July 13, 2017

பரிதிமாற் கலைஞர் -செம்மொழி சிற்பிகள்

பரிதிமாற் கலைஞர்
செம்மொழி சிற்பிகள் 



பிறப்பு ;06-07-1870,


அதுநாள் வரை சமஸ்கிருதம் மட்டுமே  மேலான செம்மொழியாக படித்தோரும் பண்டிதரும் போற்றிவந்த சூழலில் அதனை முழுவதுமாக மறுத்து தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக உலகுக்கு உரக்க கூவியவர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி.அவருக்கு பெயர்  பரிதிமாற் கலைஞர்.


செட்டிநாட்டைசேர்ந்த கண்டர மானிக்கம் எனும் ஊரில் பிறந்த பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரியார். தந்தை கோவிந்த ராச  சாஸ்திரி, தாய் லெட்சுமி அம்மாள். இவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.  துவக்க கல்விகளுக்குB பின்  பதினைந்தாம் வயதில் மதுரை சபாபதி முதலியாரிடம் மூன்றாண்டுகள் தமிழ் படித்த சாஸ்திரி .பின் கிறித்துவக்கல்லூரியில்  இளங்கலை பட்டபடிப்பில்  தமிழும் தத்துவமும் படித்து மாநிலத்திலேயே நான்காவதாக தேறினார். முதுகலை பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்து பாஸ்கர சேதுபதியின் கைகளால் அதற்காக பொற்பதக்கம் ஒன்றும் பெற்றார்.

படிக்கும்போதே  தமிழ் மீதான தணியாத தாகம் கொண்டிருந்த அவர் தனித்தமிழ் இயக்கங்களுக்கு முன்னோடியாக தன் பெயரை சூரிய= பரிதி  நாராயண = மால், சாஸ்திரி கலைஞர் என பொரூள் படும் வகையில் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார்..மட்டுமல்லாமல் தன் தமிழுணர்வை வகுப்பிலும் மாணவர்கள் மத்தியிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.ஒருமுறை மில்லர் எனும்  ஸ்காட்லாந்து பேராசிரியர் ஆங்கில கவி  டென்னிஸன் பாடல் ஒன்றை வானாளவ புகழ்ந்து இதுபோல் உலகில் வேறு யாரும் எழுதவே இல்லை இனியும்  எழுத முடியாது என ஆணவத்துடன் சவால்விட்டு கூற அதைக்கேட்டு பொறுக்க முடியாத சாஸ்திரி சட்டென எழுந்து நின்று தமிழில் கம்பரின் பாடல்கள அவற்றைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை எடுத்துக்கூற பேராசிரியர் மில்லர் ஆச்சர்யப்பட்டார். அப்போது மில்லருக்கு பரிதிமாற் கலைஞரின் மேல் உண்டான மதிப்பின் காரணமாக அவர் படித்து முடித்ததும் கிறித்துவ கல்லூரியிலேயே ஆசிரிய பணியும் வாங்கி தந்திருந்தார். அப்பணியின்போது சிறந்த தமிழ் மாணவர்களுக்கு தன் வீட்டில் பிரத்யோகமாக வகுப்புகள் எடுத்தார்.

நாடகத் தமிழின்மேல் ஆர்வமிக்கிருந்த பரிதிமாற் கலைஞர் ரூபாவதி, கலாவதி, மான விஜயம், போன்ற நாடகங்களையும் நாடகவியல் எனும் நாடகம் குறித்த இலக்கண நூல் ஒன்றையும் எழுதினார். முழுவதும் உதடுகள் ஒட்டாமல் பாடும் நெடிய நீரோட்ட கவிதையை தன் கலாவதி நாடகத்தில் அமைத்தார். பாவலர் விருந்து, தமிழ் வியாசங்கள் போன்றவை இவரது இன்ன பிற நூல்கள்

தானும் மாணாக்கர்களும் இயற்றிய நூல்களை ஆறு பாகங்களாக வெளியிட்டார். குமர குருபரரின் நீதி நெறி விளக்கத்திற்கு ஐம்பத்தோரு பக்கங்களில் உரையெழுதினார்.

தமிழைவிட சமஸ்கிருதமே மேலானமொழி என பிராமணர்கள் கொண்டாடிவந்த காலத்தில் பிறப்பால் பிராமணனாக இருந்தும் தமிழின் மேல்கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவித்தோடு அல்லாமல் தமிழ் மொழியின் வரலாறு குறித்து  முதன் முதலாக முதலாக நூல் ஒன்றையும் எழுதினார்.

தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கண்ட சி.வை தாமோதரம்பிள்ளை இவரை திராவிட சாஸ்திரி என அழைத்தார்.

தன் முப்பத்திரண்டாம் வயதில் மரணத்தை தழுவியபோது மில்லர் எனும் அந்த ஸ்காட்டிஷ் பேராசிரியர் கதறியழுத காட்சி வரது செம்மையான வாழ்வுக்குச் சான்று



இறப்பு; 02-11-1903

No comments:

இந்திய சினிமாவின் அரசியல் முகம் - ஒரு வரலாற்றுப் பருந்தின் பார்வை

                                                                                            1896- ல் மும்பையில் முதன்முறையாக சினி...