April 16, 2009
April 13, 2009
சிம்லி : சிறுகதை ;அஜயன்பாலா
பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.இன்று அதுநடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. வாழ்க்கை இப்போது எனக்கு சில விதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சாலையில் நடந்து போகும் யாரை நிறுத்தி என் பெயரைச் சொன்னாலும் சட்டென பார்வை விரித்துப் புருவம் உயர்த்தி வியப்புடன் பார்ப்பார்கள்.
எனது இயக்கதில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி விட்டன.இரண்டுமே வெற்றிப்படங்கள். இப்போது மூன்றாவது படத்திற்கான வேலையில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். முந்தைய படங்களின் வணிகத்தன்மை கொஞ்சம் இல்லாமல் எனது அசலான கலைத்தன்மையுடன் ஆன்மாவுக்கு நெருக்கமாக இந்த படத்தை எடுத்து விடவேண்டும் என்ற உந்துதலடன் இரவு பகலாக மெனக்கெடுகிறேன்.
கிட்டதட்ட எல்லமே முடிந்துவிட்டது இன்னும் ஒரே ஒரு கதாபாத்திரம் "கருவேப்பிலை" ஒரு வேலைக்காரி பாத்திரம்.படத்தில் சிறிதளவே வ்ந்தாலும் துடுக்கான அந்த பாத்திரம் படத்தின் ஜீவனோடு சம்மந்தப்பட்டது. அதற்கு மட்டும் சரியான நடிகை அமையவில்லை.இன்றும் அசலான முகத்தை எனக்கு காண்பிக்காவிட்டால் ப்ராஜக்டை விட்டே அனுப்பிவிடுவேன் என ஏஜண்டை கடுமையாக எச்சரித்தேன். அதன் விளைவு தான் என் கையில் இப்போதிருக்கும் இந்த ஐந்து புகைப்படங்கள்.அதில் ஒன்று இந்த கதை காரணமாக இருக்கும் சிம்லியினுடையது.
புகைபடத்தில் இருக்கும் இந்த முகத்தை கூர்ந்து கவனித்தேன்.பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பாண்டியன் மேன்ஷனில் பசியைத் தீர்த்த அதே முகம் ;அதே கண்கள்;வெகுளித்தனமான சிரிப்பு.
’’அண்ணா இட்லி வாங்கலியாண்ணா’’
குரல் என்னை பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு கோடைக்காலத்து வெக்கை நிறைந்த அறையில் தூக்கிப் போட்டது.பசி நிறைந்த நாட்களின் அந்த பறவைகளின் சப்தம் இப்போதும் எனக்குள் அவ்வப்போது கேட்பதுண்டு.
திருவல்லிக்கேணி பாண்டியன் மேன்ஷனைத் தெரியாத வெளியூர் வாசியே இருக்கமுடியாது. அப்படி ஒன்றும் அது வசதியான மேன்ஷன் அல்ல.பெரிய பெரிய மரக்கதவுகள்.காரை பெயந்த சுவர்கள் என தோற்றமே அதன் வயோதிகத்தைச் சொல்லும் இருந்த போதிலும் அந்த மேன்ஷனுக்கென ஒரு ப்ரத்யோக வசீகரம் இருந்தது.திட்டுத்திட்டான அழுக்கும் ஆங்காங்கே எண்ணெய்ப் பிசுக்குமாக காணப்படும் அதன் பால் வெள்ளை நிறமும் பச்சை நிறத்திலான ஜன்னல் மரக்கதவுகளும் அந்த கட்டிடத்திற்கென ஒரு பாரம்பர்யத்தின் வாசனையை உருவாக்கித் தந்தன.
"ப" வடிவத்திலிருந்த அந்த மூன்று அடுக்கு கட்டிடத்தின் நட்ட ந்டுவில் ஒரு அத்தி மரம்
பகல் நேரத்தின் பறவைகளின் இரைச்சல் அங்கே எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்
இப்போதும் கூட அலுவல் காரணமாக சாப்பிட நேரமின்றிபசியுடன் தவிக்கும் நிமிடங்களில் அந்த பறவைகளீன் சத்தம் மனசுக்குள் கேட்பதுண்டு.காரணம் அந்த மேன்ஷனில் நான் கழித்தது என் பசி மிகுந்த காலங்களை.....
அப்போது நான் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியிருந்தது.துர்பாக்கியம் அப்போது என் முதுகில் இருந்து எல்லா நாட்களிலும் மோசமான இடங்களுக்கு என்னை விரட்டிக்கொண்டிருந்தது.உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தது தான் மிச்சம்.தங்குவதற்கு கூட சரியான இட வசதி இல்லாத சமயத்தில் தான் இந்த மேன்ஷன் எனக்கு அறிமுகமானது.
இந்த மேன்ஷனில் எண் 28ம் அறையில் தங்கியிருந்த என் ஊர் நண்பன் கம்ப்யூட்டர் படிப்புக்காக சென்னையில் வசிப்பவன். மே, ஜூன் மாதங்களில் அவன் ஊருக்குச்செல்லவேண்டியிருந்ததால் அவனது அறையில் என்னைத் தங்கிக்கொள்ள அனுமதித்தான்.அவனுடைய அப்போதைய உதவிக்கு நான் இப்போது என்ன செய்தாலும் ஈடாகாது.என்றாலும் அதில் அவனுக்கும் ஒரு சுயநலம் இருந்தது.
