ட முதல் படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குபின் 1967ல் La Collectionneuse என்ற படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை ஈட்டிதந்து புதிய அலையின் சகாபத்தில் புதிய வரவாக பதிய வைத்துக்கொண்டது..அப்படம் சிறந்த படத்துக்கான பரிசான வெள்ளிகரடியை வென்றதோடு பலவேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது.1969ல் வெளியான அடுத்த்படம் Ma nuit chez Maud சிறந்த அந்நிய மொழி படத்துக்கான ஆஸ்கார் பரிசை பெற்றது ...தொடர்ந்து எரிக்கின் படங்கள் பிரான்சை காட்டிலும் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றன .
புதிய அலையின் மற்ற இயக்குனர்களது படங்களைக்காட்டிலும் எரிக் கின் படங்களில் இலக்கியத்த்ன்மை அதிகம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
என்னதான் ஷாப்ரோலின் படங்கள் அக்காலத்தில் பிரான்சில் கமர்ஷியலாக வெற்றி பெற்றாலும் எரிக்கின் படங்கள் மிகதாமதமாக ஆனால் காலத்தால் அழியா புகழை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுதந்தன .கென்ஸ் பெர்லின், வெனிஸ் என அனைத்து திரைப்பட விழாக்களில்லும் அவர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றிருக்கிறார்.
ழாக் ரிவெத்
1928ல் பிரான்சில் பிறந்தவர்.. புதிய அலை இயக்குனர்களில் மற்ற மூவரும் மறைந்தபின்னர் கோதார்த்தும் இவரும் தான் இன்னமும் உறுதியாக சினிமா வாழ்க்கையை நீட்டித்துக்கொண்டிருப்பவர்கள்.
ரிவெத்தின் முதல் படம் Paris nous appartient தான் பணி செய்த கையேது சினிமா நிறுவனத்திலேயே வட்டிக்கு பணம் வாங்கி தன் முதல் படத்தை எடுத்தார் . அப்படியும் பண் ப்ரச்னையால் அவரது சினிமா பாதியில் நின்ற போது த்ரூபோவும் ஷாப்ரோலும் அவருக்கு பண உதவி செய்து படச்சுருளை வாங்கிதந்து தொடர்ந்து படத்தை முடிக்க உதவி செய்தனர். படம் வெளியான போது எரிக் ரோமருக்கு நேர்ந்த அதே கதி நேர்ந்தது. முதல் படமே பெரும் தோல்விபடம் .எரிக்கை போலவே பத்து வருடம் கழித்து இவரது இரண்டாவது படம் L'amour fou வெளியாக அரசாங்கம் அதில் சட்டத்துக்கு புறம்பான காட்சிகள் இருப்பதாக தடை செய்ய போக அதுவே படத்துக்கு பெரிய விளம்பரமாகி பிற்பாடு பெரும் வெற்றிபடமாக மாறியது. அத்பிறகு தொடர்ந்து படங்களை இயக்கிவந்த ரிவெத்துக்கு பிற்காலத்திய படங்கள்தான் பெரும் புகழை பெற்றுதந்தன
.
November 2, 2010
டி என் ஏ ஒன்று, உருவம் இரண்டு: சச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு
நதிவழிச்சாலை:5
சச்சின் டெண்டுல்கர், ஏர்.ரஹ்மான் ..
இந்தி சினிமாவின் பத்திரிக்கைகளான பிலிம் பேர்.. ஸ்க்ரீன் போன்றவற்றில் வரும் சில கட்டுரைகளின் எழுத்து நடை காமெடியாக யிருக்கும் . கவர்ச்சியாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு சில அபத்தமான ஒப்புமைகளைதருவர். உதாரணத்துக்கு "மணிரத்னைத்தை ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும்,.. "ஆமீர்கானை ஹாலிவுட்டின் டாம்குரூஸூக்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும் "நடிகை யாரேனும் கால்மேல் கால்போட்டு அமர்ந்து போஸ் கொடுத்தால் அவரை ஷ்ரன்ஸ்டோனுக்கு பதிலடி" என்றும் கைக்கூசாமல் எழுத ஆரம்பித்துவிடுவர்!
