July 11, 2017

வெள்ளை பலூன் - சிறுவர் சினிமா

வெள்ளை பலூன்

1.

என்னருமை குட்டிபசங்களா  உங்களுக்கு இன்னிக்கு நான்  சொல்லபோற கதை பேர் என்ன தெரியுமா வெள்ளை பலூன் .. இது ஈரான் நாட்டு படம் இந்த படத்துல உங்களை மாதிரி ஒரு குட்டி பொண்ணுதான் கதாநாயாகி .அவ பேரு ரசியா .அவளுக்கு ஆறு வயசு தான் ஆவுது.அன்னைக்கு அவங்க ஊர்ல புது வருட பிறப்பு  கொண்டாட்டம்.அதனால ஊரே அன்னைக்கு திருவிழா மாதிரி இருந்தது . அன்னைக்கு  அவங்க அம்மா  வீட்டு சாமான்ல்லாம் வாங்க நம்ம ரசியா பொண்ணை கூட்டிகிட்டு கடைத்தெருவுக்கு போனாங்க. அங்க நம்ம ரசியாவும் அம்மா கையை பிடிசுகிட்டே வேடிக்கை பாத்துகிட்டே வந்துகிட்டே இருந்துச்ச  அப்ப வழியில ஒரு கடையை பாத்ததும் நம்ம ரசிய அப்படியே நின்னுடுச்சி. அது ஒரு தங்க மீன் கடை . அங்க கண்ணாடிக்குள்ள தங்க மீன்லாம் நல்ல துள்ளி துள்ளி குதிச்சு விளையாடிகிட்டே இருந்துச்சா. அதுல ஒரு மீனை பாத்தும் ரசியாவுக்கு அதை வாங்கிட்டு போவ ஆசை ஆசையா வந்துடுச்சி.

2

'
அம்மா அம்மா எனக்கு அந்தக குட்டி மீனை வாங்கி குடும்மா' ன்னு அம்மா கிட்ட கேட்க அம்மாவோ  எதுக்குடி இப்ப உனக்கு .. வீட்ல தான் தொட்டியில நிறைய மீன் ஏற்கனவே இருக்குல்ல  என  இப்ப இதுக்கு  வேற நூறு டோமன்  செலவழிக்கணுமா என் கையில இல்லைன்னு சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்துட்டாங்க. ஆனா ரசியாவுக்கு மனசே கேக்கலை . ஏன்னா அந்த தங்க மீனுக்கு மொத்தம் நாலு துடுப்பு .அது திரும்புறப்போ அப்படியே டான்ஸ் ஆடுறா மாதிரி இருக்கும் .அத்னால ரசியாவுக்கு அந்த மீனை எப்படியும் வாங்கிடனும்னு ஆசை.
வீட்டுக்கு வந்தும்  அம்மாகிட்ட அடம்புடிசசி கிட்டே இருந்தா .

3

இப்ப அவளோட அண்ணன் அலி வீட்டுக்குள்ள நுழைய ரசிய அவங்ககிட்ட போயி .. அண்ணா அண்ணா அம்மா கிட்ட சொல்லி எனக்கு  எப்படியாவது அந்த தங்க மீன் வாங்கி குடுன்னா கேட்டா.
.. எவ்வளவோ காசு?
..... நூறு டோமன்
.....நூறு டோமனா? அந்த காசு இருந்தா நான் ரெண்டு சினிமா பாப்பேனே
அண்ணா அண்ணா நீ அம்மா கிட்ட சொல்லி எனக்கு வாங்கி கொடுத்தா ..நான் உனக்கு இந்த பலூன் கொடுக்கிறேன்னு சொல்லி தன் கையில இருந்த நீல பலூனை நீட்டறா எனக்கு நீல பலூனை விட மாமா உனகு கொடுத்தாரே அந்த வெள்ளை பலூன்தான் வேணும் அதை தருவியா.
கண்டிப்பா தரேன்ண்னா
இப்ப அண்ணன் அவங்க அம்மாகிட்ட போயி நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்காம இருப்பியாமான்னு கேட்டு ரகசியமா காதுக்குள்ள எதுவோ கேக்கறான் . கடைசியா அவனுக்காக கொடுக்க வச்சிருந்த காசுல தங்கச்சிக்கு மீன் வாங்கித் தர அம்மா ஒத்துக்கறாங்க . .
.ஆனா எங்கிட்ட இப்ப ஐநூறு டோமன் ( ஈரான் ரூபாய்))  இருக்கே ..என சொல்ல ..நான் மீனை வாங்கிட்டு சில்லறை மாத்தி பத்திரமா எடுத்துட்டு வரேன்னு சொல்லி ரசியா வும் கண்ணாடி குடுவை ஒன்னை எடுத்துகிட்டு கடைத்தெருவுக்கு  குடுகுடுன்னு ஓட ஆரம்பிக்கிறா.


4
கடைதெருவுல அவ போற வழியில ஒரு குட்டி கும்பல் . ரசியா எட்டி பாக்குறா.. அங்க ஒருத்தன் பாம்பை வச்சு வித்தை காட்டிகிட்டு இருக்கான் .