எங்கே அறையைக்காலி செய்தால் மீண்டும் இங்கே இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அவனது அச்சம்தான் என்னை அங்கே தங்க வைத்தது.
அந்த இரண்டு மாத வாடகைப் பணமும் பின்னாளில் பணம் கிடைத்தபிறகு தந்தால் போதும் எனச் சலுகையும் தந்திருந்தான்.
மறுநாளே எனது சொத்தாக நான் சேகரித்து வைத்திருந்த சில புத்தகங்களையும் ஆடைகளையும் அழுக்கு ஷுவையூம் ஒரு பெட்டியில் போட்டு நிரப்பி அந்த மேன்ஷனுக்கு குடி பெயர்ந்தேன்.அடுத்த நாள் காலை எனக்கு அறிமுகமான பெண்தான் ’சிம்லி’.நீல பாவாடை, வெள்ளைச்சட்டை மடித்துக்கட்டப்பட்ட இரட்டைச்சடை பின்னலில் பச்சை ரிப்பனுடன் பள்ளிக்கு போகும் அவரசத்துடன் ஒரு கையில் இட்லி பொட்டலங்கள் நிறைந்த ஒயர் கூடையும் இன்னொரு கையில் எவர்சில்வர் சாம்பார் வாளியுமாக அறைக்குள் வந்து நின்றாள்.
"அண்ணா இட்லி வாங்கலியாண்ணா...."?
"யாரும்மா...."
"இட்லிண்ணா"
"வேணாம்மா நான் கீழே கடையில் சாப்டுக்கறேன்..."
அவள் போக வில்லை இட்லி கூடையை கீழே வைத்து விட்டு என்னைப் பார்த்து சிரித்தாள்.
"என்னம்மா சிரிக்கற"
"ஒண்ணுமில்லைண்ணா நீங்க டைரக்டுருங்களா...."
"யாரும்மா சொன்னாங்க "
"தோ இந்த ரூம்ல இருப்பாரே கண்ணாடி போட்டுக்னு ஒரு அண்ணன் அவரு சொன்னாரு.... நாளையிலருந்து நம்ம ரூம்ல புதுசா ஒரு டைரக்டர் தங்கப்போறாருன்னு"
இன்னும் ஏதோ சொல்ல வந்த அவள் கண்களில் மகிழ்ச்சியும் பரவசமும் மின்னிக்கொண்டிருந்தன.
"பரவாயில்லையே நல்லா பேசறீயே ...பொட்டலம் எவ்ளோம்மா...."
"அஞ்சு ரூபான்னே... ஒன்னு கொடுக்கட்டா....."
அவளே ஒரு பொட்டலத்தைப்பிரித்து வாளியைத்திறந்து இட்லியின் மேல் சாம்பாரையும் ஊற்றித் தந்தாள்.
"எங்க ஸ்கூலுக்குகூட போன வருஷம் ஒரு டைரக்டரு வந்தாருண்ணா இப்போ கூட ஒரு படம் வந்துச்சே "குயிலு"ன்னு,அந்தப் படத்துல ஸ்கூல் சீன்ல ஒரு பொண்ணு நடிச்சதே அது எங்க ஸ்கூல்தாண்ண..." என்னைக்கூட அப்ப வரிசையில நிகச்சொன்னாங்க டைரக்டர் கையில ஒரு போட்டோவை வெச்சிக்கினு என் முகத்துல கூட வெச்சிப்பாத்தாரு......"
"......அப்புறம்....."
"என்னாச்சின்னு தெரியலைண்ணா.... ’டி’ செக்ஷன்ல இருக்குற பார்வதியை கூட்டிக்கினு போய்ட்டாங்க ... அவதாண்ணா அந்தப் படத்துல நடிச்சுருந்தா...
அதன் பிறகு இரண்டு நாட்களாக தொடர்ந்து காலையில் என் அறைக்கு வருவதும் இட்லி பொட்டல ஒயர் கூடையை என் அறையிலேயே வைத்துவிட்டு ஒவ்வொன்றாக கையிலெடுத்துச்சென்று மற்ற அறைகளுக்குத் தருவதுமாக இருந்தாள்.
அறைக்கு வந்த நான்காவது நாளில் துவங்கியது எனக்கான பிரச்சனை.வர வேண்டிய பணம் எதுவும் கைக்கு வராததால் பெரிய நெருக்கடி.புதிய இடத்திற்கு வந்தால் இது தான் பிரச்னை.
பழைய இடமாக இருந்தால் கை மாத்தாக ஏதாவது வாங்கி பிறகு திருப்பிக் கொடுத்து விடலாம்.
ஆனால் இங்கே யாரையும் தெரியாது.அப்படியே தெரிந்தாலும் கவுரவப்பிரச்னை.
காலையிலிருந்தே பசி கிள்ள ஆரம்பித்தது.சிம்லி வரும் நேரமாகப் பார்த்து கதவை அடைத்து வைத்திருந்தேன்.இரண்டு முறை தட்டிப் பார்த்து விட்டுப் போய் விட்டாள்.
