July 4, 2017

நகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்


ஹிரோஷிமா நாகாசாகி 

உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை
அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு விழுந்த மரண அடி .

 ஜப்பனிய மக்களின் மனதில் ஆறா வடுவாகிப்போன காயம் .ஜப்பானின் அடுத்த தலைமுறை இதன் குற்றவுனர்ச்சியிலிருந்து விலக தத்துவங்களை தேட துவங்கியது. இரண்டாம் உலக போருக்குப் பின்  அதிகார குவிப்பு சர்வாதிகாரம் பற்றி தீவிரமாக சிந்தித்த மேற்குலக சிந்த்னையாளர்கள்  இறுக்கமான் குடும்ப உறுவுமுறைகளும்   பெண்ணடிமையும் ஆணாதிக்கமும்  தான் குடும்ப அதிகாரத்தின் மையம் என்பதை  கண்டறிந்தனர். இப்படி பல மையங்களின் ஒருங்கிணைப்பில்தான் சர்வாதிகாரம் கட்டமைக்கபடுவதாக கண்டுபிடித்தனர்.

ஆகவே குடும்ப அமைப்பு உடைந்தால் தான் அதிகார குவிப்பு கட்டுடைக்கப்படும். குடும்ப அமைப்புக்கு காரணமான  உடைய பாலியல் இறுக்கம் தளரவேண்டும் ஒழுக்க விதிகள் கட்டுடைக்கப்படவேண்டும் என்றும் சிந்தனையாளர்கள் தீர்வாக  வரையறுத்தனர். ஜப்பானில் மாற்று சமூகத்தை கட்டமைக்க விரும்பிய புதிய தலைமுறை இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு கலை இலக்கியங்களை உருவாக்கியது .
நகிஸா ஓஷியாமா அவர்களூள் ஒருவர்

ஜப்பானிய இயக்குனர்களில் அகிராகுரசேவா, ஓசு, கோபாயாஷிக்கு அடுத்தபடியாக  போற்றப்படும் அதி  முக்கியமான இயக்குனர்   நகிஸா ஓஷியாமா.

அதிர வைக்கும் மனித உண்மைகள் தான் ஓஷியாமா படங்களின் பலம் .அவர் படங்கள் பேசிய அரசியல் உண்மைகள் ஜப்பானுக்குள் புதிய வெளிச்சத்தை உருவாக்கினஓஷியாமவின்  படங்களை கண்டு ஜப்பானே அதிர்ந்த்து.  இறுகிக்கிடந்த மரபின் கதவுகள் உடைந்து நொறுங்கின அரசாங்கம் அவரது படங்களுக்கு தடை விதித்தது. காரணம்  அவரது படத்திலிருந்த  கட்டற்ற பாலுறவு காட்சிகள் .

ஒரு பக்கம்  அவரது முந்தைய தலைமுறை இயக்குனர்களான ஓசுவும் குரசேவாவும் கோபாயாஷியும் உலக அரங்கில் ஜப்பான் கலாச்சாரா கொடியை பட்டொளி வீசி பறக்க விட  அதற்கு முற்றிலும் மாற்றாக  ஜப்பானின் இன்னொரு இருண்ட முகத்தை காண்பித்து   புதிய தலைமுறைக்கு சுய விசாரணையை கற்று தந்து ஜப்பானில் மாற்று சமூகத்தை கட்டியமைத்த்தில் ஓஷியாமாவின் பங்கு மகத்தானது .மட்டுமல்லாமல் அவை மனித மனத்தின் இருண்மைகளையும்  பேசியதால், ஜப்பானையும் கடந்து உலக சினிமாவின் ரெக்கைகளை விரித்துக்கொண்டன.

இத்தாலிய இயக்குனரும் பாலியல் உண்மையை  படங்களின் வழி சொன்னதற்காக பிற்பாடு மதவெறியர்களால் கொல்லப்பட்ட பசோலினி இவருக்கு முன்னோடியாக இருந்தார். அவர்  இத்தாலியின்  மதவாதத்தை அடித்து நொறுக்கியது போல இவர் ஜப்பானின் கலாச்சராத்தை குறி வைத்து தாக்கியதுதான் இவரது சிறப்பு .  அதே சமயம் ஓஷியாமாவின் படங்கள் சிறந்த திரைக்கதை  மற்றும் வரலாற்று பின்னணிகளுடன்  கலாபூர்வ உருவாக்கத்துடன் அமைந்த காரணத்தால்  ஓஷியாமாவின் படங்கள் உலக சினிமாக்களாக கருதப்படுகின்றன.


