June 26, 2017

சிறுவர் சினிமா, -நாட் ஒன் லெஸ் சீன மொழி திரைப்படம்
1
ஆசியாவில் மிகபெரிய நாடு சீனாதான் தெரியுமில்ல. அந்த  சீனாவில் ஒரு குட்டி கிராமம் அதன் பெயர் ஷிக்குவான் . அந்த குட்டி கிராமத்தில் ஒரு குட்டி பள்ளிக்கூடம். அந்த கிராமத்துல இருக்கிறவங்க எல்லாருமே பரம ஏழைங்க ..அதனால பள்ளிகூடத்துக்கு பசங்களை அனுப்பாம வேலைக்கு அனுப்பறாங்க. அம்பது பேர் படிச்ச அந்த பள்ளிகூடத்துல இப்ப மொத்தம் இருபத்தெட்டுபேர்தான். அந்த பள்ளிகூடத்துக்கு ஒரே டீச்சர் அவங்க பேர் காவோ. இந்த இருபத்தெட்டுபேரையாவது விட்டுடாம பள்ளிகூடத்தை நடத்தனும்னு டீச்சர் காவோ நெனக்கிறாங்க..

2
அப்ப டீச்சர் காவோவுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாம போவுது.  ஊருக்கு போகவேண்டிய நிலைமை . அப்ப தனக்கு பதிலா  புது டீச்சர் மின்சிகிட்ட டீ பத்து நாள் மட்டும் பள்ளிகூடத்தை பத்திரமா பாத்துக்கோ உனக்கு சம்பளம் தர்றேன்னு சொல்லி ஒப்படைக்கிறாங்க. மின்சிக்கு பதிமூணூவயசுதான் ஆவுது கூடவே நான் வர்றவரைக்கும் இருபத்தெட்டு பேர்ல ஒருத்தர்கூட குறையாம  பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு ஒரு உத்த்ரவும் போடறாங்க . இப்ப புது டீச்சர் மின்சிக்கு ஏகப்பட்ட ப்ரச்னை .பசஙக் அவங்களுக்கு அடங்கலை. ஒரே அட்டகாசம்.குழந்தைகளுக்கு பாடம் நடத்துறதை விட அவங்க பள்ளிகூடத்தை விட்டு ஓடிவிடாம பாக்கறதுதான் முழு வேலையா போயிடுச்சி. 

3
அதுல  ஒருபையன் பயங்கர சுட்டி. அவன் பெயர் சாங். அடிக்கடி சாக்பீஸை உடைக்கிறது .பள்ளிகூடத்தைவிட்டு வெளியில ஓடறது.மத்த பசங்களை அடிக்கிறதுன்னு ஒரே அட்டகாசம் . புது டீச்சாரால அவனை கட்டுபடுத்தவே முடியலை. அவனுக்கு தண்டனை கொடுக்கறாங்க. அடுத்த நாள்  அந்த சுட்டிபையன் சாங் பள்ளிகூடத்துக்கு வரலை. டீச்சருக்கு இப்ப பயம் வந்துடுச்சி .

4
சாங் பக்கத்து  நகரத்துல கூலி வேலை செய்ய ஓடி போயிட்டான்னு தகவல் வருது . திரும்பி வர வரைக்கும் ஒரு பையன்கூட குறையக்கூடாதுன்னு பழைய டீச்சர் சொல்லிட்டு போனது டீச்சருக்கு ஞாபகத்துக்கு வந்தது. ஒருவேளை நாம தண்டனை கொடுத்ததாலதான் பையன் வரலையோன்னு பயப்படுறாங்க. பழைய டீச்சர் காவோ திரும்பறதுக்குள்ள  எப்படியாவது நகரத்துலருந்து சாங்கை திரும்ப  கூட்டியாந்து பள்ளிகூடத்துல திரும்ப சேத்துடணும்னு மின்சி டீச்சர் முடிவு செய்யறாங்க .ஆனா அதுக்காக  நகரத்துக்கு தான்   போய்வர பணம் நெறய்ய செலவு ஆவும் எப்படி சமாளிக்கிறதுன்னு மின்சி டீச்சர் யோசிக்கறாங்க.