கடன் கேட்டு சாப்பிட்டிருக்கலாம்.ஆனால் நான் அப்படி செய்யாததற்கு கவுரவ பிரச்சனை மட்டும் காரணமல்ல.சிம்லியின் அம்மா தான் ஒரே காரணம்.கடன் மட்டும் கொடுக்கவே கூடாது என சிம்லியிடம் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் பாடம் எடுத்து அனுப்பி வைப்பாளாம்.முன்னொரு முறை யாரோ கடன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு கணக்கில் எசகு பிசகாக மாற்றிச்சொல்ல மேன்ஷனுக்குள் சிம்லியின் அம்மா வந்து அத களம் பண்ணிவிட்டாளாம்.அதிலிருந்து சிம்லியிடம் யாரும் கடன் சொல்வதில்லை.அவளும் கடன் கொடுப்பதில்லை.இவையெல்லாம் இடைப்பட்ட நாளில் நான் வாட்ச்மேன் மூலமாகத் தெரிந்து கொண்ட விஷயங்கள்.
இதன் காரணமாகத்தான் சிம்லி வந்த போது கதவைக்கூட திறக்காமல் அமைதியாக இருந்து விட்டேன்.
ஆனால் கொடிய பகல் பொழுது வந்தது.
பசி என்னை மிகவும் இம்சித்தது.
கூடாததற்கு இந்த பறவைகளின் சத்தம் வேறு.
அறைக்கும் வராந்தாவுக்குமாக நடந்து கொண்டிருந்தேன்.
மாலை கடற்கரைச் சென்றேன்.இன்னும் ஒருநாள் ஓட்டிவிட்டால் போதும் திங்கள்கிழமை ஒரு நண்பனின் அலுவலகத்திற்கு சென்று பணம் வாங்கி சமாளித்துவிடலாம்.மறுநாள் காலை பசியுடன் விடிந்தது.தலை சுற்றல் வேறு.
காலையில் சிம்லி கூடையுடன் வந்தாள்.
நான் அமைதியாகச்சிரித்தேன்
"இட்லி வாங்கலியாண்ணா"
"உடம்பு சரியில்லைம்மா"
"கூடை இங்கயே இருக்கட்டும்ண்ணா"
வழக்கம் போல கூடையை வைத்துவிட்டு இரண்டொரு பொட்டலங்களுடன் மற்ற அறையை நோக்கிச் சென்றாள்.என் முன் இட்லிப் பொட்டலங்கள்.என் வயிற்றிலோ பசி.
அவள் திரும்பி வந்தாள்.நேரமாகிவிட்டது என அவசரத்துடன் கூறிக்கொண்டு கூடையையும் வாளியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
நண்பர்களே இந்த இடைப்பட்ட நேரத்தில் நான் செய்தது கேவலமான் காரியம்.என்றாலும் என் நிலையில் வேறு யார் இருந்தாலும் இதையே செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.நான் என் கரியத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை.என்றாலும் இதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏதோ என் மனம் ஆசுவாசப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள்.
சிம்லி சென்றதும் அவசர அவசரமாக அந்த இட்லி பொட்டலங்களை பிரித்து அறையிலிருந்த சர்க்கரையைப்போட்டு வயிற்றில் தள்ளினேன்.பசியில் விழி பிதுங்கி நீர் தள்ளியது.கவனமாக அந்த பொட்டல காகிதத்தை மடித்து ஒரு உறைக்குள் போட்டு பத்திரப்படுத்திக்கொண்டேன்.வெளியே போகும் போது குப்பையில் போட, அடுத்த __ந்தாவது நிமிடம் வெளியே சத்தம் கேட்டது.சிம்லியின் அம்மா கூடவே சிம்லியின் அழுகுரல்
"எவன் கிட்டடி குடுத்த சொல்லு.."
"நானே அஞ்சுக்கும் பத்துக்கும் நாய் படாத பாடுபடறேன். நீ என்னடின்னா துட்டைத் தாரவாத்துட்டு வந்து நிக்கற,இட்லி குடுத்துட்டு காசை ஒழுங்காவாங்கினா தானா இருக்கும்.நீ ப்ராக்கு பாத்துக்குன்னு இருந்தா....."
சிம்லியின் முதுகில் அடிவிழுந்தது.
எனக்கு வலித்தது.
சிம்லியின் அழுகுரல் எனக்குள் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது.அந்த அப்பாவிச்சிறுமி அடி வாங்க நான் தான் காரணம்.
சட்டென ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வியது.
ஒருவேளை சிம்லி என்னை காட்டிகொடுத்துவிடுவாளோ!
அதோ இவரு தாம்பா அந்த இட்லி திருடன் .... அந்த டைரக்டர் இட்லியை திருடிட்டாருப்பா....
..
யார் யாரோ என் முதுகைக் காண்பித்து பேசுவது கேட்டது.மவுனமாய் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துவிட்டேன்
அடுத்த சில நொடிகளில் சத்தம் முழுவதுமாக அடங்கியது.அதன் பிறகு வெகு நேரம் சிம்லியின் அழுகுரல் எனக்குள் தொடர்ந்து ஒலித்து இம்சித்துக் கொண்டிருந்தது
திங்கட்கிழமை வந்தது.என் கவலைகள் தீர்ந்தன.
தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நான் சிம்லி வரும் நேரத்தில் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு அறைக்குள் அடைந்து கிடந்தேன்.
