June 24, 2017

தி வே ஹோம் - சிறுவர் சினிமா
 1
நான் சொல்லப்போற கதை பேரு என்ன தெரியுமா..தி வே ஹோம்.. இதுவும் ஒரு கொரிய மொழி திரைப்ப்டம்  தி வே ஹோம் அப்படின்னா தமிழ்ல என்ன தெரியுமா வீட்டுக்கு போற வழி
யார் வீட்டுக்கு .
.பாட்டி வீட்டுக்கு..
யார் அந்த பாட்டி .
குட்டி பையன் சாங்வூ வோட பாட்டி.
சாங் வூ.யாரு?
அவன் தான் நம்ம படத்தோட கதாநாயகன். அவனுக்கு வயசு எட்டு. பையன் படு சுட்டி. கொரிய தலைநகர் சீயோல்ல வளந்த நல்ல பணக்கார பையன். எப்பவும் வீடியோகெம்ஸ் கையுமாதான் திரிவான். இப்ப அவனுக்கு பரீட்சை முடிஞ்சு பள்ளிக்கூடம் லீவு. வீட்ல இவன் குறும்புத்தனம் தாங்காம அவங்க அம்மா என்ன பண்றாங்க தெரியுமா அவனை ஒரு மலைக்கிராமத்துக்கு கூட்டிக்கிட்டுவராங்க.2
அந்த மலைக்கிராமத்துல ஒரு சின்ன குடிசை வீடு. அதுலதான் சாங்வூ வோட பாட்டி வசிக்கிறாங்க. அந்த வீட்ல சாங்வூவ பாட்டிகூட விட்டுட்டு பள்ளிக்கூடம் திறந்த்தும் வந்து கூட்டிக்கிட்டு போறேன்ன்னு சொல்லி அவங்க அம்மா  மட்டும் தனியா திரும்ப சியோலுக்கு போயிடறாங்க ..இப்ப வீட்ல அந்த வயசான் கூன் விழுந்த 80 வயசு பாட்டியும் நம்ம எட்டுவயசு சாங்வூ இரண்டுபேர் மட்டும்தான்.  சாங்வூ நகரத்து பையன். பிஸா அது இதுன்னு நகரத்துல நல்ல ஸ்டைலா வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனா இந்த கிராம்மோ சுத்த பட்டிக்காடு.எங்க பாத்தாலும்  ஒரே சாணி வாசனை. அவனுக்கு  இந்த அமைதியான கிராமம்  வயசான பாட்டி எதுவுமே சுத்த்மா புடிக்கலை. ஏண்டா இங்க வந்து மாட்டினோம்னு நெனக்கிறான். அதனால பாட்டி எதுனா பேசினாக்கூட பதில் பேச மாட்டெங்கிறான். பாட்டி ஆசையா பேச வந்தா முகத்தை திருப்பிக்கிறான்.பசியெடுத்தா கூட கையில வச்சிருக்கிற பாட்டிலை துறந்து கோக் குடிக்கிறான். இப்படி அந்த குட்டி குடிசை வீட்லயே இரண்டுபேரும் ஒரு பகல்  முழுக்க பேசாம இருக்காங்க.

3
இப்ப ஒரு கரப்பன் பூச்சி சாங்வூ பக்கமா வருது. அதை பாத்து சாங்வூ அலறி அடிச்சு கத்தறான். ஏய் பாட்டி என்ன பாத்துகிட்டு சும்ம கால்லு மாதிரி இருக்க .. என்னை இந்த கரப்பன் பூச்சிகிட்டருந்து காப்பாத்தக்கூடாதா ?”ன்னு கத்தறான். உடனே கண்ணுகூட சரியா  தெரியாத அந்த பாட்டி அந்த கரப்பானை புடிக்கிறாங்க ..சாங்வூ  அந்த கரப்பான் பூச்சியை கொல்ல சொல்லி இப்பவும் கத்தறான்.ஆனா பாட்டி அதை கொல்லாம வெளிய வீசறாங்க . அடுத்த நாள் அவன் விளையாடிக்கிட்டிருந்த வீடியோ கெம்சில பேட்டரி தீந்து போயிடுச்சி.
ஏய் செவிட்டு பாட்டி எனக்கு பேட்டரி வாங்கிததான்னு கேட்டு தொந்தரவு பண்றான்.ஆனா பாட்டி அந்த கிராமத்துல எங்க போயி பாட்டரி வாங்குவா. பாட்டரி இல்லைன்னு சைகையில சொல்றா.. ஆனா சாங்வூ பாடியை திட்டறான். அவளை திட்டி சுவத்துல படம் வரைஞ்சி பழிப்பு காட்டுறான். பீங்கான் பாத்திரத்தை உடைக்கிறான்.
 