ஆனால் அதேசமயம் நம் ஊரில் நம் காலத்தில் நம் கண்முன்னிருக்கும் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கிடையில் அநியாயத்துக்கு காணப்படும் அபரிதமான ஒற்றுமைகளை யாரும் இதுவரை கவனிக்காமல் போனதேஆச்சரியமான ஒன்று.
நான் சொல்லும் இரண்டு பேரும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்து சென்றதில் குறிப்பிடத்தக்கவர்கள்.வெற்றிகளின் உயரத்துக்கு அசாத்திய வெற்றி அல்லது இமாலயவெற்றி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக இவர்களின் பெயரையே குறிப்பிடும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர்கள்
நான் சொல்வது : சச்சின் டெண்டுல்கர்....... ஏ.ஆர் ரகுமான் என்கிற இருவர் தான்.
இருவருக்குமிடையிலான டி.என்.ஏவை ஒரு பயோகெமிஸ்ட்டை வைத்து ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியவரும் போல ..அந்த அளவுக்குஇருவரது உயரம் தோற்றம் சுபாவம் ஆகியவற்றில் ஆச்சரியபடும் ஒற்றுமைகள்
உண்மையில் துவக்ககாலங்களில் நான் இவர்கள் இருவரையுமே அவ்வளவாக ரசித்தவனில்லை அதற்கு காரணம் இன்னும் இருவர் ..
முதலாவதாக கிரிக்கெட்டில் துவக்க காலங்களில் சச்சின் எனக்கு பிடிக்காமல் இருந்ததற்குகாரணம் . முன்னால் கேப்டன் அசாருதீன்
அப்போது நான் அசாருதீனின் பரம விசிறி.. விளையாட்டை ஒரு கலையாக பாவித்து அதன் மரபை பூரணமாக உள்வாங்கி ஆட்ட ஒழுங்கின் அழகை கலையாக மாற்றுவதில் எனக்கு பிடித்தமான சில பேட்ஸ் மேன்கள் உண்டு. அதில் இலங்கையின் அரவிந்த் டிசில்வா மற்றும் வெஸ்ட் இண்டீசின் வில்லியம்சுக்கு பிறகு அசாருதீன் எனக்கு பிடித்தமானவராக இருந்தார் அலட்டிக்கொள்ளாமல் பேட் பிடிக்க வரும் அவரது ஸ்டைல் எனக்கு மிகவும்பிடிக்கும். வரிசையாக முன்று விக்கட்டுகள் சாய்த்திருக்கும் அடுத்துஎன்னவாகப்போகிறதோ என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கும் சக ஆட்டக்காரர்களுக்கும் இருக்கும்.அந்த சமயத்தில் துளி பதட்டமில்லாமல் அனாயசமாக சூயிங்கமைமென்றபடியே மட்டையுடன் வந்து.. காலரை இழுத்துவிட்டுக்கொண்டு மணிக்கட்டை ஆட்டிவிட்டு மட்டை செண்டர் ஸ்டெம்புக்கு வைத்து அம்பயரிடம் லைன் கேட்பார் .. அந்த முகத்தில் அனைவரிடமும் காணப்படும் திக்...திக்... துளியும் இருக்காது. அதே போல் சொல்லிவைத்தார் போல டீமை தன் கையில் தாங்குவார் ( நினைவுப்படுத்துகிறேன்:நான் சொல்வது அந்தகாலம்) ஒரு கேப்டன் எப்படி இருக்கவேண்டும்.அவர் ஆடுகளத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சரியான உதாரணம். மன உறுதிதளராமல் சக வீரர்களை அரவணைத்து அதே சமயத்தில் இக்கட்டான தருணங்களில் தன் ஆட்டத்தின் மூலம் டீமை காப்பாற்றி என இப்படியான விடயங்களில் அவர் எனக்கு பிடித்தமானவராக இருந்தார்.