சில நாட்கள் சென்றபின் இந்தச் சம்பவம் முழுசாக என் மனதை விட்டு நீங்கிய ஒரு காலையில் வாசல் பக்கமாக நின்றிருந்த போது கூடையுடன் சிம்லி வருவதைப்பார்த்தேன்.அவள் என்னைப் பார்த்து வழக்கம் போல "இட்லி வாங்கலியாண்ணா" எனக் கேட்பாள் என எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து எதுவும் பேசாமல் கடந்து சென்றாள்.எனக்கு யாரோ பின் மண்டையில் அடித்ததைப்போலிருந்தது.
அதன் பிறகு என் வாழ்க்கை எங்கெங்கோ உழன்று திரிந்து இறுதியில் உத்வி இயக்குனராக மாறி படிப்படியாக வளர்ந்து இன்று இயக்குனராகப் பேரும் புகழும் வசதியுமடைந்து விட்டேன்.ஆனாலும் என் பசி காலத்து அந்தப் பறவைகளின் சத்தம் எப்போதாவது ஒரு முறை என் நினைவில் வ்ரும் போதெல்லாம் சிம்லியின் முகம் என் நினைவில் ஆடும்.
அதனால் தான் இம்முறை அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் சட்டென பன்னிரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் அவளை என்னால் அடையளம் காண முடிந்தது. அன்று மாலையே ஏஜெண்டிடம் புகைப்படத்திலிருந்த மூவரைத் தேர்வு செய்து மறுநாள் தேர்வுக்கு அழைத்து வரும்படி கூறியிருந்தேன்.அதில் சிம்லியும் ஒருத்தி.காலையில் அலுவலகத்தில் நுழையும் போதே மூன்று பெண்களையும் பார்த்து விட்டேன்.
அறைக்குச் சென்று அமர்ந்து சில நிமிடங்களில் மூவரையும் அழைத்து வரும்படி கூறியிருந்தேன். சிம்லியின் தோற்றம் மாறியிருந்தது.நான் இரண்டொருமுறை அவள் என்னை அடையாளம் காண்கிறாளா எனக் கூர்ந்து கவனித்தேன் .
ஏஜெண்டை அழைத்து அதில் சிம்லியை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பதாகக் கூறினேன்.ஏஜெண்டுக்கு ஆச்சர்யம்
அரை மணி நேரம் கழித்து என் உதவியாளன் மகேஷ் என் அறைக்குள் வந்தான்.
"என்ன மகேஷ்"
"சார் அந்தப் பொண்ணு நடிக்கமாட்டேன்னுடுச்சாம்"
ஏன் என நான் மகேஷைக் கேட்கவில்லை
நன்றி: அமிர்தம் சூர்யா
கதிர்பாரதி
(ஜனவரி 2009 கல்கியில் பிரசுரமானது)
April 9, 2009
காலம் வியக்கும் கலை:சிட்டிசன் கேன்
வாழ்க்கையின் வியத்தகு விஷ்யமே இயற்கையின் ரகசியம்தான்.கடைசிவரை எந்தமனிதனும் ¢இயற்கையின் ரகசியத்தை முழுமையாக அ அறிந்து கொள்ள முடியாமலே இறந்தும் போகின்றான்.மனிதனின் இந்த தோல்விதான் இயற்கைக்கு நிகரான் அமசங்களை கொண்ட கலையயை உருவாக்குவதில் அவனை தீவிரமாக ஆழ்த்துகிறது.இப்படியான் அவனது படைப்பு மனநிலைக்கு இத்ர கலைகளைக்காட்டிலும் திரைப்படத்துறை அதிக சாத்தியப்படுகளையும் வெளியையும் கொண்டிருப்பதால் இறுதியாக எல்லா கலைஞர்களும் தேர்ந்தெடுக்கும் துறை சினிமாவாக இருக்கிறது.ஆனால் அத்தகைய சினிமாவின் வரலாற்றில் பார்வையாளனனின் அனுபவத்தை கடந்து முழுகலைவீச்சுடன் அதன் பல்வேறுவித்மான கலை செயல்பாட்டுகளுக்கு சாத்தியமளித்து உருவான திரைப்படங்களுள் மிகச்சிறந்த படம் என்று ஒன்றை குறிப்பிடுவோமானால் அப்படம் 1941ல் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டிசன் கேன் ¢¢
இன்றும் உலகின்¢ தலைசிறந்தபடம் எது என்று விமர்சகர்களிடம் கேட்டால் பத்துக்கு எட்டு பேர் குறிப்பிடும் திரைப்ப்டம் 'சிட்டிசன் கேன'¢ ஆக இருக்கிறது.திரைப்பட கல்லூரி மாணவர்கள்,விமர்சகர்கள்,அறிஞர்கள் ஆகியோரை இன்றுவரை அதிக மயக்கத்திலாழ்த்தும் சொல் 'சிட்டிசன் கேன'¢.அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூ¢ட் சமீபத்தில் வெளி¢யிட்ட தலைசிறந்த நூறுபடங்களின் பட்டியலில் முதலாவது படமாக தேர்ந்தெடுத்திருப்பதும் சிட்டிசன் கேனைத்தான்.1941ல் வெளியான படம் கிட்டதட்ட 70 வருடங்களை கடந்த பிறகும் இன்றும் அத்ற்கு பிறகு வந்த அனைத்து படங்களையும்¢ பின்னுக்குதள்ளி காலத்தின் பரிசுகளாக கிடைத்திருக்கும் தொழில் நுடபங்களையும் உதாசீனப்படுத்தியிருக்கிறதென்றால் அப்படி என்ன சிறப்பு அந்த படத்தில் இருக்க .முடியும்.