5
 டீச்சர் படற கஷ்டத்தை பாத்து பசங்க பரிதாப்படறாங்க . சாங் நமக்கு திரும்ப வேணும் எப்படியாவது அவனை கூடிட்டு வாங்கன்னு சொல்றாங்க . இப்ப  பணத்துக்கு ஆளாளுக்கு ஒரு ஐடியா குடுக்கறாங்க. அதன் படி பக்கத்துல இருக்கிற செங்கல் சூளையில நாம் எல்லாரும் சேந்து கைமாத்தி கைமாத்தி செங்கல் சுமந்து இடம் பெயர்த்தா நாம எதிர்பாக்குற  காசு கிடைக்கும்னு ஒரு பொண்ணு ஐடியாகுடுக்கிறா . அதன்படி டீச்சர் எல்லாரையும் கூட்டிட்டு அந்த சூளைக்கு போய் வேலை கேக்கறாங்க .அடுத்த அஞ்சாவது நிமிஷத்துல குழந்தைங்க எல்லாரும் செங்கல்லை கைமாத்தி கொடுத்து இன்னொரு இடத்துல அடுக்கறாங்க . அவங்க எல்லாருக்கும்  நகரத்துல கூலி வேலைக்கு போன  சாங் திரும்ப தங்களோட படிக்க வரணும்னுதான் எண்ணம் . அன்னைக்குமுழுக்க அனைவரும் வேலைசெஞ்சதன் பலனா சூளை முதலாளி சம்பளம் கொடுக்கிறாரு.  கடைசியாடீச்சர் டவுனுக்கு போய்வரதுக்கான காசும் கிடைக்குது.
6
டீச்சர் சாங்கை தேடி நகரத்துக்கு போறாங்க ..ஆனா எங்க தேடியும் அவனை கிடைக்கல .எங்க காசு செலவாயிடுமோன்னு பயந்து சாப்பிடாமா தெரு தெருவா அலையறாங்க . எங்கயுமே சாங் கிடைக்கல .. கடைசியில ஒருத்தர் குடுத்த ஐடியா படி டிவியில காணாம போனவங்க பத்தி சொல்ற நியூஸ்ல சொல்ல்லாம்னு டிவி ஸ்டேஷனுக்கு போறாங்க. ஆனா அங்க வாசல்ல இருக்கிற காவலாளி மின்சியை உள்ள விடமாட்டேன்றான்  . இங்க யேநில்லு கண்ணாடி போட்ட அதிகாரி ஒருத்தர் வருவார் அவர் கிட்ட சொல்லு அவர்தான் அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்னு சொல்றாங்க.

7
 மின்சி யும் ஒருநாள் முழுக்க அங்க போற வர கணாடி போட்ட ந்க்ககிட்டல்லாம் ஓடி போய் கேக்கறாங்க.. ஒருபக்கம் பசி .. இன்னொருபக்கம் தூக்கம் இல்ல அங்கயே ஒரு மூலையில தன்னை மீறி மின்சி தூங்கி வழியறாங்க கடைசியில மறுநாள் காலையில அந்த அதிகாரியை கண்டுபிடிச்சு அவர்கிட்ட சொல்ல அதிகாரி காவலாளியை திட்டுறார். உடனடியா மின்சி டிவியில பேசறதுக்கு ஏற்பாடு செய்யறார் . இப்ப மின்சி டீச்சர் டி வியில பேசற விஷ்யம் நகரம் முழுக்க எல்லாடிவியிலயும் ஒளிபரப்பாவுது.

8
சாங் எங்கடா நீ போன .. உன்னை தேடி நான் இங்க வந்துருக்கேண்டா எப்படியாவது கிராமத்துக்கு வந்துடுடான்னு பேசிற மின்சி தன்னை மீறி அப்படியே அழ அதை பாக்கற பலரும் கண்ன்கலங்கறாங்க .
அதேசமயத்துல வேலைகிடைக்காம பிளாட்பாரத்துல திரிஞ்சிக்கிட்டிருந்த சிறுவன் சாங்கும்  இதை பாக்குறான் .அவனும் அழறான். இருவரும் ஒண்ணா சேருறாங்க கடைசியா ஒரு லாரி முழுக்க பலர் கொடுத்த பரிசு பொருள்களோட மின்சி யும் சாங்கும் ஊர் திரும்பறாங்க .. ஊரே அவங்களை மகிழ்ச்சியா வரவேற்குது .No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...