மேலும் அசாரின் சிக்சர் பாணி எனக்குமிகவும் பிடிக்கும்
அப்போது நான் மற்றும் உதவி இயக்குனர்கள் பலரும் இராமேஸ்வரம் பட இயக்குனர் செல்வம் அறையில் கூடுவோம் . பெரியார் சாலை பேருந்து நிலையத்துக்கு பின்புறம் இருந்த ஒரு தெருவில் அவரது அறை இருந்தது.
முத்துராமலிங்கம்(சினிமா பி.ஆர.ஓ வாக இப்போது பணிபுரிந்து வருபவர் ) வைரக்கண்ணு( உதவி இயக்குனராக இருந்து மாரடைபால் பிற்பாடு உயர்நிலை எய்தியவர்)இன்னும் பலரும் அங்கு கிரிக்கெட் பார்க்க கூடுவோம். அவர்களில் பலரும் அப்போது சச்சின் ஆதரவளர்கள். கேப்டனாக இருந்த அசாரை பார்த்தாலே திட்டத்துவங்குவார்கள் . அதன் காரணமாகவே நான் சச்சினுக்கு எதிரானவனாக மாறவேண்டி வந்தது.
சிலவருடகாலம் அப்படித்தான் இருந்தேன்
.
.ஆனால் ஒருமுறை சிக்ஸர் சித்து துபாயிலிருந்து பாதி டூரில் திடீரெனதிரும்பியபோது விமான நிலையத்திலேயே அழுதுகொண்டே டிவிக்கு
பேட்டிதந்தார் அதில் அசார் தன்னை வேண்டுமென்றெ ஆடவிடாமல் சதிசெய்து தன்னை தகுதியற்றவனாகசித்தரித்துவிட்டார்யென பொருமி தள்ளினார் . ஒரு ஆண் இப்படி பப்ளீக்காக அழுமளவிற்கு பாலிடிக்ஸ் செய்யும் கேப்டன் ஒருக்காலும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது என அப்போதைய அறிவுக்கு அரைகுறையாக முடிவெடுத்து அசார் கட்சிக்கு மானசீகமாக ராஜினாமா கடிதம் எழுதினேன்.
அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நானும் சச்சினுக்கு மெதுவாக கைதட்ட ஆரம்பித்தேன் . அதற்கேற்றார் போல் அசாருதீன் டவுசர் கிழியும் சத்தம் மெல்ல கேட்க துவங்கியது. ஆட்டம் சரியில்லை. சக ஆட்டகாரர்களின் புகார். என அசார் வெளுக்க துவங்கினார்..நல்ல வேளையாக அவர் மீது ஊழல் குற்றசாட்டு வருவதற்கு முன்பே நான் முழுவதுமாக மாறியிருந்தேன்.சச்சின் கேப்டனாக இருந்த போதுகூட அவர் மீது ஈர்ப்பு வரவில்லை. டீமில் கங்குலி கை ஓங்க ஓங்க நான் முழுவதும் சச்சினிடம் சரண்டர் ஆனேன் .காரணம் கங்குலியை எனக்கு பிடிக்காது.
ஏன் பிடிக்காது என யாரும் கேட்காதீர்கள் அதற்கு காரணமே தேவையில்லை.( கங்குலி ரசிகர்கள் மன்னிக்கவும்). பிறகு சச்சினின் அந்த தன்னடக்கம் பொறுமை நிதானம் எல்லாம் இப்போதுதான் முழுசாக கண்ணில் பட்டது.. அடடா திறமை ஒருபக்கம் இருக்கட்டும் என்ன பாந்தம் என்ன உறுதி.பிறகு அவரது ஒரு பிறந்த நாளின் போது மனைவியை காலரியில் அமரவைத்து செஞ்சுரி அடித்து அவருக்கு அர்ப்பணித்த அந்த ஆட்டம் அவரை நாயகனாகவே மனசுக்குள் உட்காரவைத்து மாலையிட்டது. அதன் பிறகும் அவரிடம் பசை போல ஒட்டவைத்துக்கொண்டது .