சாதாரண கதை
கதை என்னமோ சாதாரணமானதுதான் அமெரிக்காவில் கொடிகட்டிபறந்த பத்திரிக்கையுலக ஜம்பவான் சார்லஸ் ஃபோஸ்டர் கேன் என்பவர் இறக்கும் தருவாயில் 'ரோஸ்பட'¢ ஒற்றை சொல்லை பிரிந்த உதடுகளின் வழியே உதிர்க்கிறார். அந்த சொல்லில் ஏதோ ஒரு ரகசியம்இருப்பதாக உணரும ஒரு ¢பத்திரிக்கையாளன் ¢ அதனைதேடி பலரிடம் அலைகிறான்.அவர்கள் மூலமாக ¢சார்லஸ் போஸ்டர் கேனின் வாழ்க்கை பல ப்ளேஷ்பாக்குகளின் மூலம் காண்பிக்கபடுகிறது. இறுதிவரை ரோஸ்பட் என்ற அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அந்த நிருபரால் முழுவதுமாக அறிந்துகொள்ளப்படமுடியாத நிலையில கேமரா கேனின் வீட்டுக்குள் பழைய பொருட்கள் எரிக்கப்படும் இடத்தை நோக்கி கேமரா நுழைகிறது ¢அங்கே எரியும் மரப்பொருட்களின் நடுவில் சுவாலைகளுக்கு நடுவே ஒரு மரப்பொருளின் மேல் நாம் காணும் எழுத்துக்கள் ரோஸ்பட.¢. படம் அத்தோடு ஒரு புதிரை நம் மனதில் உண்டாக்கிவிட்டு நிறைவு பெறுகிறது.வெறும்னே சில வரிகளுக்குள் இந்தபடத்தின் கதையை இப்படி எழுதிவிட முடிந்தாலும்¢ இப்படத்தின் திரைக்கதையை குறித்தும் திரைப்பட உருவாக்கமும் குறித்தும் எழுதப்போனால் அது ஆயிரம் பக்கங்களையும் தாண்டி எழுத வேண்டியதிருக்கும்.
அசாதாரணமான திரைக்கதை
¢ ஒரு த்டுப்புவேலியில்' யாரும் இங்கே அத்துமீறக்கூடாது 'என்ற உத்த்ரவு. அதனை கேம்ராவின்மூலம் மீறியபடி படத்தின் முதல் ஷாட் துவங்கி ஒருபங்களாவினுள் நுழைகிறது அங்கே முன்பே குறிப்பிட்ட படி நாயகன் கேன் மரணத்தருவாயில் படுத்திருக்கும் காட்சி. ரோஸ்பட் என்று நாயகனின் உதடு முணுமுணுப்பது க்ளோசப்பில்.தொடர்ந்து கிட்டத்ட்ட 20து நிமிடத்திற்கு விறுவிறுப்பான பல ஷாட்டுகளின்தொகுப்புடன் ஒரு செய்திப்ப்டம் ..அதில் சிறுவயதில் தந்தையை பிரிந்து தாயுடன் வறுமைக்கு ஆளாகும் சார்லஸ்கேன் தன் மேல் காலம் திணித்த தடைகளையும் இன்னல்களையும் எப்படி அடித்து நொறுக்கி பத்திரிக்கை உல்க ராட்சசனாகவும் கோடீஸ்வரனாகவும் வளர்ந்தான் என்பதை அது விவரிக்கிறது.படத்தை பார்க்கும் தயரிப்பாளர் படத்தில் ஏதோ ஒரு முக்கிய குறை இருப்பதாகவும் சார்லஸ் கேன் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டும்படியும் கூற நிருபர் ஒருவன் அப்பணியில் ஈடுபடத்துவங்குகிறான்.முத்லாவதாக அவ்ன் சந்திப்பது சார்லஸ் கேனினுடைய இரண்டாவது மனைவி சூசனை.முழுவதும்குடிகாரியாக மாறிப்போன சூசன் முதலில் அவனை விரட்டியடிக்கிறாள்.அதன்பிறகு இரண்டவதாக சார்லஸின் கார்டியன் ஒருவரை அந்நிருபர் சந்திக்க அவர்மூலம் சிறுவயதில் சார்லஸ் த்ன் தாயிடகிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து செல்லப்படும்காட்சி காண்பிக்கபடுகிறது. அத்னை தொடர்ந்து கேன் அதிர்ஷ்டத்தின்மூலம் பணக்காரனாகியதையும்,தொடர்ந்து பத்திரிக்கையுலகில் நுழைந்து போட்டி பத்திரிக்கையின் நிருபர்களை தந்திரமாக தன் வசம் இழுத்து அழிக்க முடியாத அசுரனாக தொழிலில் பெருவளர்ச்சியடைந்ததையும் முதல் திருமணத்தை செய்ததையும் அவரது பத்திரிக்கை பணியாளர்¢ செய்தியாளனிடம் சொலவதன் மூலாமாக் நாம் அறிந்துகொள்கிறோம்
அதன் பின் இரண்டவது மனைவியான சூசனை ஒரு மழைநாளில் சாலையோரம் சந்திக்கிறார் மிஸ்டர் கேன்.அன்று இரவே இருவரும் காதல்வசப்பட்டு ரகசிய திருமணம் செய்துகொள்ள கேனின் அழிவுப்படலம் ஆரம்பமாகிறது.அவரது மிதமிஞ்சிய அதிகார வெறி நியுயார்க நகர கவர்னர் தேர்தலுக்கு அவரை போட்டியிடவைத்து த்லைகுப்புற விழவைக்கிறது.ஆனாலும் அவரால் த்ன்னுடைய ஆணவத்திலிருந்து முழுவதுமாக தன்னை இறகிக்கொள்ள முடியவில்லை. தகுதியான் குரல்வளமில்லாத தன் புது மனைவியை பாடகியாக்க தானே ஒரு ஓபரா அரங்கினை கட்டி பாட ¢வைக்கிறார்.மறுநாள் த்னது பத்திரிக்கையில் அத்னை பாராட்டி எழுதாத ஊழியனை வேலையைவிட்டே விரட்டுகிறார்.அதேசமயம் இதரபத்திரிக்கைகளின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி சூசன் பெரும் குடிகாரியாகிறாள்.இந்த தொடர் தோல்விகளால் சுருங்கி போகும் தம்பதியர் இருவரும் ஒரு பிரம்மாண்ட மாளிகைகட்டி அதில் யாருமற்ற தனிமையில் வசித்துவருகின்றனர்.ஒரு கட்டத்தில தான் மிகவும் நேசித்த மனைவியும் பிரிந்துபோய்விட தனிமையில் பரிதாபமாக வாழும் கேன் கடைசியில் அனாதரவாக ரோஸ்பட் எனும் ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு இறந்து போகிறார்.
