September 29, 2009

ஒன்றுமில்லை நண்பர்களே.. வாழ்க்கை கொஞ்சம் போர்தான்

நண்பர்களே ஒப்பந்தத்தின் படி
விடிவதற்குள் பதினாலு கவிதைகள்
எழுதவேண்டும்
முதல்கவிதை எழுதி உடலை முறித்த மறு நொடி
அதிர்ச்சி: நண்பர்களே
அத்னை காண்வில்லை
அறைமுழுக்க தேடினேன்
கணிணியின் இதர பக்கங்களை புரட்டினேன்
முதல்கவிதை காண்வில்லை
மகளது புத்தக அலமாரியை புரட்டினேன்
பீராவை அசைத்தேன் முதல்கவிதைகாண்வில்லை
ஆர்குட் பேஸ்புக் எல்ல இடங்களில்லும் தேடினேன் முதல்கவிதை காண்வில்லை
க என தொடங்கும் அத்ன் முதல் எழுத்து மட்டுமே நினைவில்
உறக்கம் கலைந்த மனைவி கோட்டுவா விட்டபடி கேட்டாள்
டீ போட்டு தரட்டுமா ..
அவ்ள் தன் ஆடைகளை கழ்ட்டி தேடினாள்
கவிதை அங்கேயும் காண்வில்லை
எண் நூறுக்கு சுழற்றிய போது
காவலர்களும் ஜீப்பில்வந்திறங்கி தேடினர்
கண்டிப்பாக இது திருட்டுதான் என கூறி
மனைவியிடம் ஒரு மனுவையும்
கொஞ்சம் பண்த்தையும் வாங்கி சென்றனர்
போகும் போது வீட்டு சுவற்றில் ஒண்ணுகடித்ததனர்
இந்த கவிதைக்காக நான் சிரம்மப்படவில்லை
என்றாலும் கவிதையை காண்வில்லை
இன்னும் விடிவதற்கு சிலநிமிடங்களே...
ஆட்கள் வாசலில் வந்துவிட்டனர்
பத்திரிக்கை நண்பர்களுக்கு
மனைவியிடம் காபிதர பணித்துவிட்டு
மீண்டும் முன்னமர்ந்தேன்
கணிணிக்கு அந்தபக்கம்
மிதந்தலைந்துகொண்டிருக்கிறான்
கடலில் சூரியன்

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...