மாரச் 31 1932ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த ஓஷியாமா கியோட்டோ யூனிவர்சிட்டியில் அரசியலை மையபாடமாக்கொண்டு பட்டம் படித்தார். பின் திரைப்டத்துறைக்குள் நுழைந்து ஷொச்சிக்கு எனும் பட தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்து உதவி இயக்க்குனராக தொழிலை  பயின்ற   ஓஷியாமா 27ம் வயதில்  A TOWN OF LOVE AND KOPE  என்ற முதல் படத்தை இயக்கினார் 

1968ல் வெளியான DEATH BY HANGING  படம்தான் அவரை உலக சினிமா இயக்குனராக ஜப்பானின் புதிய காற்றாக அவரை அறிமுக படுத்தியது.
கற்பழித்து கொலை செய்யும் ஒரு கொரிய குற்றவாளி இளைஞனுக்கு வழங்கபடும் மரண தண்டனையை பற்றி பேசிய இப்ப்டம் குற்றம் புரியும் மனித மனம் பற்றி அக்கறையுடன் பேசியது. ஒழுக்க மரபுகளுக்கு எதிரான கலக இயக்குனராக இப் படம் அவரை அடையாளம் காட்டியது

தொடர்ந்து  வெளியான DIARY OF A SHINJUKU THIEF  என்ற படம் பிரான்சின் புகழ்பெற்ற திருடரும் எழுத்தாளருமான  ஜெனே வின் THE THIEF S  JOURNAL  அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்துக்கொண்டு வெளியானது .
இப்படியாக அதிகாரத்தை எதிர்க்கும் எதிர் அரசியல் படங்களின் வரிசையில் அவர் இயக்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு படங்கள்

Realm of senses  ( 1976
Merry chrishtmas Lawrence (1983) 

இதில்  Realm of senses  ( 1976)  முழுக்க முழுக்க ஒரு காதலர்களின் பாலியல் உற்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைக்கதை டோக்கியோ நகரின் ஒரு பாலியல் விடுதி அந்த விடுதியில் பணீப்பெண்ணாக வேலைக்கு சேருபவள் சதா அபே .சதா அபெ ஒரு பாலியல் பெண்ணாக இருந்த போதிலும்  தான் வெறும் பண்டமாக துய்க்கபடுவதில் விருப்பமில்லாமல்  அந்த விடுதியில் துப்புரவு  பணிப் பெண்ணாக  வேலைக்கு சேர்கிறாள். அந்த விடுதிக்கு வாடிக்கையாளராக வரும் பணக்காரனான கிச்சிக்கொ இஷிதா   அங்கு வழக்கமாக தான் உறவுகொள்ளும் பெண் இல்லாத காரணத்தால் பணி பெண்னான சதாவை  தன் இச்சைக்கு ஆளாக்கிகொள்கிறான். அந்த உறவு அவர்களுக்குள் முடிவற்ற பந்தத்தை உருவாக்கிவிடுகிறது. இருவருமே ஒருவர் பால் ஒருவர் காந்தமாக ஈர்க்கப்பட்டு பிரிய முடியாத   பித்த நிலைக்குள் விழுகின்றனர். ஒரு நிமிடம் கூட  காதலனை விட்டு பிரியமுடியாத அப்பெண் முழு நேரமும் அவனோடு உறவுகொள்வதில் தீவிரமாக ஈடுபடுகிறாள் .  இருவராலும் ஒருவரை விட்டு இன்னொருவர் பிரிய முடியாத நிலை .இறுதியில் இந்த உளவியல்  ப்ர்சனையிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறாள் இறுதியாக  அவள் அவன் ஆணுறுப்பை வெட்டி கையில் வைத்துகொள்வதன் மூலமாக  இதிலிருந்து பூரணமாக விடுபடுகிறாள்   

1936ல் டோக்கியோ நகரில் நடைபெற்ற உண்மைச்சம்பவமான இக்கதை அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஜப்பானில் உண்டாக்கியது. இவ்வழக்கில் பிற்பாடு நான்கு வருட தண்டனைக்கு பின் அவளை கோர்ட் விடுதலை செய்த போது ஒட்டு மொத்த ஜப்பானும் கொதித்து எழுந்தது. 