அதேபோல ஏ.ஆர் ரகுமான்
சச்சினுக்கு அசார் போல ஏ.ஆர் ரகுமான் எனக்கு நெடுநாட்களாக ஈர்க்காமல் போனதற்கு இளையராஜா ஒரு பெரிய காரணம்.
இளையராஜா என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருந்த காலத்தில் திரையுலகில் சட்டென அவரது புகழுக்கு பங்கம் .. ஒரு நிழல் அவரது மாஉருவை சிறிதே மறைத்தது. தன் துல்லியமான நவீன ஒலிப்பதிவு தரத்துடன் ஏ.ஆர் ரகுமான் எனும் ஒரு இளைஞனின் து(உ)ருவம் தான் அது. சின்ன சின்ன ஆசையை விட புது வெள்ளைமழை துவக்க இசை ஈர்த்தது. ஆனாலும் மனசு ஏற்க வில்லை.பிறகு ஜெண்டில்மென் சிக்குபுக்கு வந்ததும் முடிவெடுத்தேன் இல்லை இது சமூகத்துக்கு ஆரோக்கியாமான சத்தம் இல்லை என நண்பர்களிடம் உளறினேன்.
அக்காலத்தில் நகரம் முழுக்க வீடியோ கேம்ஸ். அந்த கடைகளை தாண்டும் போதெல்லாம் ஒரு வினோத சப்தம் . இளைஞர்கள் பலர் அதிகமாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்து வந்தனர். எப்போதெல்லாம் அந்தகடையை தாண்டுகிறோனோ உலகம் அழிவின் சப்தமிது ..என எண்ணத்துவங்கினேன். ரகுமானின் பாடல்களின் துவக்ககால இசையொலிகள் இப்படியாக இருப்பதாகநண்பர்களிடம் கூறி இவர் நிக்கமாட்டார் என பொருமினேன்.
பின் கிழக்குசீமையிலே படம் வந்தது .. அதன் வினோத இசை பாடல்கள் மெல்ல ஈர்க்க துவங்கியது. திருடா திருடாவில் வரும் ராசாத்தி பாட்டைபெரும்குரலெடுத்து ஆள் இல்லாத மொட்டை மாடியில் உச்சச்சதியில்பாடி மகிழ்ந்தேன் .ரகுமான் உணர்வுகளை சொல்லக்கூடியவர் மனசு மறுத்தாலும் அறிவு அங்கீகரித்தது. . மெல்ல மெல்ல ஏஆர் ரகுமான் ஈர்க்க துவங்கினார்.
அதே சமயம் அசாரை வெறுத்தார் போல நான் இளையராஜாவை வெறுக்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவில்லை ..இன்று இந்த நிமிடம் வரை .. ஷாஜி போன்றவர்கள் கட்டுரை படிக்கும் போது அவர்களது கலாச்சார புரிதலின்மையும் கலைஞனது இயல்புக்கூறுகள் குறித்த அறிவு போதாமையும்தான் என்னுள் எழுந்ததே தவிர இளையராஜாவின் மீதான என் பார்வை எள்ளளவும் மாறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதன்பிறகுதான் இளையராஜாவின் ஆழத்தையும் பலத்தையும்தேடி இன்னும் என்னால் ஆழமாக சஞ்சரிக்க முடிந்தது.
அதேசமயம் ஏ.ஆர் ரகுமான்மீதும் அவரது இசையின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகரிக்க துவங்கியது . ஜில்லுனு ஒரு காதல்கதையின் ' 'முன்பே வா' வை திரும்ப திரும்ப கேட்டு தொலைந்து போன-மறைந்து போன-கைவிட்டு போன காதலிகளின் முகத்தை நினைத்து கண்ணீர் மல்கியிருந்திருக்கிறேன் அதிலும் குறிப்பாக அவரது இந்திபட பாடல்களை நான் மிகவும் ரசித்தேன்
சொல்லப்போனால் அவருக்கு கர்நாடகத்தை விட ஹிந்துஸ்தானிதான் அட்டகாசமாக வருகிறது என்றும் கூட சொல்வேன்.