மேற்சொன்ன சம்பவங்கள் அவரது ஊழியர்கள் மற்றும் இரண்டாவது மனைவி செய்தியாளனிடம் சொல்வதன் மூலமாக நமக்கு காட்சிகளாக விவரிக்கபடுகிறது. என்றாலும் ரோஸ்பட் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை கடைசிவரை அந்த செய்தியாளனால் பெறமுடியவில்லை..இறுதியி.ல் நெருப்புகூட்டில்வைத்து எரிக்கப்படும் மரப்பொருள் ஒன்றில் ரோஸ் பட் என எழுதப்பட்டிருக்கிறது.அப்பொருள் அவன் சிறுவயதில் அவனதுதாயாரால் பரிசளிக்கப்பட்ட ஒரு விளயாட்டு பொருள்..ஒட்டு மொத்தமாக ஒருவன் த்ன் வாழ்க்கையில் எத்னை மகிழ்ச்சியான தாக கருதுகிறானோ அதுமட்டுமேதான் கடைசிவரை நினைவில் எஞ்சி நிற்கிறது அவ்வகையில் பார்க்கும் போது சார்லஸ் கேனின் வாழ்க்கையில் எஞ்சியிருந்தது எல்லாம் அந்த சிறுவயது நாட்கள் மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாக விமர்சகர்கள் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள்.உண்மையில அந்த கடைசி காட்சி மூலம் என்ன சொல்லவருகிறார் என்பதை ¢பார்வையாளனது அனுமானத்துக்கே விட்டுவிடுகிறார்.இப்படத்தை குறைந்தது இரண்டாவது முறையாக பார்க்கிறபோதுதான் நான் மேற்சொன்ன முழுகதையுமே ஒரு பார்வையாளனுக்கு புரியவ்ரும்.
சர்ச்சை
அதே போல ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் நாம் வியப்புறும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வ்டிவம் பெற்றிருந்தது இப்படத்தின் சிறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம்.இந்த திரைக்கதை வடிவம் தான் பிற்பாடு வந்த அகிரகுரோசாவின் ரோஷாமான் உட்ப்ட பல படங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இத்த்னை சிறப்பு வாய்ந்த இப்படத்தின் திரைக்கதை யார் எழுதியது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை இருந்துவருகின்றன.ஹாலிவுட்டின் பிரபல த்யாரிப்பாளர் கம் இயக்குனரான ஜோசப் மாணிக்வெச் சின் சகோதர் ஹெர்மன் மாணிக்வெச்தான் படத்தின் முழுதிரைக்கதை யையும் எழுதியது என்றும் இயக்குனரான ஆர்சன் வெல்ல்ஸ் அதில் துளிகூட பங்களிக்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு த்ரப்பில் படம் முழுகக முழுக்க ஆர்சன் வெல்ஸின் வாழ்க்கை சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.இப்படத்தில்வரும் கதாநாயகனை போலத்தான் சிறுவயதில் இவரும் தன்அம்மாவை இழந்து பரிதவித்தார்.பதினைந்தாவது வயதில் அதே போல் அப்பாவையும் இழந்தார்.கதாபாத்திரம் குணாதிசயம் ஆகியவற்றில் கேன் ஆர்சன் வெல்ஸையே பிரதிபலிக்கிறார் ஆகவே இப்படத்தின் திரைக்கதை அவருக்கே மூழ்வதும் உரித்தானது. வெறுமனே ரெண்டு வசனம் எழுதிக்கேடக மாணிக்வெச்சிடம் போக வந்ததால் ஏற்பட்ட ¢வினை இது,என இன்னொருதரப்பும் கூறுகிறது.இது குறித்து ஹாலிவுட்டில் 1996ல் ஒரு டாக்குமெண்டரிபடமே வந்திருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னதான் படத்தின் திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் மேல் இத்த்னை சந்தேகம் பலருக்கும் எழுந்தாலும் ஒரு விஷயம் அவர்களது அத்தனை பேருடைய வாயயையும் அடைத்து விடும் .அது படத்தில் பயனபடுத்தப்படிருக்கும் தொழில்நுடபம். கதையயை மிகவும் நேசித்த ஒரு இயக்குனருக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் சாத்தியபடும் என்ற காரணத்தால் இந்த சர்ச்சையில் பெரும்பாலோனோரின் ஓட்டு இயக்குனர் ஆர்சன் வெல்ஸுக்கு சாதகமாகவே விழுகிறது.அந்த அளவிற்கு இப்படத்தின் திரைக்கதையை போலவே தொழில்நுட்ப கூறுகளும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் ப்யனபடுத்தபட்டிருக்கின்றன.