ரசிய அதை ஆச்சர்யத்துடன் பாக்க அவகிட்ட இருந்த ஐநூறு டோமனை ( ரூபாய்)  பாமபாட்டி தந்திரமா அபகரிக்கிறான். அப்புறம் ரசியா அழாது புலம்பறதை பாத்துட்டு அவகிட்டயே பணத்தை பாம்பாட்டி திருப்பி கொடுத்திடறான் .அதை எடுத்துகிட்டு ரசியா அவசரமா தங்க மீன் கடைக்கு ஓடி போயி ..கடைக்காரன்கிட்ட மீனை கேக்குறா. கடைக்காரன் இப்ப அதுக்கு நூத்தி அம்பது டோமன் (ரூபா) விலை சொல்றான் . ரசியா நூறு டோமன்க்கு (ரூபாய்க்கு ) அதை கேக்க கடைக்காரன் குடுக்க மாட்டேங்கிறான். நம்ம ரசியா தான் குட்டி பொண்ணுல்ல அது முகம் வாடி போறதை பாத்துட்டு கடைசியில கடைக்காரன் நுறு  டோமனுக்கே  தர ஒத்துக்கிறன் .இப்ப ரசியா குடுவைக்குள்ள கையை விட்டு பாக்க அப்பாதான் அவளுக்கு அதிர்ச்சி .குடுவையில காசு இல்லை . கிழ பாக்குறா மேல பாக்குறா அப்படி இப்படி திரும்பி பாக்குரா ..ரூபாய காணலை .அப்படியே ரசியாவுக்கு கண்ணு முட்டிகிட்டு அழையா வருது.  கடைக்காரன்   பாப்பா அழாதேம்மா வந்த வழியே பொய் தேடிபாரும்மா கீழ எங்கனா விழுந்திருக்கும் என சொல்ல ரசியாவும் வந்த வழியாவே ஓடிபோய் பாக்குறா


5
அப்புறமா அங்க இங்க தேடி பாக்கவரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவுக்கு  வரவே அங்கே போய் பாக்க அட பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பாக்குறா . . பணத்தை ஒடிபோய்  எடுக்கரதுக்குள்ள வேகமாக வந்த ஸ்கூட்டரால பணம் பறந்து போய் ஒரு கடை வாசல் முன்னாடி கம்பி மேல விழுந்துடுத்து .அப்புறம் அது மெதுவா அடியில தண்ணியில்லாத கால்வாய்க்குள்ள  விழுந்துடுது.

 
கம்பிகளால் மூடப்படிருக்கும் கால்வாயை  எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கிட்டு அங்க வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.
6
பக்கத்து டெய்லர் கடையில் சென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..
 
அம்மாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு அண்ணனும் தங்கச்சியும் கவலை ப்படுறாங்க .   அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.

டெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.

7
அவரும் வீட்டில் இல்லை. வெளியில் போயிருப்பதாகவும் வந்ததும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான். அப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அலிக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை பிடுங்கிக்கிட்டு ஓடியாரான். அந்த பலூன் விக்கிறவன் இவன் பலூனை திருடுரான்னு நெனச்சி பீன்னால ஓடியாந்து இவனை அடிக்கிறான் . இரண்டுபேரும் கட்டிபிடிச்சி சண்டை போடறாங்க .அப்புறமாதான் பலூன் விக்கிற பையனுக்கு ரூபா நோட்டு கீழ விழுந்துகிடக்கற விஷ்யம் தெரிய வருத்து. அவனும் குச்சியை விட்டு பாக்குறான் . அதுவும் நடக்கவில்லை.
8
பபுள்கம்  மாதிரி ஏதாவது ஒட்டற  பொருள் இருந்தா அதை வைச்சி  எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூறி விட்டு நடையை கட்டுகிறான்.  இப்ப மழை வேற வர்றா மாதிரி இருட்டிக்கிடே போவ ..இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போராங்க  அண்ணனும் தங்கையும்.. வேற வழியியே இல்லாம ரெண்டு பேரும் சோகமா உக்காந்திருக்க அப்ப பலூன் விக்கிற பையன்  பலூன்ல்லாம் வித்துட்டு அந்த காசுல பபுள்கம்மோட வர்றான். அவனை பாத்ததும்  ரெண்டு பேருக்கும் பயங்கராமான சந்தோஷம். மூணுபேரும் நல்லா சந்தோஷ்மா சிரிச்சிகிடே பபுள்கம்மை பொட்டு நல்ல மென்னு அதை எடுத்து இப்ப குச்சி முனையில ஒட்டி கம்பிக்குள்ள் விட்டு தண்ணியில்லாத கால்வாயில் இருந்து போராடி பணத்தை எடுத்துடறங்க .. உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவரும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.

லூன்காரனும் விக்காத வெள்ளை பலூனோட ஜாலியா ரோட்ல நடந்து போறான் படமும் அத்தோட முடியுது,

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...