ஏற்கனவே ஒழுக்க மீறல்களுக்கு பெயர் போன ஓஷியாமா இந்த கதையை படமாக்க போகிறார் என தெரிந்ததும் சென்சார் உஷாராக்கியது 

படபிடிப்பின் போதே இப்படத்தின்  பிலிம் சுருளை கைப்பற்றிய சென்ஸார் அதிகாரிகள் அடுத்த கட்ட பணிகள் நடைபெறாமல் தடை விதிக்க பிற்பாடு கப்பல் மூலம் நெகட்டிவ் பிரான்சுக்கு அனுப்பப்பட்டு அங்கேதான் முழு படத்தொகுப்பும் இதர வேலைகளும் நடந்து முழு படமும் தயாராகியது

1976ல் நியூயார்க் பிலிம் பெஸ்டிவலில் திரையிட்டவுடன் அமெரிக்க உடனடியாக இப் படம் இனி எங்கும் திரையிடக்கூடாது என உத்தரவிட்டது. அடுத்து ஜெர்மனியிலும் இன்ன பிற நாடுகளிலும் இப் படத்துக்கு கடும் எதிர்ப்புஇப்படம் குறித்து ஜப்பானில் வழக்கு நடைபெற்ற போது நீதிபதி  படத்தின் ஆபாச சித்தரிப்புகள் பற்றி என்ன சொல்கிறிர்கள் என கேட்க

ஆபாசம் என்பது ஒன்றை மறைத்திருக்கும் பொருளை வெளிப்படுத்துவது .. நான் எதையும் மறைக்கவேயில்லை உண்மையைதான் சொல்லியிருக்கிறேன் அதை நீங்கள் தான் ஆபாசம் எனகூறுகிறீர்கள் என்றார்.

சினிமா சங்கங்கள் தவிர வேறு எந்த பொது வெளியி;லும் படத்தை திரையிட ஜப்பான் விதித்த தடை 1990ல் தான் முழுமையாக விலகியது.1978 ல் இப்பட்த்தின் தொடர்ச்சியாக EMPIRE OF PASSIONS  என்ற அடுத்த படத்தையும் இதே பாணியில் வெளியிட்டார். அந்த படத்தின் இரண்டு காதலர்கள் இதே போல கட்டற்ற உறவில் ஈடுபட்டு முடிவில் இருவருமே இறுதியில் மரணத்தை இறுதியாக தழுவிக்கொள்கிறார்கள்   இந்தபடம் 1978ம் ஆண்டு கான் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை இவருக்கு பெற்று தந்த்து.

1983ல் இயக்கிய மேரி கிறிஸ்துமஸ் லாரன்ஸ் வந்த பின் தான் ஓஷியாமா ,  முழுமையான இயக்குனராக ஜப்பானில் அனைவராலும் ஏற்கப்பட்டார்  அதன்பின் தான் அவரது முந்தைய படங்கள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது
புரிந்து கொள்ளப்படாத மனித மனத்தின் இருண்மையும் அதிகார வெறியும் வன்முறையும் முறைமீறிய பாலுறவும்தான் இதிலும் கதைக்களன் .

1942ல் இரண்டாம் உலகப் போரில்  இந்தோனிஷியாவின் ஜாவா காட்டுபகுதியில் ஒரு ராணுவமுகாமில் ஜப்பானிய ராணுவத்தை சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகளுகும் முகாமில் போர்கைதியாக பிடிபட்டிருக்கும் இரண்டு பிரிட்டிஷ் வீர்ர்களுக்குமான  உறவு சிக்கல்களே கதை

இதில் ஜப்பானிய உயர் அதிகாரி வேடத்தில் அப்படத்தின் இசையமைப்பளாரான RIYUCHI SAKAMODO   நடித்தார் சிறந்த இசைக்கான அந்த ஆண்டின் BOFTA  விருது அவருக்கு கிடைத்தது அவருக்கு கீழே பணிபுரியும் இன்னொரு ராணுவசெர்ஜண்ட்  பாத்திரத்திரத்தில் நடித்த்வர் பிற்பாடு உலகன்சினிமாவின் சிறந்த இயக்குனர்களூள் ஒருவராக கருதப்பட்ட  TAKASHI KITANO .
1996ல் இந்த இரு நடிகர்களையும் வைத்து  taboo  என்ற படம் இயக்கி வெளியிட்டார்பக்கவாதம் தொடர்ந்து அவரை தாக்கியதன் காரணமாக இயக்குவதை நிறுத்திக்கொண்டு தீவிரமாக எழுத்து பணியில் இயங்கினார்.

ஆங்கிலத்திலிருந்து ஜப்பானிய மொழிக்கு சில நூல்களை மொழி பெயர்த்தார் . அவற்றில் ஒன்று  Men are from mars ,Women are from venus2013ம் ஆண்டு 80ம் வயதில் நிமோனியா தாக்கி இறந்தார்

2013ம் ஆண்டு சான் செபாஸ்டியன் பிலிம் பெஸ்டிவல் அவரது ஒட்டு மொத்த ப்டங்களையும் திரையிட்டு அவருக்கு சிறப்பை தேடித் தந்தது. 

நன்றி :
பல்சுவை காவியம் இதழ் 2016 

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...