ரங்கீலா துவங்கி அவர் இசையமைத்த இந்திபாடல்கள் தமிழ் பாடல்களைவிடவும் முழுமையான வெற்றியடைந்தவை தால்,லகான் ,ரங் தே பசந்தி, தேசம், ஜோதாஅக்பர், டெல்லி 6, ஸ்லம்டாக் மில்லியனர் என அவரது பாட்ல்களை இப்போதும் ஆவலுடன்
கணிணியில் கேட்டுவருகிறேன். .
குறிப்பாக ஆஸ்கார் விழாவின் போது அவர் உச்சரித்த தமிழ் சொற்கள் தமிழனாக என்னை அவர் மேல் மிகவும் பெருமைகொள்ளச்செய்தன. இப்படியாகத்தான் இந்த மேதைகள் இருவராலும் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஒருவகையில் இந்த இருவர் மீதும் ஒரு பொறாமையும் கூட எனக்கு உண்டு. .. இத்தனை புகழ் அடைந்த பின்பும் அதுகுறித்த அலட்டலில்லாத அவர்கள்தன்மை என்னை சில சமயங்களில் வெட்கபடவைக்கின்றன
இவர்கள் இருவரிடமும் காணப்படும் அதிசய ஒற்றுமைகளை பட்டியல் போட்டால் அடுக்கிக்கொண்டே போகலாம்.
உயரத்திலும் உருவத்திலும் இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை அபரிதமானது என்பது உங்களுக்கு தெரியவரும் . இருவருமே வார்த்தைகளை நம்பாமல் செயல்களால் உலகத்தோடு உரையாடுபவர்கள் . இருவரும் இதுவரை மீடியாக்களில் பேசிய வார்த்தைகளை ஐந்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். மட்டுமல்லாமல் இருவரையும் ஒருசேர வைத்துபார்த்தால் பலவகைகளில் இருவருக்கும் அபரிதமான ஒற்றுமை இருப்பது தெரியவரும்.
ஏறக்குறைய ஒரே காலத்தில் ஓரிரு வருட இடைவெளியில் அறிமுகம். சச்சின் 89 ரஹ்மான் 91 என நினைக்கிறேன். அறிமுகமாகி தோன்றி ஒரே சமயங்களில் 94 வாக்கில் உச்சத்துக்கு சென்றவர்கள் .இன்று வரை நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருப்பவர்கள் . தொடர்ந்து மெகா மெகாஸ்டார்களாக இந்தியவானிலும் உலக வானிலும் ஜொலிப்பவர்கள்
இருவரது உடல் பாவத்தையும் கொஞ்சம் கவனித்து பாருங்கள் இருவருக்குமிடையே பொருத்தம் அத்தனை கனக்கச்சிதம். உயரம் பொறுமையான நடை , சின்ன கண்கள் உதடு ஒட்டியபடி சிரிக்கும் சிரிப்பு, பதில் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாத கேள்விகளுக்கு தோளைகுலுக்கிக்கொள்ளும் பாங்கு என அடுக்கிக்கொண்டே போகலாம் அவர்களது ஒற்றுமைகளை.
உலகம் அறிந்த இந்தியாவின் மிகபெரிய இரண்டு நட்சத்திரங்கள் என்று சொன்னாலும் இவர்கள் இருவர் மட்டுமே நிற்பார்கள்.
அதே போல இருவருமே திறமைகளை வெளிப்படுத்துவதில் எவரும் அருகில் நெருங்க முடியாத உச்சநிலை வெளிப்பாட்டுத்திறன் பெற்றவர்கள்
இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் நேசிக்கப்படுபவர்கள்
வாழ்க்கை எனும் பெரும்பரப்பில் மனித பண்புகளிலிலும் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் குறித்து யாரவாது தீவிரமாக ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை எழுதினால் அது பலருக்கும் புகழ்வானுக்கு பயணிக்கும் வழித்துணையாக அமையும்
நாம் ஓடவேண்டியது எவ்வளவோ தொலைவு
ஆனால் அதற்குமுன் கற்கவேண்டியது எத்தனையோ மைல்கள்
--
Subscribe to:
Posts (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...