4
இப்ப ஒருநாள் சாங்வூவுக்கு கெண்டகி சிக்கன் சாப்பிடுற  ஆசை வருது.. பாட்டிகிட்ட எனக்கு கெண்டகி சிக்கன் வாங்கித்தா ன்னு அடம்பிடிக்கிறான். கெண்டகி சிக்கன் பட்டணத்துல பணக்கார ஓட்டல்ல மட்டுமே கிடைக்கிற ஒரு உணவு .ஆனா அது புரியாத பாட்டி பேராண்டி  ஏதோ ஆசையா கோழிதான் கேக்கறான்னு நெனச்சிகிட்டு கூன் விழுந்த உடம்போட கடைக்கு போயி ஒரு உயிருள்ள கோழியை வாங்கியாந்து  அவன் தூங்கிக்கிட்டிருகிற நேரத்தில் சமைச்சி  அவனை எழுப்புகிறாள்.  கெண்டகி சிக்கனை எதிர்பார்த்திருந்த நம்ம பேராண்டி  சாங்வூவுக்கு  அதிர்ச்சி ஏமாற்றம். ஏய்..  பாட்டி நான் இதையா கேட்டேன் உன்   மூஞ்சி .. கெண்டகிசிக்கந்தான கேட்டேன்னு சொல்லி பாட்டி ஆசையாசெஞ்ச சாப்பட்டு தட்டை தட்டிவிடறான். ஆனா. சரியா பேச்சு வ்ராத  பாட்டி  நெஞ்சில கைவைத்து மூணு முறை சுத்தி  என்னை மன்னிச்சுடுன்னு சொல்றா. ஆனாலும் மனசு ஆறாத சாங்வூ சாப்பிடாம  அப்படியேதூங்கிடுறான். அப்புறமா நைட்  எழுந்து  ரகசியமாய் பாட்டிசமைச்ச சிக்கனை வயிறு முட்ட சாப்பிடுறான். ஆனாலும் அவனுக்கு பாட்டிமேல இருக்குற  கோபம் மட்டும் போகலை.

5
அதுக்கப்புறம் பாட்டி அவனை சந்தைக்கு கூட்டிபோய் தர்பூசணை பழம் வித்து அந்த காசுல அவனுக்கு ஷூ வாங்கி கொடுக்கிறா. ஆனாலும் அவன் பணக்கார மனசு தோற்றத்துல அழுக்கா ஏழையா இருக்கிற பாட்டிகிட்ட பேச விடலை. கிராமத்துல அவனுக்கு விளையாட்டு தோழியும் தோழனும் கிடைக்கிறாங்க.  ஒருநாள் அந்த கிராமத்து பையனை டேய் ஓடு ஓடு உம் பின்னாடி மாடு ஓடி வருதுன்னு  பொய் சொல்லி அவன் அலறி அடிச்சு ஓடறப்போ கைதட்டி சிரிச்சு கேலி பண்றான் .

6

 மறுநாள் அவன் கிராமத்து தோழி அவனை   விளையாடறதுக்கு வீட்டுக்கு கூப்பிடுறா. இவன் அதுக்காக  பாட்டிகிட்ட முடிவெட்டிவிட சொல்றான் .ஆனா பாட்டி  அதிகமா ஒட்ட வெட்டி விடுறாங்க. இதனால பாட்டியை சாங்வூ ரொம்ப திட்டறான். பாட்டி மன்னிப்பு கேக்காறாஙக. அவனுக்கு ஒரு பொட்டலம் பரிசா தராங்க. அதை வாங்கி பையில போட்டுகிட்டும் பாட்டியை சாங்வூ திட்டறான்

7
 .இப்ப அவன் அவனோட தோழி வீட்டுக்கு கிளம்பி போவறான் இப்ப வழியில  உண்மையிலயே சாங்வூவை ஒரு மாடு துரத்துது. அலறிஅடிச்சு அவன் ஓடும்போது  கீழே விழுந்த அவனை  முன்னால இவன் கேலிசெஞ்ச அதே  கிராமத்து பையன் இவனை காப்பத்தறான். ச்சே இவனை யா நாம் கேலிபண்ணீண்ணோம்னு நெனச்சி சாங்வூ வருத்தப்படுறான்.. கீழே விழுந்த சாங்வூ எழுந்திருக்கும் போதுதான் பாக்கெட்டிலிருந்து பாட்டி கொடுத்த பொட்டலம் விழுது. அதில அவன் கெட்ட வீடியோகெம்ஸ்  பாட்டரியும் கொஞ்சம் பணமும் இருக்குது, இப்பதான் சாங்வூவுக்கு நல்ல புத்தி வருது.  அட்டா இத்தனை நல்ல பாட்டியை நாம ரொம்ப திட்டிட்டோமேன்னு பாட்டியை நெனச்சி வருத்தபடுறான் . இந்த நேரத்துல பாட்டி அவனைத்தேடி அங்க வராங்க. பாட்டியை பாத்த்தும் அவனுக்கு அழுகையா வருகுது.பாட்டின்னு கூப்பிட்டு   தெம்பி தேம்பி அழறான் பாட்டி அவன் அடிபட்டதாலத்தான் அழறான்னு நெனச்சி ஆறுதல் சொல்றாங்க அவங்க அம்மா நாளைக்கு வரப்போற லெட்டரையும் காண்பிக்கறாங்க

8

.அன்னைக்கு நைட் பாட்டியை திட்டி தான் போட்ட பட்த்தையெல்லாம் அவனே அழிக்கிறான். மறுநாள் வந்த அவங்க அம்மாகூட பஸ்ல ஏறப்போன சாங்வூவுக்கு பாட்டியை பிரிய மனசில்லை.  .ஓடியாந்து தன்னோட பொம்மை  ஒன்னை பாட்டிக்கு பரிசா கொடுக்கிறான். பாட்டி உனக்கு உடம்பு சரியிலன்னா எனக்கு உடனெ லெட்டர் போடு .. உனக்கு எழுத தெரியலைன்னா கூட பரவால்லை. வெறும் வெள்ளைகாகித்த்தை மட்டுமாவது அனுப்பு நான் உன்னை பாக்க ஓடியாருவென்னு சொல்றான். பஸ் புறப்படுது. பாட்டி தனியா போற .. .    பின்பக்க கண்னாடி வழியா அவளை பாத்து பாத்து கையசைச்சுகிட்டே  போறான்

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...