தொழில் நுட்பம்¢
திரைப்படத்தை முழுமையாக கற்கும் மாணவன் ஒருவன் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஆராய்ச்சி பண் ணினால் போதும் நிச்சயம் அவன் திரைப்ப்டத்துறையில் ¢மேதையாகிவிடமுடியும்¢ அந்த அளவிற்கு விவரித்து எழுதுவதற்கு படத்தின் ஒவ்வொருஷாட்டிலும் பல அமசங்கள் கொட்டிகிடக்கின்றன.இப்படத்தின் மிககுறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவுக்காக பயன்படுத்தப்படிருக்கும் டீப் ஃபோகஸ் லென்ஸ்கள். படத்தளத்தில் கேம்ரா குவிமையம் கொள்ளும் பாத்திரம் அல்லது பொருள் ஆகியவ்ற்றின் முன்னும் பின்னுமாக உள்ள சகலமும் துல்லியமாக பதிவாக்கம் பெற்று தந்த விதத்தில் இந்த டீப் ஃபோகஸ் லென்ஸுகளின் பங்களிப்பு அளப்பரியது.மட்டுமல்லாமல்படத்தின்கேமரா கோணங்கள் மற்றும் நகர்வு ஆகியவை தஞ்சை பெரிய கோயில் போன்ற மகத்தான் கலைபடைப்புகளின் போது ஒருகலைஞன் படும் மெத்தனங்களுக்கு நிகரான கடப்பாடும்,உழைப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவை.அதிலும் குறிப்பாக கேன் தானும் மனைவியும் தனித்துவாழும் பங்களா உள்ளறைகாட்சிகளில் ஒளி கட்டமைவும் , காமராநகர்வும் கோணங்களும் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடுகின்றன. இப்படத்தின் அதி முக்கியமான இன்னொரு கதாநாயகன் எனும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் க்ரேக் டொனால்டின் பங்கு வியக்கும் வண்ணத்தில் அமைந்திருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் கேன் பங்களாவில் அவர் சேர்த்துவைத்த சொத்துக்கள் அனைத்தும் வெற்று பொம்மைகளாக நின்று கொண்டிருக்க பத்திரிக்கையாளர்கள் வெளியேறுகிற காட்சியின் போது மெல்ல அவர்களிடமிருந்து விலகி பின் நகர்ந்து வரும் காமரா அப்படியே கூரை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்ப்பது போன்ற பரந்த காட்சி ஆகச்சிறந்த இலக்கியபடைப்புகளுக்கு ஈடானது.ஒளிப்பதிவை போலவே படத்தில் படத்தொகுப்பு மற்றும அரங்க நிர்மானம்¢ஆகிய இரண்டும் இப்படத்திற்கு இரண்டு தேர்ந்த கவசங்கள்.¢ படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் செய்தி படத்தில் காண்ப்படும் உயிர்துடிப்பு மிக்க எடிட்டிங் மற்றும் ஒன்று நீங்கிய கையோடுமற்றொன்று வரும் வைப, போன்ற பல உத்தி கள் இன்றைக்கு உருவாக்கப்படும் நவீன படங்களுக்கும் சவால்விடும் கலைநயமும் தொழில்நேர்த்தியும் கொண்டிருப்ப்வை.படத்தின் மூழு திரைக்கதையுமே நினைவலைகளின்மூலமாக தொகுப்பாக சொல்லப்படுகிற காரணத்தினால் இயல்பாகவே படத்தொகுப்பின் மேதமையை ¢படம் முழுவதும் வெளிப்பட்டுத்தபட்டுள்ளது.¢தனி பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ஒரு காட்சியில்¢ கேன் தன் மனைவியை கணவரும் சந்தர்ப்பத்தில் விஸ்தீரமான் ஹால் ஒன்று காண்பிக்கப்படுகிறது .அத்ன் மறுகோடியில் தரையில் அமர்ந்திருக்கும் மனைவியை நோக்கி கேன் இறங்கி வருவார்.அரங்கில் அப்போது பலத்ரப்பட்ட சிலைகள் காண்ப்படும் அவற்றில் தற்போது நம் இந்திய அரசின் சின்னமாக இருக்கும் கவிழ்ந்த தாமரை மீதமர்¢ந்திருக்கும் மூன்று சிங்கங்கள் கொண்ட அந்த சின்னம் ஒரு பிரமாண்ட சிலையாக நின்று கொண்டிருக்கும். இந்த சிலையை இந்திய அரசாங்கத்தின் சின்னமாக அங்கீகாரம் செய்த இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படட்தே 1946ல் தான். அத்ற்கு முன்பே 1941ல் இச்சிலை வடிவம் இப்படத்தில் பிரம்மாண்டமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.பணத்தை கடந்து வெற்று கலைபொருள்களை உலகமெங்குமிருந்தும் சேகரித்துவைக்க்க துடிக்கும் ஒரு பண முத்லையின் தடித்த்னத்தை காண்பிக்க இயக்குனர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
விருது வெகுமதி
இத்த்னை சிறப்பு பெற்ற இத்திரைப்படம் அன்று வெளியான காலத்தில் சுமாரன் வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது.ஆஸ்கார் விருதுக்கு பல துறைகளில் பரிந்துரைக்கப்படிருந்தும் திரைக்கதைகான ஒரே ஒரு விருது மட்டுமே இப்படத்திற்கு வழங்கப்பட்டது.அத்ன் பிறகு ஏறக்குறைய எவராலும் பொருட்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழலில் 20 வருடங்கள் கழித்து பிரான்சிலிருந்து ஒரு அதிசயம் நிகழ்ந்தது.நியூ வேவ் என அங்கு எழுந்த புதிய அலையின் கர்த்தாவான விமர்சகர் ஆந்த்ரே பஸின், மற்றும் இயக்குனர்கள் ட் ரூபோட்,கொடார்ட்,போன்ற்வர்கள் கதையாசிரியர் திரைகதையாசிரியர் ஆகியோரை கடந்து ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனருக்கு மட்டுமே படைப்புரிமை பெற்றது என்ற கொள்கையை முதன்முறையாக வலியுறுத்தினர்.அத்ன்படி அவர்கள் இந்தபடத்தை பார்த்து விட்டு இதுதான் அசல் கலை சினிமா என தலையில்தூக்கிவைத்து கொண்டாட அப்போது துவங்கியது சிட்டிசன் கேனின் இரண்டாவது இன்னிங்க்ஸ்.
ஆர்ஸன் வெல்ஸ்
படத்தின் இயக்குனரான ஆர்சன் வெல்ஸுக்கு சிட்டிஸன் கேன் ஒரு ¢ முதல்படம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும்? மட்டுமல்லாமல் அவரே அப்படத்தில் நாயகன் சார்லஸ் கேன் ¢ ஆகவும் நடித்து ஆகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர்மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அத்த்னை பேரும் புதுமுகங்கள் என்பதுதான் இப்படத்தின் முக்கியசேதி. 1915ல் பிறந்த ஆர்சன்வெல்ஸ் சிறுவயது முதலே கலையின்மேல் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார் என்பதைவிட வெறிபிடித்தலைபவராக இருந்தார் என்பதுதான் முற்று முழுக்க சரி..தன் பதினைந்தாவது வயதிலிருந்தே மேடை நடகங்களில் நடிக்கதுவங்கிய ஆர்சன் வெல்ஸ் படிப்படியாக வளர்ந்து அப்போது பிரபலமாகி வந்த வானொலிநிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராக இருந்து புகழ்பெற்றார்.அந்த புகழ் அவரை ஆர்.கெ.ஒ ஸ்டுடியோவில் இயக்குனராக அழைக்கும் அளவிற்கு வேலை செய்தது. தன் 26ம் வயதில் சிட்டிசன் கேன் எனும் அசாத்தியமான படத்தை இயக்கி நடித்து வாழ்வில் அழியா புகழை பெற்றார். இப்படத்தில் வரும் மையகதாபாத்திரத்தின் நல்ல பகுதிகளுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு காரணமென்றாலும் கதாபாத்திரத்தின் மோசமான குணங்களை படத்தின் த்யாரிப்பாளரான ஹாரவெஸ்டையே அதிகம் ஒத்திருப்பதாக அனைவரும் கூறினர்.இரண்டாவது படமான 'மாக்னிபிஷியண்ட் ஆம்பர்சன் '¢அவரது திறமைக்கு கட்டியம்கூறினாலும் ஆர்சனுக்கு அடுதடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.அத்ன்பிறகு ஐரோப்ப ஜப்பான் என அலைந்த வெல்ஸ் சிலபடங்களை இயக்கி நடித்திருந்தாலும் அதில் எந்த படமும் சிட்டிசன் கேன் அடிந்த கலையின் உச்சத்தில் ஒரு துளிய்யை கூட எட்ட முடியவில்லை. அக்டோபர் 11 1985ல் அமெரிக்க நாளிதழ்களில் நடிகர் யூல் பிரின்னர் ¢இறந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியான போது உடன் அருகில் மற்¢றொரு இறப்பு செய்தியும் வெளியானது தன் எழுபதாவது வயதில் சிட்டிசன் கேன் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் மரணமடைந்தார் என்பதுதான் அந்த செய்தி.
Subscribe to:
Posts (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...